தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kizhakku Vaasal: தாயம்மாவாக தவிக்கும் ரேவதி.. கதையை புரட்டி போட்ட கார்த்திக்.. வசூலைக் குவித்த கிழக்கு வாசல்

Kizhakku Vaasal: தாயம்மாவாக தவிக்கும் ரேவதி.. கதையை புரட்டி போட்ட கார்த்திக்.. வசூலைக் குவித்த கிழக்கு வாசல்

Jul 12, 2024, 05:40 AM IST

google News
Kizhakku Vaasal: நடிகர் கார்த்திக் சினிமா பயணத்தில் இந்த கிழக்கு வாசல் திரைப்படம் மிக முக்கிய பங்கை வகித்து வருகிறது. இளையராஜா இசை கொடிகட்டிக் பறந்த காலம் அது, அதுவும் குறிப்பாக இயக்குநர் ஆர்.வி.உதயக்குமாருகென்றால் சொல்லவே தேவை இல்லை. இன்றுவரை யாருமே அசைக்க முடியாத பாடல்கள் இதில் அமைந்துள்ளது.
Kizhakku Vaasal: நடிகர் கார்த்திக் சினிமா பயணத்தில் இந்த கிழக்கு வாசல் திரைப்படம் மிக முக்கிய பங்கை வகித்து வருகிறது. இளையராஜா இசை கொடிகட்டிக் பறந்த காலம் அது, அதுவும் குறிப்பாக இயக்குநர் ஆர்.வி.உதயக்குமாருகென்றால் சொல்லவே தேவை இல்லை. இன்றுவரை யாருமே அசைக்க முடியாத பாடல்கள் இதில் அமைந்துள்ளது.

Kizhakku Vaasal: நடிகர் கார்த்திக் சினிமா பயணத்தில் இந்த கிழக்கு வாசல் திரைப்படம் மிக முக்கிய பங்கை வகித்து வருகிறது. இளையராஜா இசை கொடிகட்டிக் பறந்த காலம் அது, அதுவும் குறிப்பாக இயக்குநர் ஆர்.வி.உதயக்குமாருகென்றால் சொல்லவே தேவை இல்லை. இன்றுவரை யாருமே அசைக்க முடியாத பாடல்கள் இதில் அமைந்துள்ளது.

Kizhakku Vaasal: ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் உருவான படம் கிழக்கு வாசல். இந்த திரைப்படம் 1990ல் வெளியானது. இந்த திரைப்படத்தில் கார்த்திக், ரேவதி, குஷ்பு, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் மனோரமா, ஜனகராஜ், சின்னி ஜெயந்த், விஜயகுமார், சண்முக சுந்தரம், தியாகு, சுலக்சனா, எஸ், என் பார்வதி கல்லாப்பெட்டி சிங்காரம் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

தாலாட்டிய எஸ்.பி.பி

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார்.படத்தின் பெரும்பாலான பாடல்களை தயாரிப்பாளர் ஆர்.வி. உதயகுமார் எழுதி இருந்தார். இந்த படத்தில் வந்த அட வீட்டுக்கு வீட்டுக்கு, பச்சமலை பூவு, தலுக்கி தலுக்கி, பாடிப்பறந்த கிளி, வந்ததே குங்குமம் என 5 பாடல்களுமே படு ஹிட்டாக இருந்தது. இதில் பச்சமலை பூவு பாடல் சிறந்த தாலாட்டு பாடலாக உருவாக்கப்பட்டிருந்தது. அதிலும் எஸ்.பி.பியின் குரலில் இன்றும் மனதை மயக்கும் பாடல்தான் அது.

கதை

இந்த படத்தில் கார்த்திக் பொன்னுரங்கம் என்ற பெயரில் மினி ட்ரூப் வைத்து சிறிய கலை நிகழ்ச்சிகைளை நடத்தி வருகிறார். இவர் விஜயகுமாரிடம் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் அதன் பக்கத்து கிராமத்தில் வசிக்கும் செல்வந்தரான வள்ளியூரான் விஜயகுமாரின் மைத்துனராக இருப்பார். இதற்கிடையில் விஜயகுமார் ஏற்கனவே தாயம்மாளின் வளர்ப்பு தாயுடன் உறவில் இருந்திருப்பார். இதைத்தொடர்ந்து அவர் இறந்த பிறகு விஜயகுமார் தாயம்மாளான ரேவதியை அடைய விரும்புவார்.

இந்நிலையில் வள்ளியூரானின் மகள் செல்வி பொன்னுரங்கத்தை விரும்ப ஆரம்பித்து காதலை சொல்கிறாள்.பின் செல்வியை பெண் கேட்டு தனது தாயை அனுப்புகிறார். அங்கு அவர் அவமான படுத்தப்பட்டநிலையில் அந்த வருத்தத்தில் உயிரிழக்கிறார்.

இந்த நிலையில் செல்வியை விஜயகுமார் மகன் தியாகுவிற்கு திருமணம் நடக்க ஏற்பாடு செய்யும் வள்ளியூரான் பின்னர் மாப்பிள்ளை தியாகுவின் நடத்தை குறித்து அறிந்து திருமணத்தை நிறுத்துகிறார். இதையடுத்து நடக்கும் பிரச்சனைகளை தாண்டி படத்தின் முடிவு என்ன என்பதே கதை.

நடிகர் கார்த்திக் சினிமா பயணத்தில் இந்த கிழக்கு வாசல் திரைப்படம் மிக முக்கிய பங்கை வகித்து வருகிறது. இளையராஜா இசை கொடிகட்டிக் பறந்த காலம் அது, அதுவும் குறிப்பாக இயக்குநர் ஆர்.வி.உதயக்குமாருகென்றால் சொல்லவே தேவை இல்லை. அந்த அளவிற்கு இன்றுவரை யாருமே அசைக்க முடியாத பாடல்கள் இந்த படத்தில் அமைந்துள்ளது.

ஆதிக்க சாதியினரின் பெண்கள் மீதான சுரண்டல், ஆண்களின் குரூர எண்ணங்களையும் நிறைவேறாத காதலின் ஏக்கம், தன் சுயமரியாதையையும் கற்பையும் பாதுகாத்து கொள்ள ரேவதி நடத்தும் அமைதியான போராட்டம் என படம் முழுவதும் ரசிகர்களின் வெகுவான வரவேற்பை பெற்றது. இந்த பாடம் சென்னையில் மட்டும் 150 நாட்களுக்கும் மேலாக ஓடியது. மேலும் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.

பாடல்கள் எல்லாமே ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்த நிலையில் எஸ்.பி.பியின் குரல் படத்தின் வெற்றிக்கு பெரும் தூணாக இருந்தது என்பதில் சந்தேகமே இல்லை. அந்த வகையில் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 34 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி