தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  70th National Film Awards: ஒன்னு இல்ல இரண்டு தேசிய விருதுகளை தட்டித்தூக்கிய கே.ஜி.எஃப் 2

70th National Film Awards: ஒன்னு இல்ல இரண்டு தேசிய விருதுகளை தட்டித்தூக்கிய கே.ஜி.எஃப் 2

Aarthi Balaji HT Tamil

Aug 16, 2024, 04:03 PM IST

google News
70th National Film Awards: யாஷ் நடித்த கே.ஜி.எஃப் 2 திரைப்படம் 2022ஆம் ஆண்டிற்கான சிறந்த கன்னட படமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
70th National Film Awards: யாஷ் நடித்த கே.ஜி.எஃப் 2 திரைப்படம் 2022ஆம் ஆண்டிற்கான சிறந்த கன்னட படமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

70th National Film Awards: யாஷ் நடித்த கே.ஜி.எஃப் 2 திரைப்படம் 2022ஆம் ஆண்டிற்கான சிறந்த கன்னட படமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

70th National Film Awards: 70 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 39 மொழிகளில் இருந்து சிறந்த படங்களை தன்னால் பார்க்க முடிந்தது என்று கூறி விருது அறிவிப்பிற்குள் சென்றனர்.

2022 ஆம் ஆண்டு வெளியாகும் படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்படும். அதாவது 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்கள் இந்த விருதுக்கு பரிசீலிக்கப்படும். 2023 ஆம் ஆண்டின் வெற்றியாளர்களை அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் அறிவிப்போம் என்றும் குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு நடுவர் குழுவில் சிறப்பு திரைப்பட ஜூரியின் தலைவராக ராகுல் ரவைல் உள்ளார். நான்-ஃபீச்சர் ஃபிலிம் ஜூரியின் தலைவர், நிலா மதாப் பாண்டா இருக்கிறார் மற்றும் சினிமா ஜூரி பற்றிய சிறந்த எழுத்தாளரின் தலைவராக கங்காதர் முதலியார் இருக்கிறார்.

கே.ஜி.எஃப் 2 படத்திற்கு கிடைத்த விருது

நடிகர் யாஷ் நடித்த கே.ஜி.எஃப் 2 சிறந்த கன்னட திரைப்படம் என்ற பிரிவில் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. படத்தின் சிறந்த சண்டை பயிற்சியாளருக்கான விருதை அன்பறிவ் சகோதரர்கள் வென்று உள்ளனர். இதன் மூலம் பான் இந்தியா முழுவதும் பிரபலமான கே.ஜி.எஃப் 2 திரைப்படம் தற்போது தேசிய திரைப்பட விருதை வென்றுள்ளது.

கே.ஜி.எஃப் 2 திரைப்படம் 2022 ஆம் ஆண்டு வெளியான கன்னட பான் இந்தியா திரைப்படமாகும். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி உள்ளார்.

நடிகர், நடிகைகள்

படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் பேனரில் விஜய் கிர்கந்தூர் தயாரித்துள்ளார். கே.ஜி.எஃப் அத்தியாயம் 1 வெற்றிக்குப் பிறகு, கே.ஜி.எஃப் 2 பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ், அச்யுத் குமார், ராவ் ரமேஷ், வசிஷ்டா சிங், அய்யப்ப பி. சர்மா, அர்ச்சனா ஜோயிஸ், சரண் சக்தி, ஈஸ்வரி ராவ், ஜான் கொக்கன், டி.எஸ்.நாகபரணா மற்றும் மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடித்து உள்ளனர்.

கே.ஜி.எஃப் 2 திரைப்படம் சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. கன்னடத்தில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் என்ற பெயரைப் பெற்று உள்ளது. தற்போது இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்து உள்ளது.

கே.ஜி.எஃப் 2 படம் உலகளவில் ரூ. 1250 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்து, வெற்றி பெற்றது. மேலும் 'RRR' மற்றும் 'பாகுபலி' படங்களுக்குப் பிறகு உலகிலேயே அதிக வசூல் செய்த 3 ஆவது படம் என்ற பட்டியலில் இடம் பிடித்து உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை