தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  47 Years Of Annakili: மச்சான பார்த்தீங்களா! - இளையராஜா பாடலை வைத்து அன்னக்கிளி திரைக்கதை உருவாக்கிய பஞ்சு அருணாச்சலம்

47 Years of Annakili: மச்சான பார்த்தீங்களா! - இளையராஜா பாடலை வைத்து அன்னக்கிளி திரைக்கதை உருவாக்கிய பஞ்சு அருணாச்சலம்

May 14, 2023, 05:00 AM IST

google News
உலகம் முழுவதும் இருக்கும் கோடானு கோடி தமழ் ரசிகர்களை தனது அற்புத இசையால் மகிழ்விக்கும் இசைஞானி இளையராஜா அறிமுகமான படம்தான் அன்னக்கிளி. தமிழ் சினிமா இசையில் புதுவித பாய்ச்சலை ஏற்படுத்தியது இந்த படம்.
உலகம் முழுவதும் இருக்கும் கோடானு கோடி தமழ் ரசிகர்களை தனது அற்புத இசையால் மகிழ்விக்கும் இசைஞானி இளையராஜா அறிமுகமான படம்தான் அன்னக்கிளி. தமிழ் சினிமா இசையில் புதுவித பாய்ச்சலை ஏற்படுத்தியது இந்த படம்.

உலகம் முழுவதும் இருக்கும் கோடானு கோடி தமழ் ரசிகர்களை தனது அற்புத இசையால் மகிழ்விக்கும் இசைஞானி இளையராஜா அறிமுகமான படம்தான் அன்னக்கிளி. தமிழ் சினிமா இசையில் புதுவித பாய்ச்சலை ஏற்படுத்தியது இந்த படம்.

தமிழ் சினிமாவில் பட்ஜெட்டுக்கு ஏற்பட வண்ண சினிமா, பிளாக் அண்ட் ஒயிட் சினிமா என இரண்டு வகையாக வெளிவரும் காலமாக 1970கள் அமைந்திருந்தது. அந்த நேரத்தில் இரட்டை இயக்குநர்களான தேவராஜ்-மோகன் இயக்கத்தில், ஆர். செல்வராஜ் கதைக்கு, பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை அமைக்க வெளியான படம் அன்னக்கிளி.

இந்த படத்தில் மற்றொரு சிறப்பு அம்சமாக இன்று தமிழ் சினிமா இசையில் ராஜாவாக வலம் வரும் ராசய்யா என்பவர் இளையராஜா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டார். இந்த படத்தில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட இசை வடிவம் தமிழ்- சினிமாவுக்கு மாறுபட்ட வண்ணத்தை கொடுத்தது என்றே சொல்லலாம்.

ரெமாண்டிக் டிராமா பாணியில் உருவாகியிருக்கும் பிளாக் அண்ட்் ஒய்ட் படமான அன்னக்கிளி, வெளியான இரண்டு நாள்கள் திரையரங்கில் பெரிதாக கூட்டம் இல்லாமல்தான் இருந்துள்ளது. அதன் பின்னர் படம் பார்த்தவர்களின் நேர்மறையான விமர்சனம், படத்தின் பாடல் குறித்த பேச்சு கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வெள்ளி விழா கண்டது.

கிராமத்தில் ஆசிரியராக வரும் சிவக்குமாருக்கு, பல்வேறு விஷயங்களில் ஆசிரியராக இருக்கும் சுஜாதாவுக்கும் இடையிலான உறவு, காதல், இருவருக்கும் இடையே நிகழும் நிகழ்வுகள்தான் படத்தின் கதை. இதை இசை வடிவத்தில் வேறு லெவலில் மாற்றியிருப்பார் இசைஞானி இளையராஜா.

இந்த படத்துக்கு முன்பு பஞ்சு அருணாச்சலத்திடம் சான்ஸ் தேடி சென்றராம். அப்போது இளையராஜாவிடம் இருக்கும் பாடல்களை பாடி சொல்லியுள்ளார். உடனே அவர் அன்னக்கிளி உன்னத்தேடுது பாடலை பாட, இதில் மிகவும் இம்ரஸ் ஆன பஞ்சு அருணாச்சலம், பாடல் வரிகளுக்கு ஏற்ப கதை அமைக்க அன்னக்கிள படம் உருவானது என்ற இந்த படம் குறித்த சுவாரஸ்ய பின்னணி கதையும் உள்ளது.

ஆரம்பத்தில் பெரிதாக ரசிகர்களை கவராமல், பின் மெல்ல மெல்ல ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட இந்தப் படம் இந்திய சர்வதேச திரைப்படவிழாவிலும் திரையடப்பட்ட தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது. வெறும் ரூ. 4 லட்சம் பட்ஜெட்டில் (இன்றைய மதிப்பில் ரூ. 4 கோடி) உருவான அன்னக்கிளி படம், வசூலை அள்ளியது. தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் சூப்பர் ஹிட்டானது. பிலிம்பேர் விருதை பெற்ற அன்னக்கிளி தமிழக அரசின் சார்பில் மானியமும் பெற்றது.

இளையராஜா இசையில் அடி ராக்காயி, அன்னக்கிளி உன்ன தேடுது, மச்சான பாத்தீங்களா, சொந்தம் இல்லை என அனைத்து பாடல்களும் இன்று வரையிலும் கிராங்களில் நடைபெறும் விஷேசங்களில் ஒலிக்கும் பாடலாக இருந்து வருகிறது. இந்தி பாடல்களின் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் இருந்த வந்த காலகட்டத்தில் நாட்டுப்புற இசையும், மேற்கத்திய இசையும் சேர்த்த புதிய வடிவம் கொடுத்த இளையராஜா தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் புகுந்தார்.

தமிழ் சினிமா ரசிகர்களின் இசை ரசனையை முற்றிலும் மாற்றி அமைத்த அன்னக்கிளி வெளியாகி இன்றுடன் 47 ஆண்டுகள் ஆகிறது. இந்த கோடை நேரத்தில் ரீவிசிட் செய்யும் படங்களில் அன்னக்கிளியும் ஒன்றாக உள்ளது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை