Kalki 2898 AD box office: 8 நாள் முடிவில் சாதித்து காட்டிய கல்கி 2898 AD.. சொல்லி அடித்த பிரபாஸ்
Jul 06, 2024, 10:40 AM IST
Kalki 2898 AD box office: பிரபாஸ் ஹீரோவாக நடித்து இருக்கும் கல்கி 2898 AD படத்தின் 8 நாள் வசூல் குறித்த விவரத்தை பார்க்கலாம்.
பிரபாஸ் ஹீரோவாக நடித்து, இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில், கடந்த ஜூன் 27ம் தேதி வெளியான திரைப்படம் கல்கி 2898 AD. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் உலக அளவில் 800 கோடியை தாண்டி வசூல் செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வசூல் எவ்வளவு?
படம் வெளியாகி 7 ஆம் நாளான நேற்று, இந்த திரைப்படம் 23.2 கோடி வரை வசூல் செய்து இருக்கிறது. இது படம் ரீலீஸ் ஆன நாள் வசூலோடு ஒப்பிடும் போது, 75 சதவீதம் குறைவாகும். இந்தியாவில் இந்த திரைப்படம் இதுவரை, 393.4 கோடி ரூபாய் வசூல் செய்து இருக்கிறது. தெலுங்கு பதிப்பில் இந்த திரைப்படம் 202.8 கோடி ரூபாயும், ஹிந்தியில் 152. 2 கோடி ரூபாயும் வசூல் செய்து இருக்கிறது
கல்கி படத்தின் கதை என்ன?
Kalki 2898 AD Review: குருசேத்திர போரில் அஸ்வத்தாமா உத்தரையின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை கொல்ல பிரம்மாஸ்திரத்தை ஏவுகிறான். இதனை கண்டு கொதித்த கிருஷ்ணர், அவனுக்கு சாகா வரத்தை அளித்து, அந்த குழந்தையாக தானே அவதரிப்பேன். அப்போது என்னை நீ காப்பாற்ற வேண்டும். அது வரை, இந்த பூமியில் நீ வேதனையோடு வாழ் என்று சாபம் கொடுத்து சென்று விடுகிறார்.
கல்கி அவதாரம் எங்கே தொடங்குகிறது?
படம் அப்படியே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதான எதிர் காலத்திற்கு செல்லுகிறது. அங்கு சுப்ரீம் பெரிய காம்ப்ளக்சை நிறுவி, அதில் பல கர்ப்பிணி பெண்களை உருவாக்கி, அவர்களிடம் இருந்து சீரத்தை எடுத்து கொண்டு இருக்கிறார். அங்கு சுமதியும் மாட்டிக்கொண்டு இருக்கிறாள்.
ஒரு கட்டத்தில் அவள் தன்னுடைய குழந்தைக்காக அங்கிருந்து தப்பித்து, உலக மாற்ற விடுதலைக்காக காம்ப் ளக்சிற்கு எதிராக போராடிக்கொண்டு இருக்கும் ஷம்பாலா கும்பலிடம் தஞ்சம் அடைகிறாள். ஒரு கட்டத்தில் சுமதி வயிற்றில் இருக்கும் குழந்தைதான் அந்த கடவுள் என தெரிய வருகிறது. அதன் பின்னர் என்ன ஆனது என்பதே கல்கி படத்தின் கதை.
படத்தின் முதல் பலம் படத்தின் கிராஃபிக்ஸ். காம்ப்ளக்ஸ், அதில் இருக்கும் விஷயங்கள் என அனைத்தையும் பெரும் உழைப்பு கொடுத்து ஒவ்வொரு காட்சியையும் செதில், செதிலாக செதுக்கி இருக்கிறார்கள். இரண்டாவது படத்தின் பின்னணி இசை. சலிப்பு தட்டும் ஒவ்வொரு காட்சியையும் இரு பக்க தோள் கொடுத்து, சுவாரசியமாக்க முயன்று இருக்கிறார் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். படத்தின் கலை இயக்கம், வாயை பிளக்க வைக்கிறது.
திரைக்கதையில் சரிவு உள்ளதா?
இவ்வளவு சிறப்புகள் இருந்தும் திரைக்கதையில் துளி கூட சுவாரசியம் இல்லாத காரணத்தால் கல்கி வைரமாக ஜொலிக்கமால், வெறும் கல்லாக உருண்டு கிடக்கிறது. படத்தில் கமல், அமிதாப், தீபிகா தொடங்கி விஜய் தேவர கொண்டா வரை அவ்வளவு நட்சத்திரங்கள். ஆனால் எந்த கதாபாத்திரமும் மனதில் நிற்கவில்லை.
படத்தின் ஹீரோ பிரபாசை வழக்கம் போல பட்ஜெட்டிற்காக தூக்கி போட்டு இருக்கிறார்கள். அவருக்கு புச்சி என்ற கார் வேறு.. அதற்கு பின்னணி குரல் கொடுத்து இருக்கும் கீர்த்தியின் குரல் கேட்க நன்றாக இருந்தது. மஹாபாராத கதை, நட்சத்திர பட்டாளம், பிரமாண்ட கிராஃபிக்ஸ் என அனைத்தும் கொண்டு பிரபாசிற்கு மீண்டும் ஒரு பிளாப்பை பரிசாக கொடுத்து இருக்கிறார் இயக்குநர் நாக் அஸ்வின். கிராஃபிக்காக வேண்டுமென்றால் குழந்தைகளை அழைத்து ஒரு முறை சென்று வரலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்