தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Indian 2 : ஆன்லைன் புக்கிங் பரபரப்பாக ஓடும் இந்தியன் 2 திரைப்பட வெளியீட்டில் இப்படி ஒரு சிக்கலா.. என்னதான் நடக்கும்?

Indian 2 : ஆன்லைன் புக்கிங் பரபரப்பாக ஓடும் இந்தியன் 2 திரைப்பட வெளியீட்டில் இப்படி ஒரு சிக்கலா.. என்னதான் நடக்கும்?

Jul 09, 2024, 01:11 PM IST

google News
Indian 2 : லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தியன் 2 வரும் ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது. வர்மக்கலை அகத்தியர் தோற்றுவித்தது. வழக்கு தொடர்ந்துள்ள ஆசான் தோற்று விக்கவில்லை. வர்மக்கலைக்கு யாரும் உரிமை கோர முடியாது என இயக்குநர் சங்கர் தரப்பில் வாதிடப்பட்டது.
Indian 2 : லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தியன் 2 வரும் ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது. வர்மக்கலை அகத்தியர் தோற்றுவித்தது. வழக்கு தொடர்ந்துள்ள ஆசான் தோற்று விக்கவில்லை. வர்மக்கலைக்கு யாரும் உரிமை கோர முடியாது என இயக்குநர் சங்கர் தரப்பில் வாதிடப்பட்டது.

Indian 2 : லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தியன் 2 வரும் ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது. வர்மக்கலை அகத்தியர் தோற்றுவித்தது. வழக்கு தொடர்ந்துள்ள ஆசான் தோற்று விக்கவில்லை. வர்மக்கலைக்கு யாரும் உரிமை கோர முடியாது என இயக்குநர் சங்கர் தரப்பில் வாதிடப்பட்டது.

Indian 2 : நடிகர் கமல் ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்திற்கு தடை கோரிய வழக்கு விசாரணையை வரும் ஜூன் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்து மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தியன் 2 வரும் ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி, சென்னை, ராஜமுந்திரி, போபால், குவாலியர் போன்ற பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தது. இதன் படப்பிடிப்புக்கு மத்தியில், பிப்ரவரி 2020 ஆம் ஆண்டு படக்குழுவில் ராட்சத கிரேன் விழுந்ததில் சிலர் உயிரிழந்தனர்.

அதன்பின், சூட்டிங் தொடங்கினாலும் கோவிட் பிரச்னை தலைவிரித்தாடியது. இதனால் ஒட்டுமொத்தமாக, இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பின், 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதன்பின் சமீபத்தில் 2024 மார்ச்சில் அதன் பிடிப்பு முடிவடைந்தது.

ரிலீஸ்

இந்தியன் 2 படத்தின் வெளிநாட்டில் ப்ரீபுக்கிங்கில் இதுவரை ரூ. 5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் மதுரை ஹெச். எம்.எஸ் காலனியில் உள்ள வர்மக்கலை தற்காப்புகலை மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் தலைமை ஆசான் ராஜேந்திரன் என்பவர் மதுரை உள்ளிட்ட மாவட்ட உரிமையியல் அகாடமியின் தலைமை ஆசான் ராஜேந்திரன் என்பவர் மதுரை மாவட்ட உரிமையில் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் இந்தியன் படத்தின் முதல்பாகம் தயாரித்த போது கமல் பயன் படுத்தும் வர்மக்கலை குறித்து தன்னிடம் ஆலோசனை நடத்தி அந்த முத்திரை பயன்படுத்தப்பட்டது. அதற்காக தனது பெயரும் படத்தில் இடம் பெற்றது

ஆனால் இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் முதலாம் பாகத்தில் பயன்படுத்திய முத்திரையை 2ம் பாகத்திலும் அனுமதி இன்றி பயன்படுத்தி உள்ளனர். இதனால் படத்தை திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க கோரி ராஜேந்திரன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வர்மக்கலை அகத்தியர் தோற்றுவித்தது. வழக்கு தொடர்ந்துள்ள ஆசான் தோற்று விக்கவில்லை. இதனால் இந்தியன் 2 படத்தில் பயன்படுத்தி உள்ள வர்மக்கலைக்கு யாரும் உரிமை கோர முடியாது என இயக்குநர் சங்கர் தரப்பில் வாதிடப்பட்டது. இதைத்தொடர்ந்து வரும் 11ம் தேதி வழக்கை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்தியன் 2 திரைப்படம் வெளியிடப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தியன் 2 பட்ஜெட் மற்றும் சம்பளம்

இந்தியன் 2 படம் சுமார் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. செய்திகளின் படி, கமல் ஹாசன், இந்தியன் 2 படத்தில் நடித்ததற்காக 150 கோடி ரூபாய் பெற்றார்.

ஃபோர்ப்ஸ் இந்தியாவின் ஜூன் 27 அறிக்கை, கமல் ஹாசன் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் ஏழாவது இடத்தைப் பட்டியலிட்டுள்ளது, அவர் ஒரு படத்திற்கு 100 முதல் 150 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்குகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை