Bhagyaraj: ‘வகுப்பறையாக மாறிய வீடு’.. பம்பர் ஹிட்டடித்த ‘முந்தானை முடிச்சு’ படம் கொடுத்த பரிசு;தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!
Jul 11, 2023, 06:51 PM IST
முந்தானை முடிச்சு திரைப்படத்தின் இடம் பெற்ற வீடு தற்போது எப்படி இருக்கிறது தெரியுமா?
1993ம் ஆண்டு கே. பாக்யராஜ் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் ‘முந்தானை முடிச்சு’. இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை ஊர்வசி நடித்திருந்தார்.
குழந்தையுடன் கிராமத்திற்கு டீச்சராக வரும் பாக்யராஜை ஊர்வசி காதலிக்க அந்தக்காதல் என்ன ஆனது? குழந்தையின் நிலைமை என்ன? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களை தனக்கே உரித்தான திரைக்கதை பாணியில் பாக்யராஜ் திரையில் காட்சிப்படுத்தி இருந்தார்.
ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த இந்ததிரைப்படம் அன்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் அந்தப்படத்தில் இடம்பெற்ற வீடு குறித்து ஒரு சுவாரசியமான தகவலை ஏவிஎம் அருணா குகன் பகிர்ந்து இருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “முந்தானை முடிச்சு திரைப்படத்தின் முக்கியமான காட்சிகள் கோபிசெட்டி பாளையம் அருகில் உள்ள ஓலப்பாளையம் கிராமத்தில் வைத்தே படமாக்கப்ட்டது. படப்பிடிப்பு முடிந்த உடன் நாங்கள் பயன்படுத்திய வீட்டை அருகில் இருக்கும் பள்ளிக்கூடம் ஒன்றிற்கு கொடுத்தோம்.
தற்போது அந்த வீடு வகுப்பறையாக மாறியிருக்கிறது. அந்தப்படத்தில் அந்த பகுதிகள் மக்கள் சிலரையும் பாக்யராஜ் நடிக்க வைத்திருந்தார். இது போன்ற தருணங்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன” என்று பதிவிட்டு இருக்கிறார். 30 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தத்திரைப்படம் கிட்டத்தட்ட 25 வாரங்கள் திரையரங்குகளில் ஓடி 4 கோடி வசூலை ஈட்டியது.
டாபிக்ஸ்