தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajinikanth: நீசமான நீலாம்பரி கேரக்டர்.. படையப்பா ரீல் பெட்டியை தூக்கிய ஜெயலலிதா.. மரணபீதி அடைந்த கே.எஸ்.ரவி!

Rajinikanth: நீசமான நீலாம்பரி கேரக்டர்.. படையப்பா ரீல் பெட்டியை தூக்கிய ஜெயலலிதா.. மரணபீதி அடைந்த கே.எஸ்.ரவி!

Sep 25, 2023, 05:30 AM IST

google News
படையப்பா திரைப்படத்தின் ரீலை ஜெயலலிதா தூக்கிச்சென்ற சம்பவம் குறித்து கே.எஸ்.ரவிக்குமார் பகிர்ந்து இருக்கிறார்.
படையப்பா திரைப்படத்தின் ரீலை ஜெயலலிதா தூக்கிச்சென்ற சம்பவம் குறித்து கே.எஸ்.ரவிக்குமார் பகிர்ந்து இருக்கிறார்.

படையப்பா திரைப்படத்தின் ரீலை ஜெயலலிதா தூக்கிச்சென்ற சம்பவம் குறித்து கே.எஸ்.ரவிக்குமார் பகிர்ந்து இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, “படைப்பா திரைப்படத்தின் புட்டேஜ் முதலில் 4 மணி நேரத்திற்கு இருந்தது.  படம் பார்த்தவர்கள் அனைவரும், படத்தின் நீளத்தை குறைக்கச் சொன்னார்கள். நான் எடிட் செய்து படத்தை மீண்டும் போட்டு காண்பித்தேன். அதனை ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பார்த்தனர். 

படம் பார்த்து விட்டு வெளியே வந்த ரஜினி சார், வெறுமனே ஓகே என்று சொல்லி கை கொடுத்து விட்டு சென்று விட்டார். எனக்கு ஒரே வருத்தம். காரணம் என்னவென்றால், படம் முடித்து விட்டு பார்ட்டி என்று அவர் சொல்லியிருந்தார். அதைப்பற்றி அவர் எதுவும் பேசாத காரணத்தால், நான் தலையை பிய்த்துக்கொண்டு இருந்தேன். 

இரவு 11 மணிக்கு அவரிடம் இருந்து அழைப்பு வந்தது. பார்ட்டிக்கு கூப்பிடாததிற்கான காரணத்தை கூறினார்.  படம் ஓடிக்கொண்டிருக்கும் போது, படம் பார்த்த அவரின் நண்பர்கள் குசுகுசுவென எதையோ பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளத்தான், என்னை அழைத்து செல்ல வில்லை என்று அவர் சொன்னார். 

அங்கு அவர்கள் ரஜினிசாரிடம் இந்தத்திரைப்படத்திற்கு பேசாமல் நீலாம்பரி என்று பெயர் வைத்திருக்கலாம். காரணம் படம் முழுக்க அவள்தான் ஆட்சி செய்கிறாள் என்று சொல்லி இருக்கிறார்கள். இதனை ரஜினி சார் என்னிடம் வந்து சொன்னார். உடனே அவரிடம், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டேன். எனக்கு படம் சூப்பராக இருக்கிறது. ரிலீஸூக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னார். 

இதில் இன்னொரு சுவாரசியமான சம்பவம் என்னவென்றால்,  ஆல்பர்ட் தியேட்டரில் இருந்து இந்தப்படத்தின் ரீலை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அம்மா வாங்கி, அவரது வீட்டில் இருக்கும் தியேட்டரிலேயே போட்டு பார்த்திருக்கிறார். இதைக்கேள்விப்பட்ட எனக்கு உள்ளுக்குள் பக்.. பக் .. என்று இருந்தது. காரணம், நீலாம்பரி கதாபாத்திரத்தை நான், அவரை மனதில் வைத்துதான் எழுதினேன். அடுத்தநாள் எனக்கு போனே வரவில்லை. உடனே நான் ரஜினி சாரிடம் கேட்டேன். அவர் அம்மாவுக்கு படம் மிகவும் பிடித்து விட்டது. குறிப்பாக நீலாம்பரி கேரக்டரை அவர் மிகவும் விரும்பி பார்த்து இருக்கிறார் என்றார்.” என்று பேசினார் 

நன்றி: டூரிங் டாக்கீஸ் 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி