தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nadodi Thendral: ரஞ்சிதாவின் கனவு.. பாரதிராஜா மீது நம்பிக்கை.. ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள்.. நாடோடி தென்றல்

Nadodi Thendral: ரஞ்சிதாவின் கனவு.. பாரதிராஜா மீது நம்பிக்கை.. ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள்.. நாடோடி தென்றல்

Apr 18, 2024, 04:12 AM IST

google News
Nadodi Thendral: பிரிட்டிஷ் ஆட்சியில் மாவட்ட ஆட்சியரின் தங்கை, சாதாரண பொற்கொல்லரின் மகன் கார்த்திக், சாதாரண நாடோடி பெண் ரஞ்சிதா, இவர்களின் மூன்று பேர் காதலை மையமாக வைத்தேன் இந்த கதை நகரும். இப்படிப்பட்ட முக்கோண காதலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் நாடோடி தென்றல்
Nadodi Thendral: பிரிட்டிஷ் ஆட்சியில் மாவட்ட ஆட்சியரின் தங்கை, சாதாரண பொற்கொல்லரின் மகன் கார்த்திக், சாதாரண நாடோடி பெண் ரஞ்சிதா, இவர்களின் மூன்று பேர் காதலை மையமாக வைத்தேன் இந்த கதை நகரும். இப்படிப்பட்ட முக்கோண காதலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் நாடோடி தென்றல்

Nadodi Thendral: பிரிட்டிஷ் ஆட்சியில் மாவட்ட ஆட்சியரின் தங்கை, சாதாரண பொற்கொல்லரின் மகன் கார்த்திக், சாதாரண நாடோடி பெண் ரஞ்சிதா, இவர்களின் மூன்று பேர் காதலை மையமாக வைத்தேன் இந்த கதை நகரும். இப்படிப்பட்ட முக்கோண காதலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் நாடோடி தென்றல்

பல இயக்குநர்கள் பயணம் செய்த இந்த தமிழ் சினிமாவில் தனித்துவமான மண்வாசனை கொடுத்து மக்களிடத்தில் இடம் பிடித்து வெற்றி இயக்குநராக வலம் வந்தவர் பாரதிராஜா. இன்று வரை அவரது இடத்தை நிரப்பப் பலரும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த அளவிற்குத் திரைக் கதையை எளிமையாக மக்களிடம் புகுத்த கூடியவர் இயக்குநர் பாரதிராஜா. இவருக்கு உதவி இயக்குநராக பணியாற்றியவர் தான் திரைக்கதையின் மன்னன் கே.பாக்யராஜ். இயக்குநர் பாக்யராஜின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் தான் இயக்குநர் பார்த்திபன்.

இப்படித் தொடர்ந்து தலைமுறைகளை வளர்த்தெடுத்தவர் இயக்குநர் பாரதிராஜா. அப்படிப்பட்ட கிராமத்துக் கதைகளைக் கொடுத்த பாரதிராஜா வித்தியாசமான கதைகளத்தை, தொட்ட திரைப்படம் தான் நாடோடி தென்றல்.

சுதந்திரத்திற்கு முன்பு முக்கோண காதலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் இந்த நாடோடி தென்றல். இந்த திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர் சுஜாதா. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றனர்.

இசையமைப்பாளர் யார் இந்த கேள்வி வரும், இயக்குநர் பாரதிராஜா என்றால் அப்போது இசை இளையராஜா. மணியே மணிக்குயிலே என்ற பாடல் இன்றுவரை பலரது பிளே லிஸ்டில் நிரந்தரமாக இடம் வகித்து வருகிறது.

வணிக ரீதியாக இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. என்ன இன்னும் கதாநாயகனைப் பற்றிப் பேசாமல் இருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தோன்றும். அவர் கொஞ்சம் ஸ்பெஷல்தான், திரைப்படத்தின் நாயகன் நவரச நாயகன் கார்த்திக்.

பலருக்கும் தோன்றும் இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடித்திருக்கிறாரா? என்று பலருக்கு ஆச்சரியம் உண்டாகும் அதுதான் இந்த நாடோடி தென்றல் திரைப்படம்.

இந்த திரைப்படம் தான் இயக்குநர் பாரதிராஜாவும், இசையமைப்பாளர் இளையராஜாவும் இணைந்து பணியாற்றிய கடைசி திரைப்படம் இதுதான் என கூறப்படுகிறது.

ரஞ்சிதா கதை

 

இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு நடிகர் ரஞ்சிதாவிற்கு பல படங்களிலிருந்து வாய்ப்பு வந்துள்ளது ஆனால் பாரதிராஜா படம் என்கின்ற காரணத்தினால் கதையை கூட கேட்காமல் ரஞ்சிதா நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டார் ஏனென்றால் இதற்கு முன்பு வெளியான பாரதிராஜா திரைப்படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி படங்களா இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்துள்ளார்.

படப்பிடிப்பு தொடங்கிய உடனே பாரதிராஜா அவரை வாத்து மேய்க்க சொல்லியுள்ளார். அதிர்ச்சியில் ஆழ்ந்த நடிகை ரஞ்சிதா மணமுடைந்து அனைத்து காட்சிகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக நடித்து முடித்துவிட்டார். எப்படியும் இந்த திரைப்படம் வெளியான பிறகு நமக்கு நல்ல பெயர் கிடைக்கும் என நினைத்து நடித்து விட்டார் ஆனால் இந்த திரைப்படத்தை பொதுமக்கள் சரியாக ஏற்றுக் கொள்ளவில்லை ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பார்கள் என ரஞ்சிதாவின் கனவு கனவாய் போனது. அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நடிகை ரஞ்சிதா சினிமாவில் ஜொலிக்க தொடங்கியுள்ளார்.

பட கதை

 

பிரிட்டிஷ் ஆட்சியில் மாவட்ட ஆட்சியரின் தங்கை, சாதாரண பொற்கொல்லரின் மகன் கார்த்திக், சாதாரண நாடோடி பெண் ரஞ்சிதா, இவர்களின் மூன்று பேர் காதலை மையமாக வைத்தேன் இந்த கதை நகரும். இப்படிப்பட்ட முக்கோண காதலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பல படங்கள் வெற்றி அடைவதில்லை.

அதனை முதலில் வெற்றிப் படமாக்கியவர் இயக்குநர் பாலச்சந்தர், அடுத்து வெற்றிப் படமாகியவர் இயக்குநர் பாரதிராஜா. இந்த திரைப்படம் இன்றுடன் வெளியாகி 32 ஆண்டுகள் ஆகின்றன. இன்று வரை பலரும் தொட அச்சப்படும் இந்த திரைக்கதையை நினைவு கூறுவது நமக்குப் பெருமையாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி