திருப்பதியில் சிங்கிளாக ஏழுமலையானை தரிசித்த ஜோதிகா! ரசிகர்கள் கொடுத்த அன்பு பரிசு - சூர்யா எங்கே போனார்?
Nov 27, 2024, 06:20 PM IST
சூர்யா இல்லாமல் திருப்பதிக்கு சிங்களாக வந்து ஏழுமலையானை சாமி தரிசனம் செய்துள்ளார் நடிகை ஜோதிகா. அதிகாலையிலேயே அவர் தரிசனம் மேற்கொண்டுள்ளார். அப்போது ரசிகர்கள் கொடுத்த அன்பு பரிசையும் பெற்றுக்கொண்டார்.
கங்குவா படத்துக்கு வந்த எதிர்மறையான விமர்சனங்களை விமர்சித்து கோபமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் நடிகை ஜோதிகா. அதில், எதிர்மறையான கருத்துக்களை வெளியிடுபவர்கள் சினிமாவிற்காக வேறு எதனையும் செய்யவில்லை. நான் சூர்யாவின் மனைவியாக, இல்லாமல், ஜோதிகாவாகவும், சினிமாவை காதலிப்பவளாகவும் இதை எழுதுகிறேன்" குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும் கங்குவா படத்துக்கு எதிரான விமர்சனங்கள் குறைந்தபாடில்லை. தற்போது பேமிலி ஆடியன்ஸ் வருகையால் படத்தின் வசூல் ரூ. 100 கோடியை கடந்துள்ளது. இருப்பினும் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் கங்குவா தோல்வி படமாகவே பார்க்கப்படுகிறது.
கங்குவா தோல்வியால் ஏற்பட்ட மனவருதத்தில் இருந்து மீளும் விதமாக சூர்யா, ஜோதிகா ஆகியோர் கோயில் கோயிலாக சுற்று வருவதாக தெரிகிறது. முதலில் சென்னையை அடுத்த சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு கங்குவா இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் சென்று சாமி தரிசனம் செய்தார் நடிகர் சூர்யா.
அதன் பிறகு, நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன், கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததோடு, சண்டி யாகத்திலும் ஈடுபட்டுள்ளார்.
திருப்பதியில் சாமி தரிசனம்
இதையடுத்து நடிகை ஜோதிகா மட்டும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். காலையில் ஏழுமலையான் கோயில் ஸ்ரீவாரி தரிசனத்தில் பங்கேற்றார். சாமி தரிசனத்துக்கு பின் கோயிலில் இருந்து ஜோதிகா வெளியே வந்தபோது ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். பின்னர் ரசிகர்கள் ஏழுமைலையான் புகைப்படத்தை ஜோதிகாவுக்கு அன்பளிப்பாக வழங்கிய நிலையில் அதை பெற்றுக்கொண்டார்.
நேற்று கர்நாடகாவில் தனது கணவர் சூர்யாவுடன் இணைந்து முகாம்பிகை கோயிலில் சாமி தரிசனம் செய்த ஜோதிகா, இன்று திருப்பதி எழுமலையானை சிங்கிளாக வந்து தரிசனம் செய்துள்ளார்.
கர்நாடாக, ஆந்திராவை தொடர்ந்து அடுத்து தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்தில் நடிகை ஜோதிகா ஏதாவது பிரசித்தி பெற்ற கோயில்களில் சாமி தரிசனம் செய்யலாம் என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மாசாணி அம்மன் கோயிலில் சூர்யா 45 பூஜை
ஜோதிகா திருப்பதி சென்றிருக்கும் நிலையில், நடிகர் சூர்யா பொள்ளாச்சி அருகே ஆனைமலை பகுதியில் அமைந்திருக்கும் மாசாணி அம்மன் கோயிலில் நடைபெற்ற தனது புதிய படத்தின் பூஜையில் பங்கேற்றார். ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு சூர்யா 45 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் சூர்யாவுடன் இணைந்து த்ரிஷா நடிக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரபு தயாரிக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
சூர்யா 45 படம் பூஜையுடன் தொடங்கியிருக்கும் நிலையில், 45 நாள்கள் பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
ஜோதிகா படங்கள்
ஜோதிகா நடிப்பில் இந்த ஆண்டில் சைத்தான், ஸ்ரீகாந்த் என இரண்டு இந்தி படங்கள் வெளியாகின. இந்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த படங்களை தொடர்ந்து டப்பா கார்டல் என்ற இந்த படம் ஒன்றிலும் நடித்துள்ளார்.
கடைசியாக ஜோதிகா தமிழில் நடித்த உடன்பிறப்பே படம் 2021இல் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு அவர் பாலிவுட் பக்கம் ஒதுங்கியுள்ளார்.
டாபிக்ஸ்