Kallukkul Eeram: புதுமுகங்களின் புரட்சி.. தரம் மாறாமல் இருக்கும் கல்லுக்குள் ஈரம்
Feb 29, 2024, 06:00 AM IST
கல்லுக்குள் ஈரம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 44 ஆண்டுகளாகின்றன.
இயக்குனர்களின் இமயமாக வாழ்ந்து கொண்டிருப்பவர் பாரதிராஜா. தனக்கென மிகப் பெரிய சரித்திரத்தில் தமிழ் சினிமாவில் உருவாக்கியவர். எளிமையான மக்களின் வாழ்க்கை முறையை திரையில் காட்டில் மிகப்பெரிய வெற்றி கொண்டாட்டத்தில் திழைத்தவர். கிராமத்து வாசனையை திரையில் காட்டி அனைத்து மக்களும் ரசிக்கும் படி ஒரு புதிய சகாப்தத்தை படைத்தவர் இவர்.
தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய எத்தனையோ உச்ச நட்சத்திரங்கள் இவருடைய அறிமுகத்தில் உருவானவர்கள் தான். கார்த்திக், ராதிகா, ராதா என பலரையும் கலை நாயகர்களாக உருவாக்கியவர் இவர்தான்.
திரையில் அவ்வப்போது ஒரு சில காட்சிகளில் வந்து சென்றாலும் இவரை கதையின் நாயகனாக திரையில் காட்டி வெற்றி பெற்றவர் இயக்குனர் நிவாஸ். இவர் பாரதிராஜாவிடம் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர். ஒளிப்பதிவாளர் இயக்குனராக அவதாரம் எடுத்த திரைப்படம் தான் கல்லுக்குள் ஈரம்.
இந்த திரைப்படம் டைரக்டர் குறித்த கதை அதனால் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என நிவாஸ் பாரதிராஜாவை கட்டாயப்படுத்தி இந்த திரைப்படத்தில் நாயகனாக நடிக்க வைத்துள்ளார். பாரதிராஜாவிற்கு விருப்பமில்லாமல் தொடங்கிய திரைப்படம் தான் இந்த கல்லுக்குள் ஈரம். நண்பனின் கட்டாயத்தின் பேரில் நாயகனாக களமிறங்கினார் பாரதிராஜா.
ஆக்சன் ஹீரோயினியாக அனைவருக்கும் அறியப்பட்ட நடிகை விஜயசாந்தி இந்த திரைப்படத்தில் தான் அறிமுகமானார். நாயகியாக நடித்த நடிகை அருணாவும் இந்த திரைப்படத்தில் தான் அறிமுகமானார். ஒரு பெரிய சினிமா பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும். படத்திற்கு இசை வேறு யாரும் கிடையாது இளையராஜா தான். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன.
கதை
இயக்குனராக இந்த திரைப்படத்தின் பாரதிராஜா நடித்திருப்பார் சொல்ல போனால் உண்மையில் அவர் இயக்குனர் தான் ஆனால் கதைம்படியும் பாரதிராஜா இயக்குனராசன் நடித்திருப்பார். படப்பிடிப்புக்காக ஒரு கிராமத்திற்கு செல்லும் பொழுது அங்கு நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் அடித்தளம் ஆகும்.
பாரதிராஜா எடுக்கும் திரைப்படத்தின் நாயகனாக சுதாகர் நடித்திருப்பார். படப்பிடிப்பிற்காக ஒரு கிராமத்திற்கு செல்லும் பொழுது பாரதிராஜா மீது அங்கு சலவை தொழிலாளியாக வேலை செய்யும் அருணாவிற்கு அவர் மீது காதல் வருகிறது கடைசியில் அவர்கள் சேர்கிறார்களா இல்லையா என்பது தான் இந்த திரைப்படத்தின் முக்கிய கதையாகும்.
அதேபோல கதாநாயகனாக நடிக்க சொல்லும் சுதாகரும் அந்த கிராமத்தில் இருக்கக்கூடிய விஜயசாந்தியை காதலிக்கின்றார். படப்பிடிப்பிற்காக செல்லும் இயக்குனர் மற்றும் கதாநாயகன் இருவரும் கிராமத்தில் இருக்கக்கூடிய இரண்டு பெண்கள் மீது காதல் கொள்கின்றனர். அதுவே இந்த கதையின் அடிப்படை.
குறிப்பாக இந்த திரைப்படத்தில் அறிமுகமான அருணா மற்றும் விஜயசாந்தி இருவரும் புதுமுக நடிகைகள் போல நடித்திருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு இயக்குனர்கள் அவர்களிடம் வேலையை வாங்கி இருப்பார். பாரதிராஜாவை ஒரு தலைப்பட்சமாக காதலிக்க கூடிய அருணாவின் நடிப்பு தரமாக இருக்கும்.
நகைச்சுவையை நிரப்பும் இடத்தில் கவுண்டமணி குடிகார வேடத்தில் நடித்திருப்பார். சொல்லவே தேவையில்லை அவரது இடத்தை சரியாக நிரப்பி இருப்பார். இந்த திரைப்படத்தின் உதவி இயக்குனர்களாக மனோபாலா மற்றும் மணிவண்ணன் இருவரும் பணிபுரிந்துள்ளனர். அதேசமயம் இந்த திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளிலும் அவர்கள் நடித்திருப்பார்கள்.
பாரதிராஜாவின் கலை படைப்புகள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றனர் அந்த அளவிற்கு இந்த திரைப்படம் ஓடவில்லை என்றாலும், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்த திரைப்படமாக இன்று வரை இருந்து வருகிறது.
இந்த கல்லுக்குள் ஈரம் திரைப்படம் இன்றுடன் வெளியாகி 44 ஆண்டுகளாகின்றன. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடம் எப்போதும் கல்லுக்குள் ஈரம் திரைப்படத்திற்கு உண்டு என்று கூறினால் அது மிகையாகாது.
டாபிக்ஸ்