தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கடந்த 15 வருட கால தீபாவளி ரிலீஸ் யாரு வின்னர் ? பார்க்கலாம் வாங்க!

கடந்த 15 வருட கால தீபாவளி ரிலீஸ் யாரு வின்னர் ? பார்க்கலாம் வாங்க!

Suguna Devi P HT Tamil

Oct 31, 2024, 09:08 AM IST

google News
கடந்த 15 வருடங்களாக தீபாவளி அன்று வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்களின் பட்டியலை இங்கு காண்போம்
கடந்த 15 வருடங்களாக தீபாவளி அன்று வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்களின் பட்டியலை இங்கு காண்போம்

கடந்த 15 வருடங்களாக தீபாவளி அன்று வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்களின் பட்டியலை இங்கு காண்போம்

தீபாவளி கொண்டாட்டம் என்றாலே புத்தாடை, பட்டாசு, இனிப்பு பலகாரம் போன்றவை கட்டாயமான வழக்கமாகிவிட்ட நிலையில் புது படங்களும் வழக்கமாகிவிட்டன. வருடா வருடம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகி படங்கள் வெற்றி பெறுவது ஒரு தொடர்கதையாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி அன்று பெரிய ஹீரோக்களின் படங்களும் வெளியாகும். இந்நிலையில் கடந்த 10 வருடங்களாக தீபாவளி அன்று வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்களின் பட்டியலை இங்கு காண்போம்

2011 : வேலாயுதம் & ஏழாம் அறிவு

பெரும் பொருட்செலவில் உருவான இரு பெரும் நட்சத்திரங்களின் படங்களான வேலாயுதம் மற்றும் ஏழாம் அறிவு அக்டோபர் 26 அன்று வெளியானது. விஜய் - மோகன் ராஜா கூட்டணி ஒரு பக்கம், சூர்யா - ஏ ஆர் முருகதாஸ் - ரெட் ஜெயன்ட் உதயநிதி ஸ்டாலின் கூட்டணி ஒரு பக்கம் என எதிர்பார்ப்பு பலமாக இருந்தது. இது இயக்குனர் மோகன் ராஜாவிற்கு தன் தம்பி ஜெயம் ரவியை விடுத்து வேறு நடிகரை வைத்து இயக்கும் முதல் படம். இது கடைசி 15 நிமிட காட்சிக்காக 15 கோடி செலவு செய்ததாக தயாரிப்பாளர் தரப்பிடமிருந்து சொல்லப்படும் ஏழாம் அறிவு திரைப்படம் கலவையான விமர்சனங்களே பெற்றது. கமர்சியல் திரைப்படமான வேலாயுதம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வசூலிலும் இரு படங்களும் ஏறத்தாழ ஒரே அளவு வசூலைப் பெற்றன.

2012 : துப்பாக்கி - போடா போடி - அம்மாவின் கைபேசி

விஜய் - ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவான முதல் படமான துப்பாக்கி இன்றுவரை விஜய் கரியரில் அசைக்க முடியாத படமாக இருந்து வருகிறது. கில்லி, போக்கிரி வரிசையில் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டு வரலாறு காணாத வெற்றியை இந்த படம் அடைந்தது. விஜயின் கரியரை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்ல இந்த படம் ஊன்றுகோலாக இருந்தது.

இது தவிர இயக்குனர் விக்னேஷ் சிவனின் முதல் திரைப்படமான போடா போடி சிலம்பரசன் & வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியாகி பெரிதும் கவரவில்லை.

இயக்குனர் தங்கர் பச்சானின் அம்மாவின் கைபேசி படமும் வெளியாகி மக்களிடையே வரவேற்பு பெறவில்லை.

2013 : ஆரம்பம்-பாண்டியநாடு- அழகுராஜா

விஷ்ணுவர்தன் - அஜித் கூட்டணியில் வெளிவந்த இரண்டாவது திரைப்படமான ஆரம்பம் நல்ல வரவேற்பை பெற்றது. மங்காத்தா படத்திற்கு அடுத்து ஸ்டைலிஷ் ஆன அஜித்தை பார்க்க முடிந்தது. விஷாலின் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான பாண்டியநாடு படமும் மக்களை கவர்ந்தது. கார்த்தி நடிப்பில் தற்போது 'பிரதர்' திரைப்படத்தை இயக்கியிருக்கும் M.ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்த ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. M.ராஜேஷ்-சந்தானம் அவர்களின் அக்மார்க் நம்பிக்கையான காமெடி இப்படத்திற்கு கைகொடுக்கவில்லை.

2014 : கத்தி - பூஜை

இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்த விஜய் ஏ ஆர் முருகதாஸ் இம்முறையும் இமாலய வெற்றியை பதிவு செய்தது. இரட்டை வேட நடிப்பில் வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கும் விஜய்யால் கமர்சியல் நடிப்பையும் கிளாசிக் நடிப்பையும் கொடுக்க முடிந்தது. அதிலும் ஜீவானந்தம் கதாபாத்திரத்தை மக்களால் மறக்க இயலவில்லை. மாநாடு நடத்தி மிரட்டலாக அரசியல் வசனங்களை ரியலில் பேசி முடித்த விஜய் அன்றே திரையில் பேசியிருப்பார்.

இத்துடன் விஷால் நடிப்பில் அசுர வேக இயக்குனராக அறியப்படும் அரிய இயக்கத்தில் வெளியான பூஜை படமும் நல்ல வரவேற்பை பெற்றது. டிவியில் ஒளிபரப்பாகும் எந்த சமயத்திலும் இந்த படத்திற்கு நல்ல டிஆர்பி உண்டு என்பதை காண முடிகிறது.

2015 : தூங்காவனம் - வேதாளம்

கமல்ஹாசன் தயாரித்து நடித்து வெளிவந்த திரில்லர் படமான தூங்காவனம் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சிறுத்தை சிவா & அஜித் முதல் முறையாக நினைத்து வெளியான வேதாளம் திரைப்படம் அஜித் ரசிகர்களை மட்டுமே பெரிதும் கவர்ந்தது.

2016: கொடி - காஷ்மோரா

தனுஷின் இரட்டைவடன் நடிப்பில் வெளியான கொடி படம் பொலிட்டிக்கல் ஆக்சன் டிராமாவாக அமைந்தது. திரிஷாவின் வில்லத்தனமான நடிப்பும் படத்தின் திரைக்கதையும் கை கொடுக்க தாராள ரீ-வாட்சபில் படமாக அமைந்தது. கார்த்தி நடிப்பில் வெளியான காஷ்மோரா படம் அந்த ஃபேண்டஸி வகையறா படங்களை விரும்பும் மக்களைத் தவிர பெரிதாக கவரவில்லை.

2017 : மெர்சல்-மேயாத மான்- சென்னையில் ஒரு நாள் 2

அட்லீயிடம் தன்னை இரண்டாவது முறையாக ஒப்படைத்த விஜய்க்கு இம்முறையும் வெற்றியே வசமாக்கியது. ஒன்றிய அரசின் கொள்கைகளை விமர்சனம் செய்து விஜய் பேசிய வசனங்கள் ஆளும் பாஜக தரப்பிடையே கடும் எதிர்ப்பை சம்பாதித்தது. ஓவர் நைட்டில் மெர்சல் படம் பேசு பொருளாகி இந்திய அளவில் ட்ரெண்டானது. முதல்முறையாக மூன்று முறை முகமாக விஜய் நடிப்பில் அசத்திருப்பார். அந்த வருட சிறந்த நடிகருக்கான விகடன் விருதையும் விஜய்க்கு கிடைத்தது.

மேயாத மான் திரைப்படம் ஒரு டீசன்ட் ஃபேமிலி என்டர்டைனராக அமைந்தது. லோகேஷ் கனகராஜுடன் பயணிக்கும் ரத்தினகுமார் இயக்கிய முதல் படம் இது. இது தவிர சென்னையில் ஒரு நாள் 2 படம் வெளியாகி முதல் பாகத்தின் வெற்றியில் கொஞ்சம் கூட அடையவில்லை.

2018 : சர்கார் - பில்லா பாண்டி - களவாணி மாப்பிள்ளை

மூன்றாவது முறையாக ஏஆர்எம் விஜய் கூட்டணியில் சர்க்கார் அமைக்க நினைத்த விஜய்க்கு எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை. திரைக்கதையும் கை கொடுக்காமல் பிரச்சார பானியிலேயே படம் நகர்ந்ததால் விஜய் ரசிகர்களை தவிர பொதுமக்களை இந்த படம் கவரவில்லை.

இது தவிர சிறிய பட்ஜெட் படங்களான பில்லா பாண்டி மற்றும் களவாணி மாப்பிள்ளை பிளாப் லிஸ்டிலேயே இணைந்தது.

2019 : பிகில்-கைதி

பெரிய திரைப்படமான பிகிலுக்கு நடுவில் கைதியே வரவேற்பு பெற்றது என்று கூறுவதை தவிர்க்க முடியாது. LCUவிற்கு அடித்தளமாக அமைந்ததும் இந்த படம் தான். விஜய் ரசிகர்களை மட்டுமே திருப்திப்படுத்தினாலும் இந்த படம் 300 கோடி அளவுக்கு வசூல் செய்தது என்று அறிய முடிகிறது.

2020 கொரோனா லாக் டவுன் காரணத்தால் திரையரங்கில் எந்த படமும் வெளியாகவில்லை. இருப்பினும் ஓ டி டி யில் வெளியான சூழரைப் போற்று திரைப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதைய சூர்யாவுக்கும் அபர்ணா பாலமுரளிக்கும் வழங்கி கௌரவித்த படமாக இது அமைந்தது.

2021

அண்ணாத்த & எனிமி திரையரங்கிலும் ஜெய் பீம் & எம்ஜிஆர் மகன் ஆகிய ஓடிடியிலும் வெளிவந்தது. ஜெய் பீம் அடைந்த பேன் இந்தியா வெற்றியை யாரும் எளிதில் மறக்க முடியாது. மற்ற எந்த படங்களும் மக்களை கவரவில்லை.

2022 தீபாவளி அன்று சர்தார் பிரண்ட்ஸ் என இரண்டு படங்கள் வெளியானது. இதில் சர்தார் பரவலான வெற்றியும் பிரின்ஸ்படம் தோல்வியும் அடைந்தது.

2023 தீபாவளி அன்று ஜப்பான், ஜிகர்தண்டா டபுள்X, அயலான் என மூன்று படங்கள் வெளியானது. இதில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று தீபாவளி ரேசில் முந்திக் கொண்டது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை