தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ar Rahman: இசை நிகழ்ச்சி ரத்து! 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸ்!

AR Rahman: இசை நிகழ்ச்சி ரத்து! 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸ்!

Kathiravan V HT Tamil

Oct 03, 2023, 07:35 PM IST

google News
“தன்மீது காவல்துறையில் புகார் அளித்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க நிர்வாகிகளுக்கு நஷ்ட ஈடு கேட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் இருந்து நோட்டீஸ்”
“தன்மீது காவல்துறையில் புகார் அளித்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க நிர்வாகிகளுக்கு நஷ்ட ஈடு கேட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் இருந்து நோட்டீஸ்”

“தன்மீது காவல்துறையில் புகார் அளித்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க நிர்வாகிகளுக்கு நஷ்ட ஈடு கேட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் இருந்து நோட்டீஸ்”

பண மோசடி செய்ததாக தம் மீது புகார் கூறிய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்திற்கு 10 கோடி நஷ்டஈடு கேட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி அன்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மீது அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.

அதில், கடந்த 2018ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக 29.50 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்போது இருந்த தமிழக அரசு இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி தராத காரணத்தால் இசைநிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஏ.ஆர்.ரகுமானிடம் கொடுத்த முன் பணத்தொகையை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் கேட்ட போது ஏ.ஆர்.ரகுமானின் தரப்பில் இருந்து கொடுத்த முன்பணத்தை காசோலையாக தந்துள்ளனர். ஆனால் அந்த காசோலை வங்கியில் பவுன்ஸ் ஆன காரணத்தால் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க நிர்வாகி செந்தில் என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அதில் ஏ.ஆர்.ரகுமான் அவரது செயலாளர் செந்தில் வேலன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தன்மீது காவல்துறையில் புகார் அளித்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க நிர்வாகிகளுக்கு நஷ்ட ஈடு கேட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் இசை நிகழ்ச்சி

ரத்து செய்யப்பட்டால் முன்பணம் திருப்பி தரப்படாது என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. தமது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை