தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kanchivaram: மகளுக்கு பட்டு சேலையுடன் திருமணம் செய்ய விரும்பிய நெசவாளியின் கனவு காஞ்சிவரம்.. சிறந்த நடிப்பு பிரகாஷ் ராஜ்

Kanchivaram: மகளுக்கு பட்டு சேலையுடன் திருமணம் செய்ய விரும்பிய நெசவாளியின் கனவு காஞ்சிவரம்.. சிறந்த நடிப்பு பிரகாஷ் ராஜ்

Mar 13, 2024, 05:15 AM IST

google News
15 Years of Kanchivaram: மகளின் நிலையை கண்டு வேதனை அடைந்த வேங்கடம் இரவு உணவில் விஷம் சேர்த்து கொடுக்க தாமரை மரணிக்கிறார். தாமரை உடல் மீது தான் நெய்திருந்த பாதி சேலையை போர்த்துகிறார். தலையை மூடினால் கால்பக்கம் தெரிவதும் கால்களை மூடினால் முகம் தெரிகிறது. முழு உடலையும் போர்த்த முடியாத சோகம்
15 Years of Kanchivaram: மகளின் நிலையை கண்டு வேதனை அடைந்த வேங்கடம் இரவு உணவில் விஷம் சேர்த்து கொடுக்க தாமரை மரணிக்கிறார். தாமரை உடல் மீது தான் நெய்திருந்த பாதி சேலையை போர்த்துகிறார். தலையை மூடினால் கால்பக்கம் தெரிவதும் கால்களை மூடினால் முகம் தெரிகிறது. முழு உடலையும் போர்த்த முடியாத சோகம்

15 Years of Kanchivaram: மகளின் நிலையை கண்டு வேதனை அடைந்த வேங்கடம் இரவு உணவில் விஷம் சேர்த்து கொடுக்க தாமரை மரணிக்கிறார். தாமரை உடல் மீது தான் நெய்திருந்த பாதி சேலையை போர்த்துகிறார். தலையை மூடினால் கால்பக்கம் தெரிவதும் கால்களை மூடினால் முகம் தெரிகிறது. முழு உடலையும் போர்த்த முடியாத சோகம்

காஞ்சிவரம் 2009 மார்ச் 13 அன்று வெளியான படம். தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமான படமும் கூட. 1930 காலகட்டத்தில் நடக்கும் நெசவாளி ஒருவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். எப்போதும் வில்லனாக பார்த்து மனதில் பதிந்து போன பிரகாஷ் ராஜ் தான் இந்த கதையின் நாயகன். மனுசன் ஏழை நெசவாளியாக நடிக்க வில்லை வாழ்ந்திருக்கிறார். 

தனது கனவை விரட்டி ஓடும் நெசவாளியாக வேங்கடமாக மாறியிருக்கிறது பிரகாஷ் ராஜ் நடிப்பு. ஸ்ரேயா ரெட்டி அன்னம் என்ற கதாபாத்திரத்திலும் சம்மு தாமரையாகவும் நடித்துள்ளனர். காஞ்சிப்பட்டு என்பது உலகளவில் அளவில் அந்த ஊருக்கான அடையாளம். காஞ்சிபுரம் புராதனமான ஒரு நகரம். ஆன்மீகத்துக்கும் மன்னராட்சி காலத்தில் இருந்து பட்டாடைகளுக்கும் பெயர் பெற்ற நகரம். ஆனால் அந்த பட்டாடைகளை உருவாக்கும் நெசவாளி கனவை வைத்து பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் படம். 

ஊருக்கெல்லாம் சோறு போடும் விவசாயிக்கு பாரதி கனவு கண்ட கானி நிலம் கூட சொந்தம் கிடையாது. ஊருக்கெல்லாம் அரிசி தரும் பல விவசாயிகள் வீட்டின் அடுப்பில் பூனைகள் உறங்கும். அது போல ஊரில் எல்லோருக்கும் பட்டாடை செய்து தரும் நெசவாளி தனது மகளின் திருமணத்துக்கு பட்டு புடவை நெய்து தரவேண்டும் என்ற கனவையும் ஆசையையும் துரத்தி கொண்டு ஓடும் ஓட்டமே காஞ்சிவரம். 

தனது மனைவியாக வந்தவளும் தளதளவென பட்டு உடுத்தி வரவேண்டும் என்ற நெசவாளி வேங்கடத்தின் ஆசை. ஆனால் அது நிறைவேறவில்லை. தனது மகளையாவது திருமணத்தின் போது பட்டு உடுத்தி பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயம் தானே. இப்படி நியாயமான ஆசைகளோடு நமது மனித குலத்தின் பண்பாடுகளையுயம் வேறுபாடுகளையும் வர்க்க முரண்பாடுகளையும் படம் நெடுக பேசியிருக்கிறது. மனிதர்கள் பல்வேறு காரணங்களால் பிரிக்கப்பட்டு இருப்பதையும் சாதி அடிப்படையிலும் எந்த ஆதிக்கசக்தி களுக்கு எதிராக வினையாற்ற முடியாமல் கூனி குறுகி நிற்பதையும் அப்பட்டமாக தோலுரித்து காட்டுகிறது. 

இது மாதிரி படங்களை எடுப்பது அவ்வளவு எளிதல்ல. காஞ்சி க்கு சிறையில் இருந்து பரோலில் இருந்து கைவிலங்குடன் வரும் நேரத்தில் பெய்யும் மழையில் அவரது துயரங்களும் மழைத்துளிகளாக நினைவலைகளாக பின்னோக்கி நகர்கிறது. ஊரில் உள்ள ஜமின்தார் தனது மகளின் திருமணத்துக்காக வேங்கடத்திடம் சேலை செய்ய சொல்கிறார். அவரின் ஆசை கனவுகளையெல்லாம் சேர்த்து உருவாக்கிய பட்டு சேலையை ஆங்கிலேய அதிகாரிக்கும் ஜமின்தாருக்கும் பிடித்துப் போகிறது.

 எட்டு நூறு ரூபாய் செலவில் உருவான சேலையை நெய்தவனுக்கு கூலியாக ஏழு ரூபாயும் ஆங்கில அதிகாரிகள் பாராட்டும் அளவுக்கு தயார் செய்தவனுக்கு கூடுதலாக ஒரு ரூபாயும் சேர்த்து தருகிறார். கூலி என்பது கேட்பதல்ல நாங்கள் தருவது என்பதுதான் கொள்கை. அந்த சேலையை பார்க்க வேங்கடம் மனைவி அன்னத்துக்கு ஆசை வருகிறது. 

கல்யாணத்தின் போது பார்த்து கொள்ள சொல்லி விடுகிறார். இல்லாதவனின் அவலத்தை அழகாக காட்சிப்படுத்தி இருப்பார். இந்த நிலையில் பிறக்கும் மகள் தாமரை காதில் பட்டு சேலை அணிந்து திருமணம் செய்து வைப்பேன் என்று சொல்வதை எல்லோரும் பேராசையாக உணருவார்கள். 

இந்த ஆசையை நிறைவேற்ற அவர் படும் பாடுகள் பட்டு நூலை கோயிலில் நெய்யும் இடத்தில் இருந்து வாய்க்குள் வைத்து வீட்டுக்கு வந்து சேகரிக்க ஆரம்பிக்கிறார். இடையில் ஏற்படும் வாழ்க்கை பாடுகளில் மனைவியை இழக்கிறார். இவர்களோடு இனையும் கம்யூனிஸ்ட் எழுத்தாளரால் போராட்ட இயக்கங்கள், தனது மகளின் காதல் என்று நகரும் கதையில் போராட்டங்களும் கூலி கேட்டு போராடுகிறார்கள்.

போராட்டத்துக்கு ஒருகட்டத்தில் வேங்கடம் தலைமை ஏற்க தனது மகள் விரும்பும் ரங்கனின் தந்தையும் தனது நண்பருமான சாரதியும் துணை நிற்க ஜமின்தாரை எதிர்த்து கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கினர்.

போராட்டம் தீவிரமடைய இருபது சதவீத கூலி உயர்வு கொடுக்க ஜமீன் முன் வருகிறார். இந்த நேரத்தில் சாரதி மகன் பட்டாளத்தில் இருந்து ஒரு மாத காலம் விடுப்பில் வருகிறார். இந்த ஒருமாத காலத்தில் திருமணம் செய்ய மகளுக்கு பட்டு புடவை வேண்டுமே என்ற பரிதவிப்பில் இருபது சதவீத உயர்வு ஏற்று வேலைக்கு திரும்ப சம்மதிக்கிறார். 

ஜமின்தாரிடம் விலை போனதாக கருதி சாரதியும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் போராட்டத்தை தொடர்கின்றனர். வேலைக்கு போகும் வேங்கடம் மீதமிருக்கும் சேலையை நெய்வதற்கு பட்டு நூலை வாய்க்குள் திணித்துக்கொண்டு வெளியே வருகிறார். வெளியே சாரதி ஆட்கள் கேள்வி மேல் கேள்வி கேட்க வாய் மூடி நிற்கிறார். திடீரென வேங்கடத்துக்கு இருமல் வர வாய்க்குள் வைத்திருக்கும் பட்டு நூல் வெளியே விழுகிறது. 

திருட்டு பட்டம் கட்டி சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் தனது மகள் கிணற்றில் விழுந்து அடிபட்டு கவனிக்க ஆள் இன்றி கிடப்பதை பார்க்க இரண்டு நாள் பரோலில் தனது வீட்டுக்கு வருகிறார் வேங்கடம்.

மகளின் நிலையை கண்டு வேதனை அடைந்த வேங்கடம் இரவு உணவில் விஷம் சேர்த்து கொடுக்க தாமரை மரணிக்கிறார். இறந்து கிடக்கும் தாமரை உடல் மீது தான் நெய்திருந்த பாதி சேலையை போர்த்துகிறார். தலையை மூடினால் கால்பக்கம் தெரிவதும் கால்களை மூடினால் முகம் தெரிகிறது. முழு உடலையும் போர்த்தி பார்க்க முடியாத நிலையில் தனது இயலாமையில் வெடித்து சிரிக்கிறார் கண்கள் வெறித்த படி.

யதார்த்தம் மீறாமல் உழைக்கும் மக்களின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்திருப்பதில் இயக்குனர் பிரியதர்ஷனோடு ஒளிப்பதிவாளர் திருவுக்கும் இருக்கிறது. சுதந்திரபோராட்ட காலத்தை மையப்படுததிய படம் என்ற கதைக்களத்துக்கேற்ப சாபுசிரில் கலை இயக்கம் செய்துள்ளார். எம்.ஜி.ஶ்ரீகுமார் அமைதியாக இசைத்திருப்பது பல இடங்களில் சோகத்தின் துயரத்தை கூட்டுகிறது. 

இந்த படம் முன்னதாக டொரோண்டா சர்வதேச திரைப்ப விழவாவில் 2008ம் ஆண்டு செப்டம்பர்  28ம் தேதி வெளியானது. இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக 2009 மார்ச் 13ல் வெளியானது. இந்த திரைப்படம் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருது, சிறந்த படத்துக்கான விருது என்று இரண்டு தேசிய விருதுகள் பெற்றது. எந்தவித சமரசமும் இன்றி சாமானிய மனிதனின் சின்ன ஆசையை கூட நிறைவேற்ற படுகின்ற பாடுகளையும் இயலாமையையும் ஆற்றாமையையும் அழுத்தமாக சொன்ன தமிழ் சினிமாதான் காஞ்சிவரம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை