தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ps 1: மக்களின் பார்வை பொன்னியின் செல்வன் மேல் எப்படி இருக்கிறது?

PS 1: மக்களின் பார்வை பொன்னியின் செல்வன் மேல் எப்படி இருக்கிறது?

Aarthi V HT Tamil

Sep 30, 2022, 02:34 PM IST

பொன்னியின் செல்வன் படம் குறித்து மக்களின் பார்வை எப்படி இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
பொன்னியின் செல்வன் படம் குறித்து மக்களின் பார்வை எப்படி இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

பொன்னியின் செல்வன் படம் குறித்து மக்களின் பார்வை எப்படி இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

நீண்ட நாள் காத்திருப்பு இறுதியாக முடிந்தது! இயக்குநர் மணிரத்னத்தின் லட்சியப் படமான பொன்னியின் செல்வன் இன்று (செப்டம்பர் 30) மிகுந்த ஆரவாரங்களுக்கு மத்தியில் திரைக்கு வந்தது. படம் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா? புத்தகப் படித்தவர்களுக்குத் திருப்திப்படுத்துமா? என்பதைப் பார்க்கலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Vishal in Annamalai Biopic: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறாரா விஷால்? வெளியான தகவல்

Karthigai Deepam: உப்பின் மீது முட்டி போட வைத்து சித்ரவதை.. வறுத்தெடுக்கும் தீபா.. வதங்கி தவிக்கும் ரியா!

Aranmanai 4 Twitter Review: மிரட்டும் பேய்.. மயக்கும் தமன்னா.. அரண்மனை 4 நம்பி போலாமா? - விமர்சனம் இங்கே!

Actor Kavin: விஜய் மகன் படத்தில் நானா ?.. ‘ஆமா மீட்டிங் நடந்தது உண்மைதான் ஆனா’ - கவின் ஓப்பன் டாக்!

கதை சுறுக்கம்

சோழ நாட்டில் சதி நடப்பது ஆதித்த கரிகாலனுக்கு ( விக்ரம் ) நண்பன் வந்தியத்தேவனிடம் (கார்த்தி) இரண்டு ஓலைகளை கொடுக்கிறார். அதை தன் தந்தை சுந்தர சோழன் (பிரகாஷ் ராஜ்) மற்றும் அவனது சகோதரி குந்தவி (த்ரிஷா) ஆகியோரிடம் ஒப்படைக்குமாறு ஆணையிடுகிறார். அதை ஏற்று வந்தியத்தேவன் செல்லும் போது, சோழா சாம்ராஜ்யத்தை வீழ்த்துவதற்குச் சமஸ்தான அரசர்களால் திட்டங்கள் தீட்டப்படுவது தெரியவருகிறது,

சோழப் பேரரசின் மகிமையைக் கெடுக்க யார் என்னென்ன தீய திட்டங்கள் தீட்டுகிறார்கள், யார் எல்லாம் செய்கிறார்கள் என்பதைக் கண்டறிவது வந்தியத்தேவனின் கடமையாகிறது. விசாரணையில், நந்தினி (ஐஸ்வர்யா ராய்) சோழ சாம்ராஜ்யத்தை வீழ்த்துவதற்கான முயற்சியில் இருப்பது தெரிகிறது. நந்தினி திட்டமிட்ட சதி என்னவனது என்பதே படத்தின் மீதிக்கதை.

ஒவ்வொரு நடிகரும் தங்களை கதாபாத்திரத்தில் பொருத்திக் கொண்டு நடித்து உள்ளனர்.

ஆனால் கதை என்று வரும்போது, ​​புத்தகங்களைப் படித்தவர்களுக்கு இப்படமான பொன்னியின் செல்வன் ஒரு குறையாக இருக்கலாம். இயக்குநர் மணிரத்னம் ஒரு படத்தில் (2 மணி 45 நிமிட ரன் டைம் ) மூன்று பாகங்களை ஒன்றாகக் குவித்திருப்பதால், கார்த்தியின் வந்தியத்தேவன் தவிர பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு அதிக திரை நேரம் கிடைக்கவில்லை .

பாடல்கள்

ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையமைப்பானது சூழ்ச்சியைத் தூண்டுகிறது. அதிரடித் துறையான போர்க்கள தருணங்களில் மிகவும் அற்புதமாகக் கையாண்டுள்ளார்.

ரவி வர்மனின் ஒளிப்பதிவு, தோட்டா தரணியின் தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் ஆகியவை சிறப்பு.

மக்கள் பார்வை

இறுதியில் கடலில் நடக்கும் போர் காட்சி சிறப்பாக இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர். அது மட்டுமில்லாமல் நந்தினி கதாபாத்திரம் (ஐஸ்வர்யா ராய்) குறைவாக வசனம் பேசி இருந்தாலும், அவரின் கண் வஞ்சம் நிறைந்த பார்வையால் காட்சிகளை எளிதாகக் கடக்கிறது.

ஆதித்ய கரிகாலனாக நடித்திருக்கும் விக்ரம் தனது உரித்தான பாணியில் கதாபாத்திரமாக மாறி நடித்திருக்கிறார். குந்தவையாக த்ரிஷா தனது அழகால் ரசிகர்களைக் கட்டி இழுத்துள்ளார். பெரிய பழுவேட்டையரையர், சின்ன பழுவேட்டையரையர் ஆகியோரின் கதாபாத்திரங்களும் கவனத்தை ஈர்த்தது.

மணிரத்னம் ஒவ்வொரு நடிகர்களிடமிருந்தும் திடமான நடிப்பை வாங்கி உள்ளார். ஜெயம் ரவி இரண்டாம் பாதியில் மட்டுமே தோன்றினாலும், ஸ்கோர் செய்து குறி வைக்கும் அளவுக்கு காட்சிகள் உள்ளன.

ஒரு இலக்கிய வரலாற்றை படமாக எடுப்பது என்ன சும்மாவா. அதை அசால்லடாக செய்து இருக்கிறார் மணிரத்னம். கதாபாத்திரத் தேர்வு முதல் அவர் படத்திற்கு நியாயம் சேர்த்து இருக்கிறார்.  வந்தியதேவனாக கார்த்தி மனசு ழுக்க நிறைஞ்சு உள்ளார். 

பாகுபலி பட அளவில நீங்க எதிர்பார்த்து பொன்னியின் செல்வன் படம் பார்க்க, நீங்கள் சென்றால் ஏமாற்றமடையலாம். அதனால் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்தை பார்க்க வேண்டும் என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.