கூட்டத்தில் உடைந்த போலி கர்ப்பம்.. காட்டிக்கொடுத்த செல்போன் வீடியோ.. வலியில் துடித்த மூர்த்தி! - கயல் சீரியல் அப்டேட்
Oct 19, 2024, 12:41 PM IST
தீபிகாவின் போலி கர்ப்ப நாடகம் உடைந்த நிலையில், கயல் கல்யாணம் ஒரு வழியாக நடந்து முடிந்தது. இதற்கிடையே, கத்திக்குத்து வாங்கி சரிந்த மூர்த்தியால் குடும்பம் அதிர்ச்சி அடைகிறது.
கயல் சீரியலில் இருந்து இன்று வெளியான புரோமோவில் நேற்று ஒரு வழியாக, கயலுக்கு எழிலுடன் திருமணம் நடந்த நிலையில் இருவரும் சிவசங்கரி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வந்தனர் அப்போது சிவசங்கரி மனதிற்குள், உன்னை வெளியே அனுப்பிவிட்டு வேறொரு பெண்ணை எழிலுக்கு நிச்சயமாக திருமணம் செய்து வைப்பேன் என்று சபதம் ஏற்றாள்.
இன்னொருப்பக்கம், ஏற்கனவே வயிற்றில் கத்திக்குத்து வாங்கி, முதலுதவி சிகிச்சையில் இருந்த மூர்த்தி, வலி தாங்காமல் கதறினான். இதனையடுத்து அவனது தம்பியும், தங்கையும் என்ன ஆனது என்று அவனிடம் கேட்கிறார்கள். ஆனால் அவன் சொல்ல மறுக்க, அவருக்கு சிகிச்சை கொடுக்க வந்த டாக்டர், நான் அதைச் சொல்கிறேன் என்று உள்ளே வருகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை இன்றைய தினம் பார்க்கலாம்.
நேற்றைய எபிசோடில் நடந்தது என்ன?
நேற்றைய தினம் தீபிகா தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு எழில்தான் அப்பா, ஆகையால் அவன் என்னைதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் மணமேடையில் நின்று அடம் பிடித்தாள். இதைக் கேட்டு கோபம் அடைந்த எழில், நீ சொன்னவுடன் இங்கு எல்லோரும் நம்பி விடுவார்களா? தேவையில்லாத வேலையை செய்து கொண்டிருக்கிறாய். ஒழுங்காக இந்த இடத்தை விட்டுச் சென்று விடு என்று எச்சரித்தான். ஆனாலும் தீபிகா கேட்டப்பாடில்லை.
தான் பிடித்த முயலுக்கு மூன்று கொம்பு என்பது போல, எனக்கு எழில் வேண்டுமென்று மேடையில் கத்திக் கூப்பாடு போட்டாள். இதையடுத்து உள்ளே வந்த கயல், நீ செய்வது மிக மிக தவறு. ஒருவருக்கு உன்னை பிடிக்கவில்லை என்றால், அவரை தொந்தரவு செய்யக் கூடாது. மரியாதையாக இங்கிருந்து சென்றுவிடு என்று கூறினாள்.
தீபிகா தற்கொலை முயற்சி
இதற்கிடையே கூட்டத்தில் இருந்து எழுந்த ஒரு பெண்மணி ஒருவர் எல்லோரிடமும், அந்த பெண் கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறுகிறாள். ஒருவேளை எழில் அந்த கர்ப்பத்திற்கு காரணம் இல்லை என்றால், அதை அவன் நிரூபிக்க வேண்டியதுதானே என்று சொல்ல, அதை நான் நிரூபிக்கிறேன் என்று டாக்டர் உள்ளே வந்தார்.
அங்கு வந்த அவர், தீபிகா சொல்வது முழுக்க முழுக்க பொய் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், தீபிகாவும் அவரது அப்பாவும் போலியாக கர்ப்ப நாடகத்தை அரங்கேற்ற நடத்திய திட்டம் சம்பந்தமான வீடியோவையும் எல்லோர் முன்னிலையிலும் போட்டுக் காண்பித்தார்.
இதற்கிடையே எழிலின் அப்பா, போலீசுக்கு தகவல் கொடுக்க, அவர்களும் அங்கிருந்து வந்து கொண்டிருந்தார்கள். உண்மை வெளிப்பட்ட உடன், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த தீபிகா, அங்கிருந்த விளக்கை எடுத்து, தன்னைத்தானே குத்திக் கொள்ள தயாரானாள். இதையடுத்து அனைவரும் அவளை பிடிக்கப்போக, அவள் இப்போது எழில் என்னுடைய கழுத்தில் தாலி கட்டியே ஆக வேண்டும், இல்லையென்றால் நான் என்னை நானே குத்தி கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினாள். இந்த நிலையில் கயிலின் தம்பி, விளக்கை அவளிடம் இருந்து பிடுங்க, அங்கு வந்த போலீஸ், அவளை இழுத்துச் சென்றனர். இதனையடுத்து கயலின் திருமணம் சமூகமாக நடந்தது. காமாட்சி அதை பார்த்து நெகிழ்ச்சி அடைந்தாள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்