தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mithran: ‘அந்தப்படத்துக்கு டைரக்டர் நான் இல்ல’- திருச்சிற்றம்பலம் மித்ரன் பகீர்!

Mithran: ‘அந்தப்படத்துக்கு டைரக்டர் நான் இல்ல’- திருச்சிற்றம்பலம் மித்ரன் பகீர்!

Feb 25, 2023, 01:55 PM IST

Mithran R Jawahar: தன்னுடைய பெயரை அரியவன் படக்குழு தவறான நோக்கத்தில் பயன்படுத்துவதாக திருச்சிற்றம்பலம் இயக்குநர் மித்ரன் பேசி இருக்கிறார்
Mithran R Jawahar: தன்னுடைய பெயரை அரியவன் படக்குழு தவறான நோக்கத்தில் பயன்படுத்துவதாக திருச்சிற்றம்பலம் இயக்குநர் மித்ரன் பேசி இருக்கிறார்

Mithran R Jawahar: தன்னுடைய பெயரை அரியவன் படக்குழு தவறான நோக்கத்தில் பயன்படுத்துவதாக திருச்சிற்றம்பலம் இயக்குநர் மித்ரன் பேசி இருக்கிறார்

தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’ ‘ ‘உத்தம புத்திரன்’ 'மீண்டும் ஒரு காதல் கதை’ ‘மதில்’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் மித்ரன் R ஜவஹர். இவரது கடைசியாக தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ படத்தை இயக்கி இருந்தார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி இருப்பதாக சொல்லப்படும் திரைப்படம் ‘அரியவன்’.

ட்ரெண்டிங் செய்திகள்

Kamal Haasan: ‘தோனிய அப்படி கூப்பிடுறதுதான் சரியா இருக்கும்; டிக்சனரி புரட்டி புதுபெயர் கொடுத்த கமல்!-இது நல்லா இருக்கே!

Karthigai Deepam: ‘பக்கவாக காய் நகர்த்தும் ஐஸ்வர்யா.. கார்த்தியை தாரை வார்க்கும் தீபா’ - கார்த்திகை தீபம் அப்டேட்!

HBD Actor Murali: இதயம் நிறைந்த நாயகன்..காதல் படங்களுக்கு தனி இலக்கணம் வகுத்த நடிகர் முரளி பிறந்தநாள் இன்று!

29 Years of Murai Maman:'எங்க அக்கா மகளே இந்து’.. கவுண்டமணியின் தரமான காமெடி.. சுந்தர்.சியின் முதல் படமான ’முறைமாமன்’

அரியவன்

எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நவீன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப்படத்தில் கதாநாயகனாக ஈஷான் மற்றும் நாயகியாக ப்ரணாலி ஆகியோர் நடித்திருக்கின்றனர். மார்ச் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்து முடிந்தது.

அரியவன் ஆடியோ வெளியீட்டு விழா!

படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட விழாவில் படத்தின் இயக்குநரான மித்ரன் மட்டும் கலந்து கொள்ளவில்லை. இது கோலிவுட்டில் பேசு பொருளான நிலையில் மித்ரன் டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளத்திற்கு இது குறித்து பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, “ அரியவன் படத்தை டைரக்ட் செய்தது என்னிடம் வேலை பார்த்த உதவி இயக்குநர்;அவனுக்கு உதவியாக சில நாட்கள் கதை விவாதம் மற்றும் ஷூட்டிங்கில் நான் இருந்தேன். 

அவ்வளவுதான் எனக்கும் அந்தப்படத்திற்கும் இடையே உள்ள தொடர்பு. மற்ற படி அந்தப்படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. படத்தின் பப்ளிசிட்டிக்காக அவர்கள் என்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தி உள்ளனர்; இதை மக்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் என்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டேன். அதில் தான் இப்போது என் கவனம் உள்ளது” என்று பேசி இருக்கிறார். மித்ரன் R ஜவஹர் அடுத்ததாக மாதவன் நடிக்க இருக்க கூடிய படத்தை இயக்குவது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி