OTT This Week: லியோ மட்டுமில்லா இந்த படமும் தான்.. ஓடிடியில் இந்த வார ரிலீஸ் என்ன பாருங்க
Nov 23, 2023, 11:50 AM IST
ஓடிடியில் இந்த வாரம் எத்தனை படங்கள் வெளியாகிறது என பார்க்கலாம்.
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படம், உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்து வருகிறது. படம் வெளியான இரண்டு வாரங்களுக்குள் இந்தியாவில் ரூபாய் 300 கோடியைத் தாண்டியது. உலக அளவில் ரூ. 540 கோடி வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் படம் வெளியாக உள்ளது.
சித்தா
‘பண்ணையாரும் பத்மினியும்’ ‘சேதுபதி’ ‘சிந்துபாத்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் அருண்குமார். இவரது இயக்கத்தில், நடிகர் சித்தார்த் நடிப்பில் அண்மையில் வெளியாகி, மக்களிடையே வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘சித்தா’.
அண்ணன் இறந்த பிறகு அண்ணியையும்,அவரது பெண் குழந்தையையும் பாதுகாக்கும் கொழுந்தன், கதாபாத்திரத்தில் நடிகர் சித்தார்த் நடித்திருக்கிறார். பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமை குறித்து இந்தப்படம் பேசுகிறது.
இப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நவம்பர் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.
சத்தியசோதனை
இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம், சத்தியசோதனை. நடிகர் பிரேம்ஜி நடித்துள்ள இப்படம், கலவையான விமர்சனங்கள் பெற்றது. இப்படம் நவம்பர் 24 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடியில் வெளியாக உள்ளது.
வில்லேஜ்
ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தி வில்லேஜ். இப்படம் நவம்பர் 24 ஆம் தேதி அமேசான் ஃபிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
சாவீர் (மலையாளத் திரைப்படம்) - சோனி லிவ் - நவம்பர் 24
ஓபன் ஹைமர் (ஆங்கிலத் திரைப்படம்) - புக் மை ஷோ - நவம்பர் 22
ஹன்னா வாடிங்ஹாம்: கிறிஸ்துமஸிற்கான வீடு (ஆங்கிலத் திரைப்படம்) - Apple Plus TV - நவம்பர் 22
தி குட் ஓல்ட் டேஸ் (தெலுங்கு தொடர்)- ஜியோ சினிமா- நவம்பர் 23
நவம்பர் 4 ஆவது வாரத்தில் ஓடிடியில் மொத்தம் 25 படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியாகும். அதில் 13 படங்கள் வெள்ளிக்கிழமை ( நவம்பர் 24 ) ரிலீசுக்கு தயாராக உள்ளன.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்