தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Gentleman: பக்கா ஜென்டில்மேன்.. இது ஷங்கர் அத்தியாயம்.. ஏ.ஆர்.ரஹ்மான் சூறையாட்டம்..!

Gentleman: பக்கா ஜென்டில்மேன்.. இது ஷங்கர் அத்தியாயம்.. ஏ.ஆர்.ரஹ்மான் சூறையாட்டம்..!

Jul 30, 2024, 07:00 AM IST

google News
Gentleman: ஷங்கரின் ஆதங்கம் ஜென்டில்மேன் திரைப்படத்தில் சரியாக நிறைந்திருக்கும். அதேபோல மக்களும் இந்த திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் ஏற்றுக் கொண்டனர். வசூலை வாரிக் குவித்தது. இன்றுடன் ஜென்டில்மேன் திரைப்படம் இன்றுடன் வெளியாகி 31 ஆண்டுகள் ஆகின்றன.
Gentleman: ஷங்கரின் ஆதங்கம் ஜென்டில்மேன் திரைப்படத்தில் சரியாக நிறைந்திருக்கும். அதேபோல மக்களும் இந்த திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் ஏற்றுக் கொண்டனர். வசூலை வாரிக் குவித்தது. இன்றுடன் ஜென்டில்மேன் திரைப்படம் இன்றுடன் வெளியாகி 31 ஆண்டுகள் ஆகின்றன.

Gentleman: ஷங்கரின் ஆதங்கம் ஜென்டில்மேன் திரைப்படத்தில் சரியாக நிறைந்திருக்கும். அதேபோல மக்களும் இந்த திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் ஏற்றுக் கொண்டனர். வசூலை வாரிக் குவித்தது. இன்றுடன் ஜென்டில்மேன் திரைப்படம் இன்றுடன் வெளியாகி 31 ஆண்டுகள் ஆகின்றன.

Gentleman: ஜென்டில்மேன் படம், 1993ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம். இந்தப்படத்தை இயக்கியவர் ஷங்கர். இவரது முதல் திரைப்படம் ஜென்டில்மேன். இந்தப்படத்தை தயாரித்தவர் கே.டி.குஞ்சுமோன். இந்தப்படத்தில் அர்ஜீன், மதுபாலா மற்றும் சுபஸ்ரீ, நம்பியார், மனோரமா, கவுண்டமணி, செந்தில், சரண்ராஜ், வினீத், ராஜன்.பி உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள்.

சென்னையைச் சேர்ந்த வியாபாரி, பணக்காரர்களின் பணத்தை திருடி ஏழைகளுக்கு கொடுப்பதுதான் படத்தின் கதை. இந்தப்படம் திரையரங்கில் 175 நாட்கள் ஓடியது. மூன்று ஃபிலிம்ஃபேர் விருதுகளை பெற்றது. 4 தமிழ்நாடு மாநில விருதுகளையும் பெற்றது. 5 சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளையும் வாங்கி குவித்தது. இந்தப்படம் இந்தியில் மீண்டும் எடுக்கப்பட்டது. அர்ஜீனுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த படம்.

கிருஷ்ணமூர்த்தி என்ற கிச்சாவும், மணியும் பல இடங்களில் பணத்தை திருடுவார்கள். அதற்காக ரத்னம் என்ற போலீஸ் அதிகாரி அவரை துரத்துவார். ஆனால் அவர்கள் தப்பித்து விடுவார்கள்.

ஆனால், சென்னையில் அவர்கள் இருவரும் அப்பளம் தயாரித்து வியாபாரம் செய்துகொண்டிருப்பார்கள். அந்த வீட்டில் தங்கி வேலைசெய்யும் பெண் சுசீலாவுக்கு அவர் மீது காதல் வரும். சுசீலாவின் தங்கை ஒருமுறை வீட்டுக்கு வருவார். அவர் கிச்சாவுடன் சேர்ந்து கலாட்டாக்களில் ஈடுபடுவார். இது சுசீலாவுக்கு பிடிக்காது. இந்நிலையில் அவர் திரும்பி சென்று அவருக்கு திருமணம் முடிந்து அவர் மீண்டும் தனது கணவரை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வருவார்.

அவரது கணவர்தான் கொள்ளையன் கிச்சாவை பிடிக்க நியமிக்கப்பட்ட அதிகாரி. அவர் எப்படியோ கிச்சாவை கண்டுபிடிக்க கிச்சா தப்பிவிடுவார். இவர்கள் செய்யும் கொள்ளை தொழில் சுசீலாவுக்கு தெரியவர அவர் கேட்கும்போது, அவர்களின் கடந்த கால கதையை சொல்வார்.

கிச்சாவும், அவரது நண்பரும் அதிக மதிப்பெண்கள் பெற்றுவிட்டு, மருத்துவக்கல்லூரியில் இடஒதுக்கீட்டால் சீட் கிடைக்காமல் முறுக்கு விற்கும் தொழில் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதனால் விரக்தியடைந்த ரமேஷ், பஸ் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்வார். அவரது தாயும், தான் இறந்துவிட்டால், சத்துணவு சமையல் வேலை செய்யும் அவருக்கு பணம் கிடைக்கும், அதன் மூலம் தனது மகன் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என தற்கொலை செய்துகொள்வார்.

இதனால்தான் தான் பணத்தை கொள்ளையடித்து, இலவசமாக ஏழை மாணவர்கள் கல்வி கற்க ஏற்பாடு செய்வதாக கூறுவார். அதற்கு சுசீலாவும் துணை புரிகிறேன் என்று வாக்களிப்பார். இந்நிலையில் போலீசில் அவர் சிக்கும் நிலை வரும். கிச்சா அதிலிருந்து தப்பிப்பாரா அல்லது மாட்டிக்கொள்வாரா என்பதுதான் படத்தின் கிளைமேக்ஸ்.

அனைத்து பாடல்களும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இன்றும் மனதில் நிற்பவை. என் வீட்டு தோட்டத்தில், உசிலம்பட்டி பெண்குட்டி முத்து பேச்சி, சிக்கு புக்கு ரயிலு, பாக்காதே பாக்காதே பஞ்சாங்கத்த பாக்காதே, ஒட்டகத்த கட்டிக்கோ ஆகிய பாடல்கள் படு ஹிட்.

சமுதாய சீர்கேடுகளை மாற்றம் செய்ய வேண்டும் என்ற இயக்குநர் ஷங்கரின் ஆதங்கம் ஜென்டில்மேன் திரைப்படத்தில் சரியாக நிறைந்திருக்கும். அதேபோல மக்களும் இந்த திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் ஏற்றுக் கொண்டனர். வசூலை வாரிக் குவித்தது. இன்றுடன் இந்த திரைப்படம் இன்றுடன் வெளியாகி 31 ஆண்டுகள் ஆகின்றன. இந்த கதையை நிரப்புவதற்கு இன்னோரு படம் இனி வரப்போவது கிடையாது என்று கூறினால் அது மிகையாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி