தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vikram Sukumaran: மதயானைக்கூட்டத்தில் ஜாதியை தூக்கிப்பிடித்தேனா?.. 7 வருடம் காலி.. - மனம் நொந்த இயக்குநர் விக்ரம்!

Vikram Sukumaran: மதயானைக்கூட்டத்தில் ஜாதியை தூக்கிப்பிடித்தேனா?.. 7 வருடம் காலி.. - மனம் நொந்த இயக்குநர் விக்ரம்!

Apr 20, 2023, 06:30 AM IST

google News
மதயானைக்கூட்டம் திரைப்படத்தின் தோல்வியால் தான் ஏழு ஆண்டுகள் படமில்லாமல் சும்மா உட்கார வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டதாக இயக்குநர் சுகுமாறன் வேதனை தெரிவித்து இருக்கிறார்
மதயானைக்கூட்டம் திரைப்படத்தின் தோல்வியால் தான் ஏழு ஆண்டுகள் படமில்லாமல் சும்மா உட்கார வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டதாக இயக்குநர் சுகுமாறன் வேதனை தெரிவித்து இருக்கிறார்

மதயானைக்கூட்டம் திரைப்படத்தின் தோல்வியால் தான் ஏழு ஆண்டுகள் படமில்லாமல் சும்மா உட்கார வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டதாக இயக்குநர் சுகுமாறன் வேதனை தெரிவித்து இருக்கிறார்

தென் தமிழக மக்களின் வாழ்வியலை மதயானைக்கூட்டம் திரைப்படம் மூலமாக மிக அழுத்தமாக திரையில் வடித்தவர் இயக்குநர் சுகுமாறன். ஆனால் அந்த திரைப்படம் ஒரு குறிப்பிட்ட ஜாதியை தூக்கிப்பிடித்ததாக கூறி பல்வேறு வகையாக விமர்சனங்கள் வர, அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 

முதல் படத்தின் தோல்வியால் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக படமில்லாமல் உட்கார்ந்து இருந்த சுகுமாறன் தற்போது இராவணக்கோட்டம் திரைப்படம் மூலமாக மீண்டு என்ட்ரி ஆகியிருக்கிறார்.

இந்த நிலையில் அண்மையில் கொடுத்த நேர்காணல் ஒன்றில் முதல் படத்தின் தோல்வி குறித்து அவர் பகிர்ந்ததாவது, “ மதயானை படம் வெளியான போது நான் ஜாதியை தூக்கிப் பிடித்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டார்கள். இந்த திரைப்படத்திற்கு எனக்கு பெரிதாக பாசிட்டிவான விமர்சனங்கள் வரவில்லை. 

அந்த மாதிரியான பாசிட்டிவான விமர்சனங்கள் வந்திருந்தால் எனக்கு உடனே படம் கிடைத்திருக்கும். அடுத்த லெவலுக்கு சென்று இருப்பேன். ஆனால் எனக்கு அடுத்தப்படம் கிடைப்பதற்கே ஆறு ஏழு வருடங்கள் ஆகிவிட்டன. மதயானைக் கூட்டத்தை ஜாதி படம் என்று முத்திரை குத்தி விட்டார்கள். 

மாறாக, அந்தப் படத்தை பெரிதாக புரமோட்டும் செய்யவில்லை. ஏழு வருடங்கள் அதனால் நாள் சும்மாவே இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன். அதை ஒரு அண்டர் ரேட்டர் மூவி என்று சொல்லிவிட்டார்கள். 

கமர்சியல் ஆகவும் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தால் தானே அடுத்த வாய்ப்பு கிடைக்கும். ஒருவர் எவ்வளவு தான் காவியம் போல படம் எடுத்தாலும் அது கமர்சியலாக ஹிட் அடித்தால் மட்டுமே அந்த இயக்குனருக்கு அடுத்த படம் கிடைக்கும். அதுதான் சினிமா நிலவரம். அந்த கமர்சியல் வெற்றி என்பது ஹீரோவை பெரிதாக பாதிக்கவில்லை. இயக்குநரைத்தான் பாதிக்கிறது. அது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம் தான். ஒரு இயக்குநருக்கு முதல் படம் சரியாக அமையவில்லை என்றால் அவருடைய வாழ்க்கையே காலி.” என்று பேசினார். 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை