தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sivakarthikeyan:‘சூரியுடன் இணைவதில் உற்சாகம்’-கொட்டுக்காளி குறித்து சிவா பேட்டி!

Sivakarthikeyan:‘சூரியுடன் இணைவதில் உற்சாகம்’-கொட்டுக்காளி குறித்து சிவா பேட்டி!

Mar 10, 2023, 01:39 PM IST

எனது நெருங்கிய நண்பரான சூரியுடன் இந்த படத்தில் பணிபுரிவது எனக்கு உற்சாகமான விஷயம். மேலும், அன்னா பென் போன்ற திறமை மிக்க நடிகை எங்கள் படத்தில் இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது
எனது நெருங்கிய நண்பரான சூரியுடன் இந்த படத்தில் பணிபுரிவது எனக்கு உற்சாகமான விஷயம். மேலும், அன்னா பென் போன்ற திறமை மிக்க நடிகை எங்கள் படத்தில் இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது

எனது நெருங்கிய நண்பரான சூரியுடன் இந்த படத்தில் பணிபுரிவது எனக்கு உற்சாகமான விஷயம். மேலும், அன்னா பென் போன்ற திறமை மிக்க நடிகை எங்கள் படத்தில் இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது

சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்து வருகிறார். இவர் முன்னதாக தயாரித்த ‘கனா’, ‘டாக்டர்’, ‘டான்’ உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் அவர் தற்போது மீண்டும் ஒரு படத்தை தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்க இருக்கிறார் ‘கூழாங்கல்’ படத்தை இயக்கிய பி.எஸ் வினோத்ராஜ் இந்த படத்தை இயக்குகிறார். ‘கொட்டுக்காளி’ என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில்நடிகர் சூரி மற்றும் அன்னாபென் ஆகியோர் நடிக்கின்றனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Ishari K Ganesh on Silambarasan: ‘சிலம்பரசன் ஏமாத்துறார்; மணிரத்னம் படத்தை உடனே நிறுத்துங்க’ - கொந்தளித்த தயாரிப்பாளர்!

Star Movie Review: ‘ஸ்டார் படம் தாங்குமா? தாங்காதா?’ நேருக்கு நேர் உடைத்து பேசும் விமர்சனம் இது தான்!

Jyotika: பாலிவுட் திரையுலகை விட்டு விலக காரணமாக அமைந்த சம்பவம்! 27 வருடத்துக்கு பின் கம்பேக் ஏன்? ஜோதிகா பதில்

MTV Splitsvilla X5: குணா குகை போல காதல் குகையை அறிமுகப்படுத்திய சன்னி லியோன்..! MTV Splitsvilla X5இல் அடுத்த ஸ்பெஷல்

இது குறித்து தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கூறும்போது, ​​“ஒரு படைப்பாளி தன்னுடைய சொந்த மண்ணின் கூறுகளை அதன் தன்மை மாறாது படமாக்கி, அது சர்வதேச அளவுகளில் அங்கீகாரம் பெறுவது திரைப்படத்துறையின் விலைமதிப்பற்ற தருணம்.

அந்த வகையில், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் மதிப்புமிக்க டைகர் விருதை வென்று, 'கூழாங்கல்' திரைப்படத்தின் மூலம் நம் தமிழ்த் திரையுலகைப் பெருமைப்படுத்திய இயக்குநர் பி.எஸ் வினோத்ராஜ் ஒரு ஜெம் என்று சொல்வேன்.

எனது நெருங்கிய நண்பரான சூரியுடன் இந்த படத்தில் பணிபுரிவது எனக்கு உற்சாகமான விஷயம். மேலும், அன்னா பென் போன்ற திறமை மிக்க நடிகை எங்கள் படத்தில் இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

சிவகார்த்திகேயன்

இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் கூறும்போது, ​​“திரைப்படத்துறையில் அனுபவம் மிக்கவர்களுடன் பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சூரி மற்றும் அன்னா பென் போன்ற மிகவும் திறமையான நடிகர்களுடன் பணியாற்றுவது உற்சாகமாக இருக்கிறது". என்றார்.

இணைத் தயாரிப்பாளர் கலை அரசு கூறும்போது, ​​“'கூழாங்கல்' படத்தில் இயக்குநர் வினோத்ராஜின் பணி எங்களுக்கு பிடித்திருந்தது. இப்போது, அவருடைய இயக்கத்தில் அடுத்தப் படத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும், சூரி மற்றும் அன்னா பென் போன்ற திறமையான கலைஞர்கள் இந்த படத்தில் இணைந்திருப்பது எங்களை உற்சாகப்படுத்துகிறது. SK புரொடக்ஷன்ஸ் எப்போதும் நல்லப் படங்களைக் கொடுக்கவே ஆர்வம் காட்டி வருகிறது. அந்த ஆர்வத்திற்குத் தீனி போடும் வகையிலான நல்லதொரு திரைப்படமாக இது இருக்கும்". என்றார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.