தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Urvashi: ‘முருங்கை காய் முதல் மாம்பழம் வரை’ ஊர்வசி ‘டேக் இட் ஈஸி பாலிசி’!

HBD Urvashi: ‘முருங்கை காய் முதல் மாம்பழம் வரை’ ஊர்வசி ‘டேக் இட் ஈஸி பாலிசி’!

Jan 25, 2023, 06:15 AM IST

google News
பெண்களின் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருப்பதில்லை ஆண்களை சுற்றியே படங்கள் உள்ளது என்று வெளிப்படையாக தன் துறை சார்ந்த விமர்சனத்தை ஊர்வசி வெளிப்படுத்தியவர்.
பெண்களின் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருப்பதில்லை ஆண்களை சுற்றியே படங்கள் உள்ளது என்று வெளிப்படையாக தன் துறை சார்ந்த விமர்சனத்தை ஊர்வசி வெளிப்படுத்தியவர்.

பெண்களின் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருப்பதில்லை ஆண்களை சுற்றியே படங்கள் உள்ளது என்று வெளிப்படையாக தன் துறை சார்ந்த விமர்சனத்தை ஊர்வசி வெளிப்படுத்தியவர்.

‘நீ ஜெயிச்சுருடா மாறா...’ ஊர்வசியின் அந்த குரல் இருக்கே...!

தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகைகளில் தனக்கென தனி இடம் பிடித்தவர் ஊர்வசி. தமிழில் இயக்குநர் பாக்கியராஜின் முந்தானை முடிச்சில் தனது 13 வயதில் முருங்கை காயுடன் நாயகியாக அறிமுகமானார்.

ஊர்வசி 25 ஜனவரி 1969ல் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சபரா விபி நாயர் விஜயலட்சுமி தம்பதியின் மகளாக பிறந்தவர். அவரது இயற்பெயர் கவிதா ரஞ்சனி. ஆனால் இவர் திரை உலகில் ஊர்வசி என்ற பெயரிலேயே பிரபலமானார். இவரது சகோதரிகள் கலாரஞ்சனி, கல்பானா. இவரது தாய் தந்தை நாடக நடிகர்களாக இருந்த நிலையில் சகோதரிகள் மூவருமே சிறந்த நடிகைகளாக இருந்தனர். அவரது சகோதரர்கள் பிரின்ஸ், கமல்ராய் ஆகியோரும் நடிகர்களாக இருந்தனர்.

1977ல் விதரொன்ன மொட்டுக்கள் என்ற திரைப்படத்தில் 8 வயதில் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஊர்வசி. அதேபடத்தில் அவரது சகோதரி கல்பனாவும் அறிமுகமானார்.

1986ம் ஆண்டு மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்த சுகமோ தேவி திரைப்படம் ஊர்வசியின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. அந்த படத்தை தொடர்ந்து ஒரே ஆண்டில் சுமார் 7 படங்கள் வரை நடிக்கத் தொடங்கினார். இதனால் தனது படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இளம் வயதிலேயே நடிப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த எந்த கதாபாத்திரங்களிலும் நடிக்க ஊர்வசி தயங்கியதில்லை. முந்தானை முடிச்சில் வெகுளியாக அறிமுகமான ஊர்வசி தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழி படங்களில் பிரதானமாக நடித்துள்ளார். 1994ம் ஆண்டு வெளியான மகளிர் மட்டும் திரைப்படத்தில் ஊர்வசியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

ஹீரோயினாக மட்டும் இல்லாமல் காமெடி, குணச்சித்திர வேடங்களிலும் தனது முத்திரையை பதித்தார். தமிழில் கமலுடன் இணைந்த மைக்கேல் மதன காமராஜ் திரைப்படம் பெறும் வெற்றி பெற்றதை தொடர்ந்து நகைச்சுவை நடிப்பிலும் தனது முத்திரையை பதிக்க துவங்கினார். உலக நாயகன் கமல்ஹாசன் ஒரு பேட்டியில் தனக்கு ஊர்வசி மற்றும் ஸ்ரீதேவியுடன் நடிக்கும் போதுதான் கொஞ்சம் பதற்றமாக இருக்கும் என்றார் . 1995 ம் ஆண்டில் கழகம் திரைப்படத்தில் நடிக்க ஊர்வசி சம்பளம் வாங்காத நிலையில் அந்த படத்திற்கு தான் கேரள அரசின் விருது கிடைத்தது.

இவர் முதலில் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனை திருமணம் செய்து கொண்டார். முதல் கணவருடன் விவாகரத்து ஆன நிலையில் தனது 47 வது வயதில் 2014ம் ஆண்டு சிவ பிரசாத் என்பரை திருமணம் செய்து கொண்டார். வெள்ளித்திரையில் அம்மாவாக வெற்றிகரமாக இருந்தபோதே சின்னத்திரையிலும் கால் பதித்தார்.

பெரும்பாலும் நடிகைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு திரையில் இருந்து ஓரங்கட்டப்படும் சவால்களை சந்திக்கும் சூழல் உருவாகும். ஆனால் ஊர்வசி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிப்படங்களில் பணியாற்றி உள்ளார்.

ஆனால் பஞ்ச தந்திரம், சிவா மனசுல சக்தி, மலைக்கோட்டை வாமனன், வணக்கம் சென்னை உள்ளிட்ட படங்களில் தனது முத்திரையை பதித்தார். சமீபகாலங்களில் மூக்குத்தி அம்மன், சூரரைப்போற்று போன்ற படங்களில் தனது அழுத்தமான முத்திரையை பதித்தார்.

இந்த நிலையில் தான் 54 வயதில் தைரியமாக வீட்டில விஷேசங்க படத்தில் மீண்டும் சத்திய ராஜூடன் இணைந்து ஹீரோயினாக நடித்தார். அதில் முதிர்ந்த வயதில் தாயாகும் பெண்களின் எதார்த்தமான சிக்கலை தனது நடிப்பின் மூலம் நகைச்சுவையோடும் வெளிப்படுத்தினார்.

திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்தபோதே தென்னிந்திய திரை உலகில் ஆணாதிக்கம் அதிகம் உள்ளது. திரைப்படங்களில் பெண்களின் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருப்பதில்லை ஆண்களை சுற்றியே படங்கள் உள்ளது என்று வெளிப்படையாக தன் துறை சார்ந்த விமர்சனத்தை வெளிப்படுத்தினார்.

ஆரம்ப நாட்களில் திரைப்படங்களில் பெண்ணின் குரல் இனிமையாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் ஊர்வசிக்கு வேறு ஒருவரின் குரல் தான் கொடுக்கப்பட்டது. ஆனால் ஒரு கட்டத்தில் தன் படத்தில் தான் குரல் கொடுப்பேன் என்று பிடிவாதத்துடன் இருந்தார். அந்த குரலைத்தான் சூரரைப் போற்று திரைப்படத்தில் அவன் பறக்க போகிறான் என்று பேச்சி சொல்கிறாள்.தன்னைப்போல் பிறரையும் பறக்க வைக்காமல் அவன் ஓயமாட்டான். ஜெயிச்சுருடா மாறா என்று இன்றைய இளம் தலைமுறை மத்தியிலும் தன் இருப்பை தன் குரல் வழியாக அழுத்தமாக பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முருங்கை காயில் தொடங்கிய பயணம், வீட்ல விசேஷம் படத்தில் மாங்கானி வரை தொடர்கிறது. இதெல்லாம் யாரால் முடியும்? ‘டேக் இட் ஈஸி பாலிசி’ ஊர்வசியால் மட்டுமே முடியும்! இன்னும் இளமையாக பல்லாண்டு வாழ்க!

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி