தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Iifa Utsavam 2024: சிறந்த நடிகர் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா வில்லன்..சமந்தாவுக்கு சிறப்பு விருது!முழு வெற்றியாளர்கள் லிஸ்ட்

IIFA Utsavam 2024: சிறந்த நடிகர் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா வில்லன்..சமந்தாவுக்கு சிறப்பு விருது!முழு வெற்றியாளர்கள் லிஸ்ட்

Sep 28, 2024, 08:50 AM IST

google News
IIFA Utsavam 2024: தென்னிந்திய சினிமா கலைஞர்களை ஒன்றிணைத்து விருது வழங்கி கெளரவிக்கப்படும் IIFA உற்சவம் 2024இல் சிறந்த நடிகர், நடிகை விருதை முறையே விக்ரம், ஐஸ்வர்யா ராய் வென்றுள்ளனர். சமந்தாவுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. விருது வென்ற முழு வெற்றியாளர்கள் லிஸ்ட் பார்க்கலாம்.
IIFA Utsavam 2024: தென்னிந்திய சினிமா கலைஞர்களை ஒன்றிணைத்து விருது வழங்கி கெளரவிக்கப்படும் IIFA உற்சவம் 2024இல் சிறந்த நடிகர், நடிகை விருதை முறையே விக்ரம், ஐஸ்வர்யா ராய் வென்றுள்ளனர். சமந்தாவுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. விருது வென்ற முழு வெற்றியாளர்கள் லிஸ்ட் பார்க்கலாம்.

IIFA Utsavam 2024: தென்னிந்திய சினிமா கலைஞர்களை ஒன்றிணைத்து விருது வழங்கி கெளரவிக்கப்படும் IIFA உற்சவம் 2024இல் சிறந்த நடிகர், நடிகை விருதை முறையே விக்ரம், ஐஸ்வர்யா ராய் வென்றுள்ளனர். சமந்தாவுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. விருது வென்ற முழு வெற்றியாளர்கள் லிஸ்ட் பார்க்கலாம்.

தென்னிந்தியத் திரையுலகம் மற்றும் பாலிவுட் சினிமாவைச் சேர்ந்த மிகப்பெரிய நட்சத்திரங்களை ஒன்றிணைக்கும் IIFA உற்சவம் 2024 அபுதாபியில் நடைபெற்றது. இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள்

இயக்குநர் மணிரத்னம், நடிகை சமந்தா, தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நந்தமுரி பாலகிருஷ்ணா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தெலுங்கு நடிகர்கள் ராணா டகுபதி, மற்றும் வெங்கடேஷ் டகுபதி போன்ற நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். இதேபோல் பாலிவுட் சினிமாவில் இருந்து ஐஸ்வர்யா ராய், ஷாஹித் கபூர், அனன்யா பாண்டே, கிருதி சனோன், கரண் ஜோஹர், ஜாவேத் அக்தர், ஷபானா ஆஸ்மி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். நடிகர், நடிகைகளின் கவர்ச்சியால் அரங்கமே நிரம்பியிருந்தது.

IIFA வெற்றியாளர்களின் முழு பட்டியல்

சிறந்த படம் (தமிழ்): ஜெயிலர்

சிறந்த நடிகர் (தெலுங்கு): நானி (தசரா)

சிறந்த நடிகர் (தமிழ்): விக்ரம் (பொன்னியின் செல்வன்: II)

சிறந்த நடிகை (தமிழ்): ஐஸ்வர்யா ராய் (பொன்னியின் செல்வன்: II)

சிறந்த இயக்குநர் (தமிழ்): மணிரத்னம் (பொன்னியின் செல்வன்: II)

சிறந்த இசையமைப்பாளர் (தமிழ்): ஏ. ஆர். ரஹ்மான் (பொன்னியின் செல்வன்: II)

இந்திய சினிமாவில் மிகச்சிறந்த சாதனை: சிரஞ்சீவி

இந்திய சினிமாவுக்கு சிறந்த பங்களிப்பு: பிரியதர்ஷன்

இந்திய சினிமாவின் ஆண்டின் சிறந்த பெண்: சமந்தா

நெகடிவ் கேரக்டரில் சிறந்த நடிப்பு (தமிழ்): எஸ்.ஜே. சூர்யா (மார்க் ஆண்டனி)

நெகடிவ் கேரக்டரில் சிறந்த நடிப்பு (தெலுங்கு): ஷைன் டாம் சாக்கோ (தசரா)

நெகடிவ் கேரக்டரில் சிறந்த நடிப்பு (மலையாளம்): அர்ஜுன் ராதாகிருஷ்ணன் (கண்ணூர் அணி)

துணை கேரக்டரில் சிறந்த நடிப்பு (ஆண் - தமிழ்): ஜெயராம் (பொன்னியின் செல்வன்: II)

துணை கேரக்டரில் சிறந்த நடிப்பு (பெண் - தமிழ்): சஹஸ்ரா ஸ்ரீ (சித்தா)

கோல்டன் லெகசி விருது: நந்தமுரி பாலகிருஷ்ணா

கன்னட சினிமாவில் சிறந்து விளங்குபவர்: ரிஷப் ஷெட்டி

சிறந்த அறிமுகம் (பெண் - கன்னடம்): ஆராதனா ராம் (கந்தாரா)

IIFA நிகழ்வுகள் பற்றி

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய தென்னிந்திய திரைப்படத் சினிமா கலைஞர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட IIFA உத்சவம் மூன்று நாள் கொண்டாட்டம் தொடங்கியது. நேற்று முதல் நாள் கொண்டாட்டத்தில் கலைஞர்களுக்கான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இரண்டாம் நாள் கொண்டாட்டம் நடைபெற இருக்கும் இன்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், விக்கி கௌஷல் மற்றும் கரண் ஜோஹர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பார்வையாளர்களை மகிழ்விக்க மேடைக்கு வருகிறார்கள்.

ஷாஹித் கபூர், கிருத்தி சனோன், அனன்யா பாண்டே, ஜான்வி கபூர் மற்றும் விக்கி ஆகியோரும் தங்கள் நடிப்பால் நிகழ்வின் இரவுக்கு வசீகரம் சேர்த்துள்ளார்கள்.

IIFA 2024 செப்டம்பர் 29 அன்று பிரத்தியேக நிகழ்வுகளுடன் முடிவடைகிறது. இந்த நாளில் ஹனி சிங், ஷில்பா ராவ் மற்றும் ஷங்கர்-எஹ்சான்-லாய் போன்ற கலைஞர்கள் பார்வையாளர்களுக்காக நேரலையில் நிகழ்ச்சி நடத்துவார்

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி