தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jackie Chan: ஜாக்கி சான் பற்றி அறியாத 10 சுவாரசியத் தகவல்கள்

Jackie Chan: ஜாக்கி சான் பற்றி அறியாத 10 சுவாரசியத் தகவல்கள்

Manigandan K T HT Tamil

Apr 07, 2023, 05:30 AM IST

google News
Jackie Chan Birthday: 17 வயதில், புரூஸ் லீயின் ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி மற்றும் எண்ட்டர் த டிராகன் ஆகிய திரைப்படங்களுக்கு சண்டைக் கலைஞராகப் பணியாற்றி திரை வாழ்க்கையைத் தொடங்கினார் ஜாக்கி சான்.
Jackie Chan Birthday: 17 வயதில், புரூஸ் லீயின் ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி மற்றும் எண்ட்டர் த டிராகன் ஆகிய திரைப்படங்களுக்கு சண்டைக் கலைஞராகப் பணியாற்றி திரை வாழ்க்கையைத் தொடங்கினார் ஜாக்கி சான்.

Jackie Chan Birthday: 17 வயதில், புரூஸ் லீயின் ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி மற்றும் எண்ட்டர் த டிராகன் ஆகிய திரைப்படங்களுக்கு சண்டைக் கலைஞராகப் பணியாற்றி திரை வாழ்க்கையைத் தொடங்கினார் ஜாக்கி சான்.

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுக்க தனது நகைச்சுவை கலந்த சண்டை காட்சிகளுடன் கூடிய திறமையான நடிப்பால் பல கோடி ரசிகர்களை தன்வசம் வைத்திருக்கும் திரைக் கலைஞர் ஜாக்கி சான்.

இவரது பிறந்த தினம் ஏப்ரல் 7. 1954 ம் ஆண்டு அவர் பிறந்தார்.

அவரது ஆரம்ப காலத்தில் கராத்தே எனும் தற்காப்புக் கலையை கற்றுக்கொள்ள அவர் பட்ட கஷ்டத்தையும், அவர் சினிமாவில் இடம் பெரும் சண்டை காட்சிகளுக்காக தன்னை வருத்திக்கொண்டதையும் படிக்கும்போது சிலிர்க்கும்.

நடிகர், சண்டை இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், தயாரிப்பாளர், தற்காப்புக் கலைஞர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர் ஜாக்கி சான்.

ஜாக்கி சான் 1954 இல் ஹாங் காங்கின் பழைய கிரௌன் காலனியில் உள்ள விக்டோரியா பீக்கில் (Victoria Peak) பிறந்தார், அவரது இயற்பெயர் சான் காங் சாங்.

இவர் சீன உள்நாட்டுப் போர் அகதிகளான சார்லஸ் (Charles) மற்றும் லீலீ சான் (Lee-Lee Chan) ஆகிய தம்பதியருக்கு பிறந்தார்.

அவருடைய பெற்றோர் ஹாங்காங்குக்கான பிரெஞ்சு தூதருக்காக பணிபுரிந்து கொண்டிருந்ததால், ஜாக்கி தனது வளரும் பருவத்தை விக்டோரியா பீக் மாவட்டத்திலிருந்த தூதரகப் பகுதிகளிலேயே செலவழித்தார்.

அவரது தந்தை அமெரிக்க தூதரகத்திற்கு தலைமை சமையல்காரராக பணிபுரிய ஆஸ்திரேலியாவின் கேன்பெராவுக்கு (Canberra) குடிபெயர்ந்தார். பின்னர் ஜாக்கி சீனா ட்ராமா அகாடமிக்கு அனுப்பப்பட்டார், அது பெக்கிங் ஓபெரா ஸ்கூல் ஆகும். அதை மாஸ்டர் யூ ஜிம் யுவேன் என்பவர் நடத்திவந்தார்.

இங்கு தான் ஜாக்கி சான், தற்காப்புக் கலைகளிலும் அக்ரோபாட்டிக்ஸிலும் கடுமையான பயிற்சி பெற்றார்.

பின்னர் நாடகக் குழுவில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.

17 வயதில், புரூஸ் லீயின் ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி மற்றும் எண்ட்டர் த டிராகன் ஆகிய திரைப்படங்களுக்கு சண்டைக் கலைஞராகப் பணியாற்றி திரை வாழ்க்கையைத் தொடங்கினார் ஜாக்கி சான்.

எத்தனையோ முறை சண்டைக் காட்சிகளில் நடிக்கும் கீழே விழுந்து உடலில் அடிபட்டிருக்கிறது. எலும்பு நொறுங்கி இருக்கிறது. ஆனாலும், அனைத்து காயங்களையும் சவால்களையும் கடந்து வந்தார் ஜாக்கி சான்.

இளம் வயதில் ஜாக்கி சான்

டிரங்கன் மாஸ்டர், போலீஸ் ஸ்டோரி, ரஷ் அவர், த கராத்தே கிட் என இவர் நடித்த பெரும்பாலான படங்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஜாக்கி சானை பற்றி தெரியாத 10 உண்மைகள்

*ஆர்மர் ஆஃப் காட் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஜாக்கி சானின் மண்டை ஓட்டில் நிரந்தர பிளாஸ்டிக் பிளக் உள்ளது.

*ஜாக்கி சானுக்கு 2012 ஆம் ஆண்டு வெளியான சைனீஸ் சோடியாக் திரைப்படத்திற்காக இரண்டு கின்னஸ் உலக சாதனைகள் வழங்கப்பட்டது: ஒன்று "உயிருள்ள நடிகரால் நிகழ்த்தப்பட்ட பெரும்பாலான ஸ்டண்ட்ஸ்" மற்றும் "ஒரு திரைப்படத்தில் அதிக கிரெடிட்ஸ்" என்பதற்காக ஒன்று. அந்த படத்தில் அவருக்கு 15 கிரெடிட்கள் இருந்தன. அதாவது, இயக்கம், தயாரிப்பு, கேமிரா, நடிகர் என்பது போன்று.

*ஒரு மீனைப் பயிற்றுவிப்பது சாத்தியம், மேலும் ஜாக்கி சான் மாண்டரின் மற்றும் ஆங்கிலத்தில் கேட்ஃபிஷ் தந்திரங்களைக் கற்றுக் கொடுத்தார்.

*ஜாக்கி சான் 7 மொழிகளில் பேசுவார்: கான்டோனீஸ், மாண்டரின், ஆங்கிலம், ஜெர்மன், கொரியன், ஜப்பானிய மற்றும் தாய் மற்றும் அமெரிக்க சைகை மொழி.

*அருமையான பாடகரும் கூட.

*கிக் பாக்ஸிங் உலக சாம்பியனுடன் ஒரு முறை ஷூட்டிங்கில் சண்டை போடும்போது அவர் நிஜமாகவே ஜாக்கி சானை அடித்து விட்டார். கோபமடைந்த ஜாக்கி, அவருக்கு சில குத்துக்களை விட்டார்.

*தனது மகனுக்கு தான் சேர்த்த சொத்துகள் கிடையாது என்று கூறிவிட்டார் ஜாக்கி சான். அவர் திறமையானவர் என்றால் அவரால் என்னை விட அதிகம் சம்பாதிக்க முடியும் என்று அவர் கூறினார்.

*ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்தபோது ஜாக்கி என்ற பெயர் அவருக்கு கிடைத்தது. அவரது நிஜ பெயர் சான் காங்-சங்.

*புரூஸ் லீ படங்களில் ஸ்டன்ட்மேனாக தான் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார்.

*Armour of God படத்தில் நிஜமாகவே பிளேனில் இருந்து குதித்து ஏர் பலூன் மீது நின்றார்.

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி