தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  "திட்டம் போட்டு பண்ணிட்டாங்க" நெருக்கமா நடிக்கலைன்னா இப்படி செய்வீங்களா? புலம்பும் நடிகை

"திட்டம் போட்டு பண்ணிட்டாங்க" நெருக்கமா நடிக்கலைன்னா இப்படி செய்வீங்களா? புலம்பும் நடிகை

Nov 09, 2024, 11:37 AM IST

google News
கார்த்திகை தீபம் சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த ஆர்த்திகாவை சீரியலில் இருந்து வேண்டுமென்றே தூக்கி விட்டதாக அவர் தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.
கார்த்திகை தீபம் சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த ஆர்த்திகாவை சீரியலில் இருந்து வேண்டுமென்றே தூக்கி விட்டதாக அவர் தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.

கார்த்திகை தீபம் சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த ஆர்த்திகாவை சீரியலில் இருந்து வேண்டுமென்றே தூக்கி விட்டதாக அவர் தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழில், தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்று கார்த்திகை தீபம். கார்த்திக் ராஜ், ஆர்த்திகா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியல், மக்களின் மனங்களை கவர்ந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது.

புது களத்தில் கார்த்திகை தீபம்

இந்த நிலையில், தற்போது இந்த சீரியல் வரும் திங்கள் முதல் புத்தம் புதிய கிராமத்து கதைக்களத்தில், புது நட்சத்திரங்களுடன் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான ப்ரோமோ வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் ரேஷ்மா பசுபுலேட்டி கார்த்திக்கின் அத்தையாக சாமுண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது தெரிய வந்திருக்கிறது. மேலும், கார்த்திக்கு ஜோடியாக ஜீ கேரளம் சேனல் மூலமாக பாப்புலரான வைஷ்ணவி நடிக்க உள்ளார். மேலும் பழம்பெரும் நடிகர்களாக விஜயகுமார், வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

சீரியலில் இருந்து நீக்கப்பட்ட ஆர்த்திகா

இந்நிலையில், ரசிகர்கள் பலரும் கார்த்திகை தீபம் முதல் பாகத்தில் நடித்த ஆர்த்திகாவை ஏன் நீக்கி விட்டீர்கள் என கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கிடையில், தான் கார்த்திகை தீபம் 2 சீரியலில் நடிக்காமல் போனதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

திட்டம் போட்டு தூக்கிய ஆர்த்திகா

அப்போது, கார்த்திகை தீபம் 2 சீரியலில் இருந்து என்னை திட்டம் போட்டு நீக்கிவிட்டனர். அண்மையில் எனக்கு திருமணம் நடந்து முடிந்ததை கருத்தில் கொண்டு சீரியல் தயாரிப்பு குழு இந்த முடிவை எடுத்துள்ளது. எனக்கு திருமணம் ஆனதால் நெருக்கமான காட்சிகளில் நடிக்க முடியாது என நினைத்து விட்டனர். இதையெல்லாம் கணக்கு செய்து தான் என்னை இந்த சீரியலில் இருந்து நீக்கி உள்ளனர். இவர்கள் இப்படி செய்ததற்காக நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை.

அடுத்த சீரியலில் நடிக்க வாழ்த்தும் ரசிகர்கள்

இந்த சீரியலில் நடத்த போது, இதுநாள் வரை எனக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார். இவர் பேசியதை ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வந்ததுடன், ஆர்த்திகா விரைவில் வேறொரு சீரியலில் நடிக்க வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.

மலையாள பெண்குட்டி

கேரளாவைச் சேர்ந்த ஆர்த்திகா, பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை கேரளாவிலேயே முடித்துள்ளார். படிக்கும் போது சீரியலில் நடிப்பதையோ சினிமாவில் நடிப்பதைப் பற்றியோ யோசித்ததே இல்லையாம். இவர் வேலை பார்த்த நிறுவனத்திற்கு அங்கு வந்த இயக்குநர்கள் குழு என்னைப் பார்த்து, சினிமாவில் நடிக்க விருப்பமா என்று கேட்டனர். ஆனால் அப்போது எனக்கு அது பற்றிய எந்தப் புரிதலும் இல்லாததால் எதுவும் கூறவில்லை. சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்ததால், பலரும் சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை அதனால் நடிக்க செல்ல வே்ண்டாம் எனக் கூறினராம். ஆனால் இயக்குநர்கள் குழு அவரது குடும்பத்தினருக்கு உத்தரவாதம் அளித்த பிறகு அவர் மலையாளப் படத்தில் நடித்துள்ளார். அதன் பின் அவர் சீரியலில் நடிக்க வந்து தமிழ் மக்களைக் கவர்ந்துள்ளார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை