Manimegalai Vs Priyanka: பா.. என்ன ஒரு பாகுபாடு - இருவரில் ஒரு எபிசோடுக்கு அதிகமாக சம்பளம் வாங்குவது யார்?
Sep 22, 2024, 08:06 AM IST
Manimegalai Vs Priyanka: விஜய் டிவியில் பணியாற்றும் தொகுப்பாளர்கள் பிரியங்கா மற்றும் மணிமேகலை தொடர்பான சம்பள விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
Manimegalai Vs Priyanka: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை - பிரியங்காவுக்கு இடையேயான மோதல் பூதாகரமாக வெடித்து இருக்கிறது. இதில் பலரும் தங்கள் கருத்துகளை சொல்லி இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் சென்று கொண்டு இருக்க தொகுப்பாளர்கள் பிரியங்கா மற்றும் மணிமேகலை தொடர்பான சம்பள விவரம் தெரியவந்து இருக்கிறது.
தொகுப்பாளர்களின் சம்பளம்
இந்த நிலையில் விஜய் டிவியில் பணியாற்றும் தொகுப்பாளர்கள் பிரியங்கா மற்றும் மணிமேகலை தொடர்பான சம்பள விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதன் படி, பிரியங்காவிற்கு ஒரு எபிசோடிற்கு இரண்டரை லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அதே போல் மணிமேகலைக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை சம்பளம் கொடுப்பதாக பேசப்படுகிறது. இருப்பினும் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
மணிமேகலை பேச்சு
முன்னதாக நிகழ்ச்சியில் இருந்து விலகியது தொடர்பாக மணிமேகலை பேசுகையில், “ மிகுந்த நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் நான் எப்பொழுதும் எனது 100% முயற்சிகளையும் கடின உழைப்பையும் குக் வித் கோமாளிக்கு கொடுத்திருக்கிறேன். 2019 ஆம் ஆண்டு, நவம்பரில் இருந்து குக் வித் கோமாளி என்னும் ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது இருந்தே என் உழைப்பைத் தந்திருக்கிறேன்.
சுயமரியாதை முக்கியம்
ஆனால், சுய மரியாதையைவிட முக்கியமானது எதுவுமில்லை! என் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நான் அதைக் கண்டிப்பாகப் பின்பற்றுகிறேன். புகழ், பணம், தொழில், வாய்ப்புகள் அல்லது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. சுய மரியாதை என்று வரும்போது எல்லாமே இரண்டாம் பட்சம்தான். அதனால் நான் குக் வித் கோமாளி சீசன் 5ல் இருந்து விலகுகிறேன்.
இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்தினார். குறிப்பாக தொகுப்பாளராக இருக்கும் ஒருவர் இந்த குக் வித் கோமாளி சீசன் 5ன் படி, நிகழ்ச்சியின் சமையல்காரராக செயல்பட வேண்டும். ஆனால், அவர் அதை அடிக்கடி மறந்து விடுகிறார். வேண்டுமென்றே என்னை வேலையைச் செய்யவிடாமல் தடுத்து, எனது ஆங்கரிங் என்னும் நெறியாள்கையில் குறுக்கிடுகிறார்.
நமது உரிமைகளைக்கேட்பதும், கவலையை எழுப்புவதும்கூட இந்த குக் வித் கோமாளி சீசன் 5ல் குற்றமாகிவிடும். ஆனால், என் மனது எப்போதும் எது சரியானதோ அதற்காக குரல் எழுப்பும். நான் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. பல எதிர்மறை மற்றும் சிலரின் ஆதிக்கம் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் அசல் தன்மையை மறைக்கிறது. இது நான் முன்பு வேலை செய்து மகிழ்ந்த அதே குக் வித் கோமாளி நிகழ்ச்சி அல்ல. எனவே, நான் இனி அதன் பகுதியாக தொடரமாட்டேன் " எனக் குறிப்பிட்டார்
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்