தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அந்த ஒரு விஷயம்.. வாழ்க்கையை மாற்றியது.. கீர்த்தி பாண்டியன்

அந்த ஒரு விஷயம்.. வாழ்க்கையை மாற்றியது.. கீர்த்தி பாண்டியன்

Aarthi V HT Tamil

Dec 29, 2023, 06:30 AM IST

google News
நடிகை கீர்த்தி பாண்டியன் தன் வாழ்க்கையை மாற்றிய சம்பவம் தொடர்பாக பேசி உள்ளார்.
நடிகை கீர்த்தி பாண்டியன் தன் வாழ்க்கையை மாற்றிய சம்பவம் தொடர்பாக பேசி உள்ளார்.

நடிகை கீர்த்தி பாண்டியன் தன் வாழ்க்கையை மாற்றிய சம்பவம் தொடர்பாக பேசி உள்ளார்.

நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி தனது தந்தையின் பாதையை பின்பற்றி திரையுலகிற்கு வந்தார். ஆனால் மற்ற நட்சத்திர மகள்களைப் போல் கீர்த்தியின் பயணம் அவ்வளவு சுலபமாக இல்லை. பல புறக்கணிப்பு மற்றும் ஒதுக்கீட்டை சந்தித்த கீர்த்தி தமிழ் சினிமாவில் தனது இருப்பை வெளிப்படுத்தினார். ஹீரோயின் கான்செப்ட்டுக்கு அவரது சாயல் மற்றும் உடல் அமைப்பு பொருந்தாததால் அவருக்கு அடிக்கடி வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.

ஆரம்பத்தில் இதெல்லாம் கீர்த்தியை மனதளவில் உடைத்து விட்டது. ஆனால் பின்னர் கீர்த்தி தனது சொந்த உடலை நேசித்தார். எல்லா புறக்கணிப்புகளையும் விலக்குகளையும் தாண்டி சினிமாவில் வாய்ப்புகளைப் பெற்றார். 2019ல் தும்பா படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி ஏற்கனவே மூன்று படங்களில் நடித்துள்ளார். கண்ணகி கீர்த்தி பாண்டியனின் சமீபத்திய படம்.

தனது வாழ்க்கையில் புதிய கட்டத்திற்குள் நுழைந்த அவர் தனது கேரியரிலும் புதிய சாதனைகளைப் பெறுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். கீர்த்திக்கு கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. கீர்த்தி பாண்டியன், நடிகர் அசோக் செல்வனை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு, கீர்த்தி பாடி ஷேமிங்கை சந்தித்தார்.

அசோக் செல்வனும், கீர்த்தி பாண்டியனும் பத்து வருடங்களாக காதலித்து, திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு கீர்த்தி தற்போது சினிமா மற்றும் பல படங்களில் நடித்து வருகிறார். கீர்த்தியின் கண்ணகி டிசம்பர் 15ஆம் தேதி வெளியானது.

இதனிடையே கீர்த்தி தன் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனையை பற்றி பேசினார்.

“ஒரே இரவில் எல்லாம் மாறிவிட்டதாகச் சொல்ல முடியாது. அதற்கு நிறைய நேரம் பிடித்தது. பலருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்படுகிறது, அவர்களின் கண்ணோட்டம் மாறுகிறது,வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. என் வாழ்க்கையில் இப்படி பல சிறு திருப்புமுனைகளை நான் சந்தித்திருக்கிறேன். அந்த திருப்பங்கள். வாழ்க்கைப் பயணத்தில் ஏற்பட்ட திருப்பங்கள். அது எனது பார்வையை மாற்றிவிட்டன.

அப்பா என்னிடம் நிறைய பேசுவார். அவர் பேசும் பல விஷயங்கள் எனக்கு மறைமுகமாக தேவை. என்னைப் பொறுத்தவரை என் வாழ்க்கையில் மிக முக்கியமானது சுய அன்பு. எனக்கு ஏன் எல்லாம் நடக்கிறது, ஏன் எல்லோரும் என்னை விமர்சிக்கிறார்கள். ஆனால் அவை உங்களுக்கு வெளியே நடக்கும் விஷயங்கள்.

அது எதுவும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரே விஷயம், அந்த பிரச்னைகளை நீங்கள் எப்படி எடுத்து கொள்கிறோம் என்பது தான்.

அவை உங்களை எந்த அளவுக்கும் பாதிக்க அனுமதிக்கிறீர்கள். நான் அதை உணர்ந்த பிறகு, என் வாழ்க்கை மாறத் தொடங்கியது. என் மனம் என் கட்டுப்பாட்டில் இருப்பதால், நானே அதிகம் பேசுகிறேன். நான் தான்

என் மருத்துவர். சில விஷயங்களை எழுதுகிறேன். எல்லாவற்றையும் நாம் மற்றவரிடம் சொல்ல முடியாது. ஆனால் அதையெல்லாம் எங்காவது எழுதி வைத்தால், இலகுவாக இருக்கும். உங்கள் பிரச்னைகளை அப்படி எழுதும் போது, ​​அதில் இருந்து நிறைய பதில்கள் கிடைக்கும்.

பொதுவாக சில விஷயங்களை நம் பார்வையில் இருந்து பார்க்கிறோம். ஆனால் எழுதும் நேரத்தில், அப்படி இருக்காது. நீங்கள் வேறு கோணத்தில் பார்க்க முயற்சிப்பீர்கள். பின்னர் வாழ்க்கை மாறத் தொடங்கும்" என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி