30 Years of Thiruda Thiruda: இயக்குநர் மணிரத்னத்தின் தீர்க்கதரிசனம்! Special Effectsக்காக தேசிய விருது வென்ற தமிழ் படம்
Nov 13, 2023, 06:50 AM IST
காதல், ஆக்ஷன், கண்டெயனரில் லாரியில் பண கடத்தல், ரயிலில் பைட் என முற்றிலுமாக சிறந்த பொழுதுபோக்கு பேக்கேஜ் படமாக திருடா திருடா படத்தை உருவாக்கியிருப்பார் மணிரத்னம். டிஜிட்டல் கார்டு என இப்போது புழக்கத்தில் இருக்கும் விஷயத்தை 30 ஆண்டுகளுக்கு முன்பே காட்டி சர்ப்ரைஸ் கொடுத்திருப்பார்
மணிரத்னம் இயக்கத்தில் கேபர் ஜானரில் வெளியான தமிழ் படமாக திருடா திருடா, சேஸிங், ஆக்ஷன், காதல், காமெடி என விறுவிறுப்பாக பயணிக்கும் திரைக்கதையுடன் உருவான படமாக அமைந்திருக்கும். பிரசாந்த், ஆனந்த், ஹீரோ, அனு அகர்வால், எஸ்பி பாலசுப்பிரமணியம், சலீம் கெளஸ் ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். படம் முழுவதும் இவர்களை சுற்றியே திரைக்கதை இருக்கும்.
ரிசர்வ் பேங்கில் அச்சடிக்கப்பட்டு கண்டெய்னரில் அனுப்பி வைக்கப்படும் பணத்தை சலீம் கெளஸ் கும்பல் கடத்துகிறது. இந்த கண்டெய்னர் லாரி லோக்கல் திருடன்களான பிரசாந்த், ஆனந்திடம் சிக்க கொள்கிறது. இவர்களுடன் ஹீரோ, அனு அகர்வாலும் இணைகிறார்கள். பணத்தை மீட்க முயற்சிக்கும் சிபிஐ, திருடி செல்ல முயற்சிக்கும் சலீம் கெளஸ் கேங் இடையே நடக்கும் கேட் மற்றும் ரேட் ரேஸ் தான் படத்தின் ஒன்லைன்.
இந்த படத்துக்கு தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரான ராம் கோபால் வர்மாவும், மணிரத்னத்துடன் இணைந்து திரைக்கதை எழுதியிருப்பார். படத்துக்கு வசனம் மறைந்த எழுத்தாளர் சுஜாதா என்பது மற்றொரு ஹைலட். சுஹாசினி மணிரத்னமும் படத்தின் மற்றொரு வசனகர்த்தாவாக பணியாற்றியிருப்பார்.
படத்தில் பெரும்பாலான காட்சிகள் பிரசாந்த், ஆனந்த் மற்றும் ஹீரா, அனு அகர்வால் ஆகிய தப்பித்து ஓடுவது போன்றே சீரியஸான காட்சி அமைப்புகள் இருந்தாலும், ஒரு விதான ப்ளாக் ஹுயூமருடன் பார்வையாளர்களை ரசிக்க வைக்கும் விதமாக இருக்கும். அத்துடன் படத்தின் மேக்கிங்கில் கொட்டப்பட்டிருக்கும் உழைப்பு பாடல் காட்சியின் பிரமாண்டம், சீட் நுனிக்கு வரவைக்கும் பரபர சேஸிங் காட்சிகளில் தெளிவாக தெரியும்.
கண்டெய்னரில் பணம் கடத்தல், ஏடிஎம் போன்ற நவீன வசதிகள் இல்லாத காலத்தில் பணத்தை எடுப்பதற்கு டிஜிட்டல் கார்டு என இந்த நூற்றாண்டுடன் தொடர்புடைய விஷயத்தை அப்போதே தீர்க்க தரிசனமாக தனது திரைக்கதையில் சொல்லியிருப்பார் இயக்குநர் மணிரத்னம். படம் நடைபெறும் களம் தமிழ்நாட்டை சேர்ந்த கிராமமாக காட்ட்யிருப்பார்கள். இதனால் கிராமத்து மனிதர்களின் வெகுளித்தனத்தையும் திரைக்கதையுடன் இணைத்து காமெடி கலாட்டா செய்திருப்பார்கள்.
வைரமுத்து பாடல் வரிகளில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. இதற்கு மற்றொரு காரணமாக மணிரத்னம், ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் கூட்டணி அழகாக பிக்சரைஸ் செய்ததில் காட்டிய மெனகெடலையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
முதல் பாடலாக வரும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், அப்புறம் பேலஸ் வளாகத்தில் அனு அகர்வாலின் அசத்தலான நடனத்தில் வரும் சந்திரலேகா, கிராமத்து திருவிழா பின்னணியில் வரும் வீரபாண் கோட்டையிலேயே, கேபேல்லா பாணி இசையில் இன்ஸ்ட்ரூமெண்ட் இல்லாமல் வரும் ராசாத்தி பாடல் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
கிராபிக்ஸ், விசுவல் எபெக்ட்ஸ் போன்ற வசதிகள் வளர்ந்து வந்த அந்த காலத்தில் அதுபோன்ற தத்ரூபமாக காட்சிகளை அமைத்து அப்பலாஸ் வாங்கிய திருடா திருடா படத்துக்கு சிறந்த விசுவல் எபெக்ட்ஸ்கான் தேசிய விருது கிடைத்தது. அத்துடன் சிறந்த கோரியோகிராபிக்கான இன்னொரு தேசிய விருதும் கிடைத்தது. தீபாவளி வெளியீடாக வந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் போதிய வசூலை பெற்றது. ஆக்ஷன், த்ரில்லர் ஜானரில் மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ் படமாக அமைந்த திருடா திருடா படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்