சகோதர்கள் என்று தெரியாமல் சண்டை - விவசாயம் முக்கியம் - அப்பவே தமிழ் சினிமா வேற மாறி!
Jun 26, 2023, 05:00 AM IST
64 years of Uzhavukkum Thozhilukkum Vandhanai Seivom: உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் திரைப்படம் வெளியாக இன்றுடன் 64 ஆண்டுகள் ஆகிகின்றன.
விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கக் கூடியது தான் நமது நாடு. நமது நாட்டின் முதுகெலும்பு விவசாயம் தான். ஆண்டாண்டு காலமாகத் தமிழ் சினிமா தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை விவசாயத்தின் தேவை குறித்து பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன.
அப்படி 1959 ஆம் ஆண்டு இயக்குநர் எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.
கதை
கணபதி இறந்த பிறகு ஒரு ஏழை பெண்மணி தனது இரண்டு மகன்களையும் வளர்ப்பதற்கு மிகவும் கஷ்டப்படுகிறார். அதனால் மூத்த மகனை ஆலை உரிமையாளர் ஒருவர் தத்தெடுத்துச் செல்கிறார்.
அதன் காரணமாக அந்த மூத்த மகன் ஆலைக்கு முதலாளி ஆகின்றார். இளைய மகன் அந்த ஆலையிலேயே தொழிலாளியாக வேலை செய்கிறார். சகோதரர்கள் இரண்டு பேரும் ஒரே பெண்ணை காதலிக்கின்றனர்.
இதுகுறித்து அறிந்த அண்ணன் தனது தம்பியை வேலையில் இருந்து நீக்கி விடுகிறார். தனது தாயோடு சேர்ந்து அந்த தம்பி சிறுநீரகத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார். பின்னர் அவர் வளர்ச்சி அடைந்த காரணத்தினால் ஆலையில் வேலை செய்த பல தொழிலாளிகள் இவரது நிலத்தில் வேலை செய்ய வருகின்றனர்.
இதில் ஆத்திரமடைந்த அண்ணன், தம்பியின் வயல்களை நாசம் செய்கிறார். அந்த இளம் பெண்ணிற்கு அண்ணனின் இந்த செயல் பிடிக்காத காரணத்தினால் இதுகுறித்து தம்பிக்குத் தகவல் தெரிவிக்கிறார். அதனால் அங்கு வேலை செய்யும் தொழிலாளிகள் உயிர் தப்பிக்கின்றனர். கடைசியில் வயல்வெளி நிலை என்ன?, இரண்டு சகோதரர்களும் இணைந்தார்களா? என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ்.
இந்த திரைப்படத்திற்கு கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார். படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட் அடித்தன.
இந்த திரைப்படத்தில் மலையாள நடிகரான பிரேம் நசீர் நடித்திருந்தார். மலையாள சினிமாவில் கொடிகட்டிப் பறந்த மிகப்பெரிய நடிகர் தான் பிரேம் நசீர். இவர் இந்த திரைப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயத்தின் மூலம் வெற்றியும் பெற முடியும், அதே சமயம் விவசாயம் தான் நமது உயிர் நாடி என்பதை இந்த திரைப்படம் குடும்ப வாழ்க்கையோடு சேர்த்துக் குறிப்பிட்டிருக்கும். இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 64 ஆண்டுகள் ஆகின்றன. விவசாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததன் காரணமாகவே இன்றும் இந்த திரைப்படம் பேசப்படுகிறது. சமூக சீர்திருத்தத்தை எடுத்துக் கூறும் திரைப்படங்கள் காலத்தால் அழியாத சரித்திர குறியீடு.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்