Dhanush Case : தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா வழக்கு; நீதிபதி அதிரடி தீர்ப்பு!
Jul 11, 2023, 05:51 PM IST
‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் வரும்போது, எச்சரிக்கை வாசகங்கள் உரிய முறையில் இடம்பெறவில்லை என தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் எச்சரிக்கை வாசகங்கள் உரிய முறையில் இடம்பெறவில்லை என பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
2014ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் வரும்போது, எச்சரிக்கை வாசகங்கள் உரிய முறையில் இடம்பெறவில்லை என தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் தனுஷ், நடிகை அமலா பால் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் 'வேலையில்லா பட்டதாரி'. இந்த படத்தை வொண்டர்பார் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக நடிகர் தனுசும், அவரது மனைவி ஐஸ்வர்யாவும் உள்ளனர். 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது.
அப்போது புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்ற அறிவிப்பு அந்த காட்சியில் இடம்பெறவில்லை. இதையடுத்து நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோருக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-வது கோர்ட்டில் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துதுறை இயக்குனர் டாக்டர் வி.கே.பழனி வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நடிகர் தனுஷ், தயாரிப்பு நிறுவனம் வுண்டர்பார், தயாரிப்பாளர் ஐஷ்வர்யா ரஜினிகாந்துக்கு எதிராக பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்