Naga Chaitnya: இரண்டாவது திருமணத்திற்கு தயாரான நாக சைதன்யா? அப்போ சமந்தா கதி
Sep 15, 2023, 12:15 PM IST
நடிகர் நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்ய போவதாக தகவல் சொல்லப்படுகிறது.
நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா தென்னிந்தியாவின் மிகவும் குறிப்பிடத்தக்க நட்சத்திர ஜோடி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2021 ஆம் ஆண்டு பிரிந்துவிட்டனர்.
விவாகரத்து பெற்ற நாகசைதன்யா பிரபல தென்னிந்திய நடிகை ஷோபிதா துலிபாலாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் பல இடங்களில் ஒன்றாகப் பார்த்ததுதான் அந்தச் செய்திக்குக் காரணம். ஷோபிதாவை புதிய வீட்டிற்கு அழைத்து நாக சைதன்யா தனது பெற்றோருக்கு அறிமுகப்படுத்தியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்தியை இருவரும் மறுத்துள்ளனர்.
தற்போது டோலிவுட்டில் நாகார்ஜுனா தனது மகனை இரண்டாவது திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மணமகள் ஒரு பெரிய வணிக குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உள்ளன. ஆனால் இது குறித்து நாகார்ஜுனாவின் குடும்பத்தினர் இதுவரை உறுதி செய்யவில்லை.
இந்நிலையில் நாகார்ஜுனா தனது மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மணமகள் ஒரு பெரிய வணிக குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உள்ளன. ஆனால் இது குறித்து நாகார்ஜுனாவின் குடும்பத்தினர் இதுவரை உறுதி செய்யவில்லை.
நாக சைதன்யா ஹீரோவாக நடித்த கடைசி படம் கஸ்டடி. வெங்கட் பிரபு இயக்குகிறார். க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தில் பிரியாமணி மற்றும் அரவிந்த் சுவாமியும் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நிலையில், ஆர் சரத்குமார் ஜிவா, ராம்கி, ஜெயசுதா, வெண்ணேல் கிஷோர், ஜெயபிரகாஷ், சார்யா, ஒய்.ஜி.மகேந்திரா மற்றும் ரவிபிரகாஷ் ஆகியோரும் நடித்தனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்