தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  74 Years Of Marutha Nattu Ilavarasi: கலைஞர் கருணாநிதி வசனத்தில் எம்ஜிஆருக்கு ஸ்டார் அந்தஸ்தை தந்த படம்

74 Years of Marutha Nattu Ilavarasi: கலைஞர் கருணாநிதி வசனத்தில் எம்ஜிஆருக்கு ஸ்டார் அந்தஸ்தை தந்த படம்

Apr 02, 2024, 05:15 AM IST

google News
கலைஞர் கருணாநிதி - புரட்சி தலைவர் எம்ஜிஆர் இணைந்து பணியாற்றி மாபெரும் வெற்றியை பெற்ற படங்களில் ஒன்றாக மருதநாட்டு இளவரசி உள்ளது. இந்த படத்தில் தான் வி.என். ஜானகியும் முதல் முறையாக எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்தார்.
கலைஞர் கருணாநிதி - புரட்சி தலைவர் எம்ஜிஆர் இணைந்து பணியாற்றி மாபெரும் வெற்றியை பெற்ற படங்களில் ஒன்றாக மருதநாட்டு இளவரசி உள்ளது. இந்த படத்தில் தான் வி.என். ஜானகியும் முதல் முறையாக எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்தார்.

கலைஞர் கருணாநிதி - புரட்சி தலைவர் எம்ஜிஆர் இணைந்து பணியாற்றி மாபெரும் வெற்றியை பெற்ற படங்களில் ஒன்றாக மருதநாட்டு இளவரசி உள்ளது. இந்த படத்தில் தான் வி.என். ஜானகியும் முதல் முறையாக எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்தார்.

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் முன்னணி ஹீரோவாக ஆக்கிய முக்கிய படங்களில் ஒன்றாக மருதநாட்டு இளவரசி உள்ளது. கலைஞர் கருணாநிதி கதை வசனம் எழுதிய இந்த படத்தை ஏ. காசிலிங்கம் இயக்கியிருப்பார். இந்த படத்தில்தான் வி.என். ஜானகி முதல் முறையாக எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

எம்ஜிஆர் சகோதரர் எம்.ஜி. சக்கரபாணி, பி.எஸ். வீரப்பா, சி.கே. சரஸ்வதி பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். பிளாக் அண்ட் ஒயிட் படமான இது மன்னர் காலத்து கதையமைத்துடன் அமைந்திருக்கும்.

இளவரசியுடன் காதல்

ராணியை கொலை செய்யு சூழ்ச்சிக்கு பின்னர் அவருக்கு மகனாக பிறக்கிறார் எம்ஜிஆர். அவர் வளர்ந்த பின்னர் ஹீரோயினான வி.என். ஜானகியை இளவரசி என்று தெரியாமலேயே காதலிக்கிறார். ஒருகட்டத்தில் அவர் இளவரசி என்பது எம்ஜிஆருக்கு தெரியவர, பிரச்னைகளும் தொடர்கிறது. இறுதியில் இளவரசியை எம்ஜிஆர் கரம் பிடித்தாரா இல்லையா என்பது தான் படத்தின் கதை.

இந்த படத்தில் எம்ஜிஆர் பங்க் தலைமுடியுடன், மெல்லிய மீசையுடனான லுக்கில் தோன்றியிருப்பார்.

கதை திருட்டு சர்ச்சை

இந்த படத்துக்கு பி.கே. முத்துசாமி என்பவர் கதை எழுதி கருணாதியிடம் கொடுத்த நிலையில், அதை அவரது அனுபதியின்றி பயன்படுத்தி இந்த படத்தை உருவாக்கியதாகவும் குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டது. இருப்பினும் கலைஞர் கருணாநிதியின் கைவண்ணத்தில் படத்தின் உரையாடல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

டிராப் செய்யப்பட்டு தொடங்கிய படம்

முதலில் இந்த படம் டி.வி. சாரியை வைத்து தொடங்கப்பட்ட நிலையில் பின்னர் கைவிடப்பட்டது. பின்னர் எம்ஜிஆரின் முயற்சியால் இந்த படம் மீண்டும் தொடங்கிய நிலையில், கருணாநிதி படத்துக்கான கதை, வசனம் எழுத கமிட் செய்யப்பட்டார். ஏற்கனவே எடுக்கப்பட்ட சில காட்சிகளுக்கு ஏற்ப கதையை மாற்றியமைத்தாராம் கலைஞர் கருணாநிதி.

அந்த காலகட்டத்தில் மன்னர் கால திரைப்படங்கள் தான் ட்ரெண்டிங்கில் இருந்து வந்துள்ளது. இதில் தூக்கலான வசனங்கள், குறும்புத்தனமான காதல் காட்சிகளி, அசத்தலான சண்டை காட்சிகள் என ஜனரஞ்சகமான படமாக மருதநாட்டு இளவரசி படத்தை உருவாக்கியிருந்தனர்.

படத்துக்கு எம்.எஸ். ஞானமணி இசையமைத்திருப்பார். படத்தின் பாடல்கள் அந்த காலகட்டத்தில் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. நதியே நீராழி என்ற பாடல் சிறந்த மெலடி பாடலாக அமைந்திருப்பதுடன் அது படமாக்கப்பட்ட விதமும் ரசிகர்களை கவரும் விதமாக இருந்தது.

திருப்புமுனை தந்த படம்

எம்ஜிஆர் திரை வாழ்க்கையில் அவருக்கு திருப்புமுனை தந்த படமாக மருதநாட்டு இளவரசி இருந்தது. 125 நாள்களுக்கு மேல் ஓடிய இந்த படத்தின் வெற்றியால் எம்ஜிஆர், வி.என். ஜானகி என இருவரும் ஸ்டார் அந்தஸ்து பெற்றதுடன் அடுத்தடுத்து புதிய படங்களில் கமிட்டானார்கள்.

இந்த படத்துக்கு பின்னர் சில படங்களில் ஜானகியுடன் இணைந்த நடித்த எம்ஜிஆர், பின்னாளில் அவரை திருமணமும் செய்து கொண்டார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக இருந்த மு. கருணாநிதி, எம்ஜிஆர், ஜானகி என மூன்று பேர் நடித்த படம் என்ற சிறப்பை பெற்ற மருதநாட்டு இளவரசி படம் வெளியாகி இன்றுடன் 74 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி