தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Mlc 2023: வெளுத்து வாங்கிய பூரான்.. கோப்பையை வென்றது எம்ஐ நியூயார்க்!

MLC 2023: வெளுத்து வாங்கிய பூரான்.. கோப்பையை வென்றது எம்ஐ நியூயார்க்!

Karthikeyan S HT Tamil

Jul 31, 2023, 06:32 PM IST

google News
Major League Cricket: அமெரிக்காவில் நடைபெற்ற மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
Major League Cricket: அமெரிக்காவில் நடைபெற்ற மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

Major League Cricket: அமெரிக்காவில் நடைபெற்ற மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

அமெரிக்காவில் எம்எல்சி எனப்படும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த சீசனில் ஐபிஎல்லில் பங்கேற்கும் சென்னை, மும்பை, கொல்கத்தா அணிகள் முறையே டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் (TSK), மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் (MI New York), லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் (ALKR) என்ற பெயரில் பங்கேற்றன.

இந்தத் தொடரின் பைனல் சியாட்டில் நேற்று (ஜூலை 30) நடந்தது. இதில் சியாட்டில் ஓர்காசிம் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பூரான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஓர்காசிம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிகாக் 87 ரன்கள் விளாசி இருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் டிரெண்ட் பௌல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய எம்.ஐ நியூயார்க் அணி 16 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 184 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மும்பை அணியின் கேப்டன் பூரான் 55 பந்துகளில் 137 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 10 பவுண்டரி, 13 சிக்ஸர்கள் இதில் அடங்கும். இதன் மூலம் மும்பை அணி மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் கோப்பையை வென்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி