தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  October Release: எல்லாரும் கொஞ்சம் வழி விடுங்க.. அக்டோபர் முதல் வாரத்தில் வரிசைக்கட்டி நிற்கும் கோலிவுட் மூவிஸ்

October Release: எல்லாரும் கொஞ்சம் வழி விடுங்க.. அக்டோபர் முதல் வாரத்தில் வரிசைக்கட்டி நிற்கும் கோலிவுட் மூவிஸ்

Aarthi Balaji HT Tamil

Sep 29, 2024, 12:37 PM IST

google News
October Release: சீரன் முதல் வேட்டைக்காரி வரை அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி ரிலீஸாக உள்ள தமிழ் படங்கள் பற்றிய விவரத்தை பார்க்கலாம்.
October Release: சீரன் முதல் வேட்டைக்காரி வரை அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி ரிலீஸாக உள்ள தமிழ் படங்கள் பற்றிய விவரத்தை பார்க்கலாம்.

October Release: சீரன் முதல் வேட்டைக்காரி வரை அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி ரிலீஸாக உள்ள தமிழ் படங்கள் பற்றிய விவரத்தை பார்க்கலாம்.

சீரன்

ஜேம்ஸ் கார்த்திக், எம் நியாஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு இருக்கும் படம், சீரன். ராஜேஷின் முன்னாள் உதவியாளர் துரை கே முருகன் இயக்கத்தில், அறிமுக ஜேம்ஸ் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார்.

சமூக ஏற்ற தாழ்வுகளைப் பற்றி பேசும் வணிகரீதியான படமாக உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படம் அக்டோபர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படம் திருவண்ணாமலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகவும், கிராம மக்கள் உள்ளூர் தெய்வத்திடம் எப்படி பிரார்த்தனை செய்கிறார்கள் என்பதே கதையாகும். இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது என தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே பேச்சு, ஒரே முடிவு

புருஸ்லீ ராஜேஷ் நாயகனாக நடித்து இருக்கும் படம், ‘ஒரே பேச்சு, ஒரே முடிவு’. ஸ்கிரீன் லைட் பிலிம்ஸ் தயாரித்த இதில் நாயகியாக ஸ்ரிதா சுஜிதரன், தலைவாசல் விஜய், சம்பத் ராம், மீசை ராஜேந்திரன், ஐ.எம்.விஜயன், கராத்தே ராஜா நடித்து உள்ளனர்.

மலையாள இயக்குநர் வி.ஆர்.எழுதச்சன் இயக்கியுள்ளார். “வாட்ஸ்அப் குரூப்பில் இணையும் நாயகன், அந்த குரூப்பில் தனது பள்ளிப் பருவ காதலி இருப்பதை அறிந்து சந்திக்கச் செல்கிறான். அதனால் ஏற்படும் பிரச்னையே பட கதையாகும். இப்படம் அக்டோபர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

செல்லக்குட்டி

90களில் பிறந்தவர்களின் பள்ளி, கல்லூரி வாழ்க்கை, நட்பு மற்றும் காதலை பிரதிபலுக்கும் வண்ணம் உருவாகி இருக்கும் படம், செல்லக்குட்டி. சுவாரஸ்யமான திருப்பங்களுடன் படத்தின் கதை அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். படத்தை சகாயநாதன் இயக்கியுள்ளார். செல்லக்குட்டி படம் அக்டோபர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

அரகன்

கனிமொழி (2010) படத்தில் நடிகராக அறிமுகமான மைக்கேல் தங்கதுரை, அசோக் செல்வனுடன் இணைந்து சபா நாயகன் (2023) படத்தில் கடைசியாக நடித்தார் . இப்போது அவர் அரகன் படத்தில் நடித்து முடித்து உள்ளார். ஆரகனைத் தவிர , பதுங்கிப் பாயணும் தாலையும் அவர் பைப்லைனில் வைத்திருக்கிறார் .

2022 இல் வெளியிடப்பட்ட படத்தின் டீஸர், கதை மர்மமான மற்றும் திகில் முறையில் இருந்தது. அருண் கே. ஆர் இயக்கத்தில் மைக்கேல் தங்கதுரை மற்றும் கவிப்பிரியா ஆகியோர் நடித்துள்ள உள்ளனர். ட்ரெண்டிங் ஆர்ட்ஸ் புரொடக்ஷன்ஸின் கீழ் ஹரிகரன் பஞ்சலிங்கம் தயாரித்துள்ள இந்தப் படத்தை, வரகுணன் பஞ்சலிங்கம், மதுரதன் பஞ்சலிங்கம் மற்றும் கிரிஷாந்தி ஹரிகரன் இணைந்து தயாரித்துள்ளனர். படம் அக்டோபர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

வேட்டைக்காரி

அறிமுக இயக்குநர் காளிமுத்து காத்தமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “வேட்டைக்காரி”. இந்த படத்தின் கதையை கேட்டதும் கவிஞர் வைரமுத்து தான் டைட்டிலை பரிந்துரை செய்து உள்ளார்.

வேட்டைக்காரி படத்தில் ராகுல், சஞ்சனா சிங், வின்செண்ட் அசோகன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.கே.ராம்ஜி இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்ரீ கருப்பர் பிலிம்ஸ் சார்பில் விஷ்ணுப்பிரியா வேலுச்சாமி தயாரித்துள்ளார். இந்த படத்துக்கான பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். வேட்டைக்காரி படம் அக்டோபர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை