தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நாட்டு நாட்டு பாடலில் ஒளிந்திருக்கும் பல உணர்ச்சிகள் - மதன் கார்க்கி பாராட்டு

நாட்டு நாட்டு பாடலில் ஒளிந்திருக்கும் பல உணர்ச்சிகள் - மதன் கார்க்கி பாராட்டு

Mar 13, 2023, 03:33 PM IST

google News
Madhan Karky Praises Nattu Nattu Song: ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைத்த கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் மற்றும் ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு, அதன் தமிழ் பதிப்பு பாடலை எழுதிய பாடலாசிரியர் மதன்கார்க்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.
Madhan Karky Praises Nattu Nattu Song: ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைத்த கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் மற்றும் ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு, அதன் தமிழ் பதிப்பு பாடலை எழுதிய பாடலாசிரியர் மதன்கார்க்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Madhan Karky Praises Nattu Nattu Song: ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைத்த கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் மற்றும் ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு, அதன் தமிழ் பதிப்பு பாடலை எழுதிய பாடலாசிரியர் மதன்கார்க்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.

95வது ஆஸ்கர் விருதில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில், தெலுங்கு சினிமாவான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பிடித்த நாட்டு நாட்டு பாடல் விருதை வென்று வரலாற்று சாதனை புரிந்தது.

இதன் மூலம் ஆஸ்கர் விருதை வென்ற முதல் தெலுங்கு சினிமா என்ற பெருமையை பெற்றிருப்பதோடு, இந்தியாவில் தயார் செய்யப்பட்டு, ஆஸ்கர் விருதை பெற்ற முதல் படம் என்ற சாதனையும் புரிந்துள்ளது.

தெலுங்கு படமாக இருந்தாலும் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் ஆர்ஆர்ஆர் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதனால் பான் இந்தியா படமாக ரிலீஸான இந்த படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற நாட்டு நாட்டு பாடலின் தமிழ் பதிப்பை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ளார். இதையடுத்து இந்தப் பாடல் ஆஸ்கர் விருது வெற்றி பெற்றது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அவர், படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

 

"ஆர்ஆர்ஆர் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றதற்கு மகிழ்ச்சி. இந்த பாடலின் தமிழ் பதிப்பை நான் எழுதியிருப்பது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த பாடல் விருது வென்றதற்காக இயக்குநர் ராஜமெளலி, இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பாடலை பாடிய ராகும் மற்றும் கால பைரவா ஆகியோருக்கும், பாடலில் சிறப்பாக நடனமாக உலகம் முழுவதும் எடுத்து சென்ற ராம்சரண், ஜுனியர் என்டிஆர் ஆகியோருக்கும் வாழ்த்துகள். பாடலுக்கு நடனம் அமைத்த பிரேம்க்கு சிறப்பு வாழ்த்துகள்.

இந்த பாடலின் மூல காரணமாக விஜயேந்திர பிரசாத் அமைத்த பாடலுக்கான சூழல் உள்ளது. இது வெறும் பாடலாக மட்டுமில்லாமல், ஒரு போட்டியாகவே அமைந்துள்ளது. பகை, அதை வீழ்த்த வேண்டும் என்ற போட்டி. அதன் உள்ளே நட்பு, காதல், தியாகம் என பல உணர்ச்சிகள் இடம்பெற்றிருக்கும் சின்ன குறும்படமாக நாட்டு நாட்டு பாடலை பார்க்கிறேன்.

இந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது என்பது இத்தனை ஆண்டுகள் இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்த அழகான பாடல்கள் அனைத்துக்கும் சேர்த்து கிடைத்த வெற்றி. தனது படங்களின் மூலமாக திரைப்படங்களின் தரத்தை உயரத்துக்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் இயக்குநர் ராஜமெளலியின் எண்ணத்துக்கு கிடைத்த வெற்றி.

இந்த வெற்றி அனைத்த மொழி கலைஞர்களுக்கும் ஊக்கமாக இருக்கும் என நம்புகிறேன்."

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பிடித்த நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கருக்கு இணையான கோல்டன் குளோப் விருது கிடைத்தது.

இதைத்தொடர்ந்து ஆஸ்கர் விருதுகளில் தனிப்பட்ட முறையில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான போட்டி பிரிவில் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது ஆஸ்கர் விருதையும் வென்று இந்தியர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

கோல்டன் குளோப் விருது வெற்றியாளர்களில் பெரும்பாலோனோர் ஆஸ்கர் விருதையும் வெல்வார்கள் என்ற வரலாறு மீண்டும் தொடர்ந்துள்ளது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி