தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mahesh Babu Mother Passes Away: மகேஷ் பாபு தாயார் காலமானார்

Mahesh Babu Mother Passes Away: மகேஷ் பாபு தாயார் காலமானார்

Aarthi V HT Tamil

Sep 28, 2022, 10:14 AM IST

மகேஷ் பாபுவின் தாயார் இந்திராதேவி மரணமடைந்த சம்பவம் டோலிவுட்டில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகேஷ் பாபுவின் தாயார் இந்திராதேவி மரணமடைந்த சம்பவம் டோலிவுட்டில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மகேஷ் பாபுவின் தாயார் இந்திராதேவி மரணமடைந்த சம்பவம் டோலிவுட்டில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

டோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் மகேஷ் பாபு.  இவரது தாயார் இந்திரா தேவி (70) கடந்த சில காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.  இதற்காக அவர்  ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் இந்திரா தேவி புதன்கிழமை (செப் 28) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணச் செய்தி கேட்டு நெருங்கிய நண்பர்கள், நலம் விரும்பிகள், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது மறைவுக்கு டோலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவரது உடல் ஹைதராபாத்தில் உள்ள பத்மாலயா ஸ்டுடியோவில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை பார்வைக்காக வைக்கப்படுகிறது. பின்னர், அவரது இறுதி சடங்குகள் மகா பிரஸ்தானத்தில் நடைபெறவுள்ளது.

சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் முதல் மனைவி இந்திரா தேவி. இருவருக்கும் ரமேஷ் பாபு, மகேஷ் பாபு, பத்மாவதி, மஞ்சுளா, பிரியதர்ஷி என ஐந்து குழந்தைகள் உள்ளனர். 

இவர்களில் டோலிவுட் ஹீரோக்களாக ரமேஷ் பாபு, மகேஷ் பாபுவுக்கு அங்கீகாரம் கிடைத்தது.

இந்திரா தேவியின் மூத்த மகன் ரமேஷ் பாபு, ஜனவரி மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரும் அதே ஆண்டு உயிரிழந்துவிட்டதால் மகேஷ் பாபு குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை