Jigarthanda DoubleX Review: ‘ஜிகர்தண்டா.. தித்திக்குதா? புளிக்குதா?’ விமர்சனம் இதோ!
Nov 10, 2023, 12:28 PM IST
Jigarthanda DoubleX Review: ‘இரண்டாம் பாகம் எடுக்கிறோம்.. அந்த கதையின் பிளாட்டை அப்படியே வைத்து கதையை நகர்த்தாமல், முற்றிலும் வேறு கதை களத்தை தொட்டு இருப்பதற்கு சல்யூட் கார்த்திக்’
Jigarthanda DoubleX Review: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், பாபி சிம்ஹா, சித்தார்த் உள்ளிட்ட பலரது நடிப்பில், கடந்த 2014 ம் ஆண்டு வெளியாகி, மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது ஜிகிர் தண்டா.
இந்தப்படத்தின் இரண்டாவது பாகமாக இன்று வெளியாகி இருக்கிறது ஜிகிர் தண்டா டபுள் எக்ஸ். எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் முதன்மை கதாபாத்திரங்களாக நடித்திருக்கும் இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனே இசையமைத்து இருக்கிறார்.
கதையின் கரு:
சப் இன்ஸ்பெக்டராகி காதலியை கரம்பிடித்து வாழ்க்கையை இன்ப மயமாக கொண்டு செல்ல நினைக்கும் ரேசரின் வாழ்க்கையை சம்பவம் ஒன்றில் தடம் புரட்டி போடுகிறார் சீசர். அதனால் சிறைக்குள் செல்லும் ரேசருக்கு, வெளியே சென்று சீசரை கொல்லும் வாய்ப்பை காவல்துறையே கொடுக்கிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் ரேசர் அவரை கொல்ல சினிமா என்ற ஆயுதத்தை கையில் எடுக்கிறார். சீசரும் இந்திய சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ என்று ஆசை வெளியில் அசால்ட்டாக களம் இறங்குகிறார். அடுத்து என்ன நடந்தது, இயல்பிலேயே தொ டை நடுங்கியாக இருக்கும் ரேசர் அதை எப்படி சாத்திய படுத்தினார், அங்கு சினிமா வின் பங்கு என்ன? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிக்கதை.
பாகம் ஒன்றில் கேங்ஸ்டர் சேதுவாக மிரட்டி இருந்தவர் பாபி. அந்த கேரக்டரின் பிரதி பலிப்பாக இந்த படத்தில் சீசராய் நடித்து இருக்கிறார் ராகவா லாரன்ஸ். ஆக்சன் அவதாரத்தில் அந்த அளவு மிரட்டவில்லை என்றாலும், அவர் வெளிப்படுத்தி இருக்கும் அளவான நடிப்பு ரசிக்க வைக்கிறது. இயக்குனர் கதாபாத்திரத்தில் எஸ். ஜே. சூர்யா வெளிப்படுத்தி இருக்கும் நுண்ணிய நடிப்பு அவர் நடிப்பு பக்கத்தின் இன்னொரு பரிணாமத்தை விரித்து காண்பிக்கிறது. ராகவா லாரன்ஸின் மனைவியாக வரும் நிமிஷாவின் நடிப்பு மிரட்டல். சட்டானியாக நடித்து இருக்கும் வில்லன் நடிப்பு அதகளம்.
இரண்டாம் பாகம் எடுக்கிறோம்.. அந்த கதையின் பிளாட்டை அப்படியே வைத்து கதையை நகர்த்தாமல், முற்றிலும் வேறு கதை களத்தை தொட்டு இருப்பதற்கு சல்யூட் கார்த்திக்.
பழங்குடிகளின் வாழ்க்கையையும், தங்களின் நிலத்துக்கு அவர்கள் கொடுக்கும் நேர்மையையும், நெடும் காலமாக அரசியலில் சிக்குண்டு இடக்கும் அவர் களின் நிலைமையும் ஈரம் கொண்டு காட்சிப்படுத்தி இருக்கிறார். யானை தொடர்பான அத்தனை கிராஃபிக்ஸ் காட்சிகள் தத்ரூபம்.
சண்டைக்காட்சிகளில் காட்ட பட்ட வித்தியாசம் கவனிக்க வைக்கிறது. பின்னணி இசையில் சந்தோஷ் அழுத்தமான முத்திரையை பதித்து இருக்கிறார். இரண்டாம் பாதியில் இருந்த வேகம் முதல் பாதியில் இல்லாதது படத்தின் பலவீனம். ஆனாலும் கலை கொண்டு கார்த்தி விரித்த வலை, சினிமா நெஞ்சுக்குள் இறங்காமல் இல்லை.
டாபிக்ஸ்