தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kushboo: இது கூட இல்லையா - ஏர் இந்தியாவை சாடிய குஷ்பூ

Kushboo: இது கூட இல்லையா - ஏர் இந்தியாவை சாடிய குஷ்பூ

Aarthi V HT Tamil

Jan 31, 2023, 03:39 PM IST

google News
நடிகை குஷ்பு, காயம் ஏற்பட்ட பயணியை அழைத்து செல்ல தேவைப்படும் சர்க்கர நாற்காலி இல்லையா என ஏர் இந்தியாவிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.
நடிகை குஷ்பு, காயம் ஏற்பட்ட பயணியை அழைத்து செல்ல தேவைப்படும் சர்க்கர நாற்காலி இல்லையா என ஏர் இந்தியாவிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.

நடிகை குஷ்பு, காயம் ஏற்பட்ட பயணியை அழைத்து செல்ல தேவைப்படும் சர்க்கர நாற்காலி இல்லையா என ஏர் இந்தியாவிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. இவர் தற்போது அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தற்போது பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினராக உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

நடிகை குஷ்பூவுக்கு சமீபத்தில் காலில் காயம் ஏற்பட்டது. காலில் கட்டுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகை குஷ்பூ இன்று காலை ( ஜனவரி 31 ) வெளியூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்று இருந்தார். அங்கு கால் வலியுடன் இருந்த தனக்கு சர்க்கர நாற்காலி கிடைக்காமல் அவதிப்பட்டதாக மிகவும் வருத்ததுடன் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள பதிவில், ஏர் இந்தியா நிறுவனத்திடம், ”முழங்காலில் காயம் ஏற்பட்ட பயணியை அழைத்து செல்ல தேவைப்படும் சர்க்கர நாற்காலி கூடவா உங்களிடம் இல்லை.

இதற்காக நான் அரை மணிநேரம் கால் வலியுடன் காத்திருந்தேன். அதன் பின்னர் வேறு ஒரு விமான நிறுவனத்திடம் இருந்து சர்க்கர நாற்காலியை வாங்கி வந்து என்னை அழைத்து சென்றனர்” என குறிப்பிட்டு உள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனம், இதற்காக நடிகை குஷ்பூவிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. அதில், “உங்களுக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்திற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் . இந்த விவகாரம் உடனடியாக சென்னை விமான நிலைய குழுவுக்கு எடுத்துச் செல்லப்படும்” என குறிப்பிட்டு இருந்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி