தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Leo Success Meet: ‘லோகேஷ் அடக்கி வாசிக்க சொன்னான்’ போட்டு உடைத்த ரத்னகுமார்!

Leo Success Meet: ‘லோகேஷ் அடக்கி வாசிக்க சொன்னான்’ போட்டு உடைத்த ரத்னகுமார்!

Nov 01, 2023, 10:05 PM IST

google News
லியா சக்ஸஸ் மீட் நிகழ்ச்சியில் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் தளபதி விஜய்யை புகழ்ந்து தள்ளியுள்ளியுள்ளனர்.
லியா சக்ஸஸ் மீட் நிகழ்ச்சியில் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் தளபதி விஜய்யை புகழ்ந்து தள்ளியுள்ளியுள்ளனர்.

லியா சக்ஸஸ் மீட் நிகழ்ச்சியில் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் தளபதி விஜய்யை புகழ்ந்து தள்ளியுள்ளியுள்ளனர்.

தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் லியோ கடந்த மாதம் 19ஆம் தேதி வெளியானது. ஆக்‌ஷன் த்ரில்லர் படமான லியோ கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் குறை வைக்கவில்லை. ரூ. 600 கோடி வசூலை நெருங்கி கொண்டிருக்கும் லியோ படத்தின் சக்ஸஸ் மீட் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

இதில் படத்தில் இடம்பிடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து விழாவில் லியோ படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் தளபதி விஜய்யை புகழ்ந்து பேசியுள்ளனர்.

விஜய் சார் உடன் வேலை பார்த்தது ஸ்பெஷல் என்று படத்தின் எடிட்டர் பிலோமின் கூறினார்.

இதுகுறித்து கலை இயக்குநர் சதீஷ் குமார் கூறியதாவது:

"தளபதி உடன் இரண்டு படம் வேலை செய்து விட்டேன். படக்குழு மிகப்பெரிய உழைப்புதான் குறித்த தேதியில் படத்தை முடிக்க காரணமாக அமைந்தது" என்றார்.

நடன இயக்குநர் திணேஷ் மாஸ்டர் கூறியதாவது:

"நிறைய சந்தோஷம். விஜய்னாலே ஸ்பெஷல் தான். அவர் ஆடினால் இன்னும் ஸ்பெஷல். அவருடன் பல பாடல்களில் குரூப் டான்சராக வேலை பார்த்து இருக்கிறேன். நான் பதட்டமாக இருக்கும் போது அவர் படப்பிடிப்புக்கு சென்று விடுவேன்.

அவரிடம் சென்று நான் மாஸ்டராக போகிறேன். எனக்கு வாய்ப்பு வேண்டும் என்று கேட்பேன் அன்றிலிருந்து இன்று வரை விஜயிடம், ஒரு துளி கூட மாற்றம் இல்லை.

நான் ரெடி பாடலில் மன்சூர் அண்ணனை ஆட வைக்க கஷ்டமாக இருந்தது. நான் ஒரு ஸ்டெப்பை போட்டு சொல்லிக்கொடுத்து டேக் என்றால் அவர் அங்கு வேறு ஸ்டெப் பை போடுவார்" என்றார்.

பாடலாசிரியர் விஷ்ணு கூறியதாவது:

"இவ்வளவு பெரிய மேடையை, இவ்வளவு பெரிய படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த லோகேஷ் அண்ணனுக்கு நன்றி. விக்ரம் சொல்வார் ஆரம்பிக்கலாங்களா, லியோ நான் ரெடி என்று சொல்வார். அதுதான் LCU" என்றார்

இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது:

நான் பெரிதும் மதிக்கும் லெஜெண்டுகள் புருஸ்லீ, மைக்கேல் ஜாக்சன். நான் கண்ணால் பார்த்த லெஜண்ட் விஜய்.

நான் முதலில் வேலை பார்த்த திரைப்படம் விஜயின் யூத். என்னை இந்த நிகழ்ச்சிக்கு 4 மணிக்கு வர சொன்னார்கள். நான் 4.30 மணிக்கு வந்தேன். ஆனால் விஜய் 2 மணிக்கு வந்தார். அந்த உழைப்புதான் அவரை இந்த இடத்தில் வைத்திருக்கிறது. உழைப்பால் மட்டுமே உயர்ந்தவர். 23 வருடமாக அவரிடம் எந்த மாற்றமும் இல்லை.

25 வருடமாக ரசிகர்களை வசீகரித்து வைத்திருக்கும் அளவுக்கு என்ன காந்தம் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. அதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இதை உண்மையாக சொல்கிறேன்.

விஜய் ஜேம்ஸ் பாண்ட் மாதிரியான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று ஆசை. அவரின் வளர்ச்சியில் லக் என்பது ஒரு துளி கூட இல்லை. முழுக்க முழுக்க அன்பும், உழைப்பும் தான். நான் இந்த மேடையில் நிற்பதை பெருமையாக நினைக்கிறேன்" என்றார்

இயக்குநர் ரத்ன குமார் கூறியதாவது:

"விஜய்க்கு நான் நெஞ்சை அறுத்து கொடுத்து விடுவேன். அந்தளவு எனக்கு அவர் மீது பாசம் இருக்கிறது. பொதுவாக படம் வெளியாகும் முன்னர் படத்தை பற்றி பேசும் போது எனக்கு பயமாக இருக்கும். லோகேஷ் அடக்கி வாசி என்று சொல்வான்.

நான் சினிமாவுக்கு வந்ததற்கான காரணம் விஜய் சாரின் படங்கள் தான். எனக்கு விஜய் சாரின் பர்சனல் வாழ்க்கை பெரிய உத்வேகம் தருவதாக இருந்துள்ளது.

நான் அவரிடம் கற்றுக் கொண்டது எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும் பணிவாக இருக்க வேண்டும் என்பது தான். அவருடன் யார் பேசினாலும் சமமாக நடத்துவார். அவருடன் யாராவது பேச வந்தால் உட்கார்ந்து பேச சேர் எடுத்து வருவார்கள். இல்லை அவர் நின்று பேசுவார்.

எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், பசிக்கு கீழ் வந்துதான் ஆக வேண்டும்.அவருக்கு சில விஷயங்கள் சரியாக அமையும். அப்படி அமைந்ததுதான் மாஸ்டர் படத்தில் வாத்தி ரெய்டு பாடல். ஆம் சரியாக நெய்வேலியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது ரெய்டு வந்தது.

இந்தப் படத்திலும் நான் ரெடி பாடல் அப்படி அமைந்து இருக்கிறது. இந்த நேரத்தில் அது அவருக்கு மிக பொருத்தமாக அமைந்து இருக்கிறது." என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி