Kayal Serial: பெரிய மனிஷன் மாதிரியா நடந்துகுற.. பெரியப்பா முகத்திரையை கிழித்த கயல்
Aug 10, 2024, 08:55 AM IST
Kayal Serial: அம்மாவிடம், “ முத்த பிள்ளையை வைத்து குடும்பத்தை அழிக்க திட்டம் போட்டு இருக்கிறார். இதை கேட்கும் போது உனக்கு ரத்தம் கொதிக்கவே இல்லையா? என கேள்வி கேட்கிறார் கயல்.
Kayal Serial: சன் தொலைக்காட்சியில் தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலின் இன்றைய ( ஆகஸ்ட் 10 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அதில், கயல், “ எங்க அண்ணன் உங்க காலில் விழுந்து எதுவும் பண்ண வேண்டாம் என கெஞ்சி இருக்கான். ஆனால் நீ எல்லாம் பெரிய மனிஷன் மாதிரியா நடந்து இருக்க? கல்யாணத்தை கெடுத்துவிடலாம் என உங்கள் நினைப்பு ஒரு போதும் நடக்காது.
கல்யாணத்திற்கு வரவே வேண்டாம்
நான் ஏன் அப்படி சொல்றேன் என்றால் நீங்க யாரும் கல்யாணத்திற்கு வரவே வேண்டாம் “ என மிகவும் கெத்தாக சொல்லிவிட்டு வந்துவிட்டார்.
வீட்டிற்கு வந்து தனது அம்மாவிடம், “ முத்த பிள்ளையை வைத்து குடும்பத்தை அழிக்க திட்டம் போட்டு இருக்கிறார். இதை கேட்கும் போது உனக்கு ரத்தம் கொதிக்கவே இல்லையா? என கேள்வி கேட்கிறார் கயல். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தாய் யோசிப்பதுடன் ப்ரோமோ முடிந்தது.
நேற்றைய எபிசோட்
கயல் சீரியலின் நேற்றைய ( ஆகஸ்ட் 9) எபிசோட்டில் , கயல் தனது குடும்பத்திற்காக எதையும் செய்வேன். திருமணத்திற்கு சரி சொல்ல காரணமே மூர்த்தி குடியை விட்டு குடும்பத்தில் கவனம் செலுத்துவதால் தான். அவன் இருக்கும் நம்பிக்கையில் தான் திருமணம் செய்ய போகிறேன். குடும்பத்தை யாருக்காவும் விட்டு கொடுக்க கூடாது என சொல்லி கொண்டு இருந்தார்.
மூர்த்தி தனது மனைவியிடம், “ குடும்பத்திடம் நான் பெரிய நம்பிக்கை துரோகம் செய்து கொண்டு இருக்கிறேன். கயல் திருமணத்திற்காக நான் பெரியப்பாவிடம் மொத்த குடும்பத்தையும் அடிமையாக இருக்க வைக்கிறேன் என்று எழுதி கொடுத்து வந்து இருக்கிறேன் ” என அழுது கொண்டே சொல்லுகிறார்.
இதை அவ்வழியாக எதார்த்தமாக வந்த கயல் கேட்டுவிட்டார். கேட்டுவிட்டு சும்மாவாக இருப்பார். உடனே தன் அண்ணை அழைத்து கொண்டு நடு இரவில் பெரியப்பா வீட்டிற்கு கிளம்பிவிட்டார். அவரும் வீட்டில் பிரச்னையா அல்லது யாருக்காவது உடல்நிலை சரியில்லையா என கேட்கிறார்.
கயல் இருக்கும் வரை நடக்காது
அதற்கு கயல் உங்களின் திட்டத்தை முடிக்க இன்றே கடைசி நாள் என்றார். ” என் தம்பி, தங்கச்சி எதிர்காலத்தை அழிக்க வேண்டும் என்று வெறி கொண்டு சுற்றி வரும் உங்கள் ஆசை, கயல் இருக்கும் வரை நடக்காது “ என மிகவும் துணிச்சலாக பேசினார். மேலும் பெரியப்பாவிடம், கைநாட்டு வாங்கி கொண்டு பேப்பரில் தீவிரமாக எதையோ எழுதி கொண்டு இருக்கிறார்.
பீதியில் பெரியப்பா
கயல் என்ன செய்ய போகிறார் என்று பீதியில் பெரியப்பா மற்றும் அவரின் மனைவி அதிர்ச்சி அடைந்து போகிறார்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்