தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Cook With Comali: இது என்ன கொடுமை.. குக் வித் கோமாளியில் மணிமேகலைக்கு நடந்த பெரிய அவமானம்!

Cook With Comali: இது என்ன கொடுமை.. குக் வித் கோமாளியில் மணிமேகலைக்கு நடந்த பெரிய அவமானம்!

Aarthi Balaji HT Tamil

Jun 01, 2024, 11:52 AM IST

google News
Cook With Comali: குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டி.ஆர்.பி முன்பு போல் இல்லை. இதனால் தொலைக்காட்சி புதிய யுக்தியை கையில் எடுத்து உள்ளது.
Cook With Comali: குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டி.ஆர்.பி முன்பு போல் இல்லை. இதனால் தொலைக்காட்சி புதிய யுக்தியை கையில் எடுத்து உள்ளது.

Cook With Comali: குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டி.ஆர்.பி முன்பு போல் இல்லை. இதனால் தொலைக்காட்சி புதிய யுக்தியை கையில் எடுத்து உள்ளது.

Cook With Comali: விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அறிமுகமே தேவையில்லை. அதில் நடுவர்களாக இருந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் சமையல் கலைஞர்களான தாமுவும், வெங்கடேஷ் பட்டும்.

சமையல் கலையை மையமாக வைத்து நகைச்சுவை மற்றும் கேளிக்கை நிறைந்த நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோ, 'குக் வித் கோமாளி'.

குக் வித் கோமாளி

இந்த நிகழ்ச்சி 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது அதன் 5 ஆவது சீசனில் உள்ளது. முதல் சீசனில் இருந்தே நிகழ்ச்சியின் நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தமு இருந்தனர். 

ஐந்தாவது சீசனில் சில மாற்றங்களுடன், வெங்கடேஷ் பட் சன் டிவிக்கு நுழைந்தார். ஆனால் செப் தாமு தற்போது ஐந்தாவது சீசனில் நடுவராக இருக்கிறார்.

இந்த முறை எத்தனை போட்டியாளர்

இந்த முறை, அக்ஷய் கமல், ஷாலின் சோயா, திவ்யா துரைசாமி, இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா , சூப்பர் சிங்கர் பூஜா, VTV கணேஷ், உணவு விமர்சகர் இர்ஃபான், பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா, சீரியல் நடிகர் வசந்த் வாஷி, தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே ஆகியோர் போட்டியாளர்களாக உள்ளனர் .

ராம், ஷப்னம், அன்சிதா, கேபி ஒய் வினோத் ஆகியோர் புதிய கோமாளிகளாக இணைந்துள்ளனர். முதல் வாரத்தில், சுஜிதா வாரத்தின் முதல் செப் ஆஃப் தி வீக் பெற்றார். அவருக்கு பிறகு இரண்டாவது வாரத்தில், வசந்த் வாசி மற்றும் அக்‌ஷய் கமல் இருவரும் வாரத்தின் செப் ஆஃப் தி வீக் பெற்றார்.

சம்பள விவரம்

சுஜிதா- 18 ஆயிரம் ரூபாய்

பிரியங்கா- 18 ஆயிரம் ரூபாய்

இர்பான்- 15 ஆயிரம் ரூபாய்

விடிவி கணேஷ்- 15 ஆயிரம் ரூபாய்

திவ்யா துரைசாமி - 12 ஆயிரம் ரூபாய்

ஷாலின் சோயா - 10 ஆயிரம் ரூபாய்

அக்ஷய் கமல் - 10 ஆயிரம் ரூபாய்

ஸ்ரீகாந்த் தேவா - 10 ஆயிரம் ரூபாய்

வசந்த் - 10 ஆயிரம் ரூபாய்

அவமானப்படுத்தப்பட்ட மணிமேகலை

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டி.ஆர்.பி முன்பு போல் இல்லை. இதனால் தொலைக்காட்சி புதிய யுக்தியை கையில் எடுத்து உள்ளது. ஏற்கனவே கோமாளியாக இருந்த மணிமேகலைக்கு, தொகுப்பாளினி பட்டம் கொடுத்து இருந்தது. 

ஆனால் இப்போது டி.ஆர்.பி காரணமாக மீண்டும் தொகுப்பாளினி பட்டத்தை வாங்கிவிட்டு, மணிமேகலைக்கு கோமாளி வேடம் கொடுத்து இருக்கிறார்கள். போட்டியை சமாளிக்க விஜய் டிவி எடுத்த முடிவை அனைவரும் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி