Mahesh Babu Mother: மறைந்த தாய் புகைப்படத்தை பகிர்ந்த மகேஷ் பாபு
Sep 28, 2022, 07:53 PM IST
நடிகர் மகேஷ் பாபு தன் தாய் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
டோலிவுட் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் முதல் மனைவியும், மகேஷ் பாபுவின் தாயாருமானவர் இந்திரா தேவி. இவர் இன்று புதன்கிழமை (செப்டம்பர் 28) காலை காலமானார். அவரது மறைவு டோலிவுட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இறுதிச் சடங்கிற்குப் பிறகு, மகேஷ் பாபு தனது தாயை நினைவுகூரும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
தொடர்ந்து கிருஷ்ணாவின் மகளும் மகேஷ் பாபுவின் மூத்த சகோதரியுமான மஞ்சுளாவும் அம்மா குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், "அன்புள்ள அம்மா, நீயே என் முதல் ஆசான். என் அடித்தளம், என் இதயம். உனது அன்பு தான் என் பாதுகாப்பு. என் வாழ்வில் மிகவும் செல்வாக்கு செலுத்துபவள் நீ. என் அம்மா தன் வாழ்க்கையில் கொடுப்பதைத் தவிர எதையும் கேட்டதில்லை.
ஒரு நாள் கூட என் வாழ்வில் இல்லாமல் இருந்தது இல்லை. அவள் இல்லாமல் இருப்பது கஷ்டமாக இருக்கிறது" என குறிப்பிட்டு உள்ளார்.
இந்திரா, கிருஷ்ணா தம்பதிக்கு ஐந்து குழந்தைகள். மகேஷ் பாபு, மஞ்சுளா, ரமேஷ் பாபு, பிரியதர்ஷினி மற்றும் பத்மாவதி ஆகியோர் உள்ளனர். இவர்களில் ரமேஷ் பாபு இந்த ஆண்டு ஜனவரி மாதம் இறந்தார். நடிகர் சுதிர் பாபுவின் மனைவி பத்மாவதி.
டாபிக்ஸ்