தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Jennifer Lopez : ஹாலிவுட் நடிகை, பாப் பாடகி ஜெனிஃபர் லோபஸ் பிறந்த தினம் இன்று!

HBD Jennifer Lopez : ஹாலிவுட் நடிகை, பாப் பாடகி ஜெனிஃபர் லோபஸ் பிறந்த தினம் இன்று!

Priyadarshini R HT Tamil

Jul 24, 2023, 04:45 AM IST

google News
HBD Jennifer Lopez : 2003ம் ஆண்டு அஃபிலிக்குடன் கிகிலி படத்தில் நடித்தார். 2004ல் லோபஸ் பாடகர் மார்க் ஆண்டனியை திருமணம் செய்தார். 2008ம் ஆண்டு அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. தொடர்ந்து ஆல்பங்களில், படங்களிலும் பணிபுரிந்தவர் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற நிகழ்ச்சியில் பாடினார்.

ஜெனிஃபர் லோபஸ், ஜெனிஃபர் லின் லோபஸ், சுருக்கமாக ஜே.லோ. 1969ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க்க நகரில் ஜீலை 24ம் தேதி பிறந்தார். அமெரிக்க நடிகை மற்றும் பாடகி 1980களின் இறுதியில் நடிக்கத்துவங்கியவர், விரைவிலேயே ஹாலிவுட்டின் வரலாற்றிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக லத்தீன் நடிகையாக உயர்ந்தார். பின்னர் அவர் இசைத்துறையில் வெற்றி பெற்று, புகழ் பெற்றார். தொடர்ந்து பாப் ஆல்பங்களில் பாடி வந்தார்.

லோபஸ், பியுயர்டோ ரிக்கன் டிசன்ட் குடும்பத்தைச் சேர்ந்தவர் (12 சதவீதம் அமெரிக்கன், 65 சதவீதம் மேற்கு யூரோஏசியன், 20 சதவீதம் சஹாரா ஆப்பிரிக்காவின் மரபை சேர்ந்தவர்கள்) அவரது குழந்தைப்பருவம் முழுவதும் நடனம் கற்றார். சிறு வயதிலேயே புகழடைய வேண்டும் என்று விரும்பினார். அவர் சர்வதேச அளவில் மேடைகளில் பாடத்துவங்கினார். அவரது 16 வயதில், 1986ம் ஆண்டு தனது முதல் படம் மை லிட்டில் கேர்ள் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் சின்னத்திரையில் 1990ம் ஆண்டு ஃப்ளை கேர்ள்ஸ் நடனம் ஆடுபவர்களுள் ஒரு நடிகையாக இன் லிவிங் கலர் என்ற காமெடி ஷோவில் நடித்தார். பின்னர் அவர் நடிப்பில் கவனம் செலுத்தினார். முதலில் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்தார்.

திரைப்படங்களில் விரைவிலே வெற்றி பெற்றார். 90களின் மத்தியிலேயே அவர் ராபின் வில்லியம்ஸ் மற்றும் ஜேக் நிக்கோல்சன் போன்ற குறிப்பிடும்படியான நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார். செலினாவில் நடித்து மேலும் பிரபலமானார். இந்தப்படம் கொலை செய்யப்பட்ட பாடகி தீஜானாவின் வாழ்க்கை வரலாறு படமாகும். அடுத்தது திரில்லர் மற்றும் ஆக்ஷன் படங்களில் நடித்து புகழ்பெற்றார். அவற்றுள் குறிப்பிடும்படியானவை அனகோண்டா, யூ டர்ன், அவுட் ஆஃப் சைட், தி செல் ஆகியவை ஆகும். தி வெட்டிங் பிளானர் அவருக்கு மேலும் புகழ் சேர்த்த படமாகும். இது ஒரு ரொமாண்டிக் காமெடி படமாகும்.

1999ம் ஆண்டு அவரது முதல் பாப் ஆல்பத்தை வெளியிட்டார். உலகம் முழுவதும் அந்த ஆல்பம் 8 மில்லியன் காப்பிகள் விற்றது. அவரது இரண்டாவது ஆல்பம் ஜேலோ 2001ம் ஆண்டு வெளியானது. இது முதல் வாரத்திலேயே 2,70,000 காப்பிகளை விற்றது. ஜெனிஃபர் லோபஸ் முதலில் ஒரு ராப் பாடகர் சீன்கோம்ப்சுடனும், பின்னர் நடிகர் பென் அஃபிலீக்குடன் சேர்ந்து பணியாற்றினார்.

2003ம் ஆண்டு அஃபிலிக்குடன் கிகிலி படத்தில் நடித்தார். 2004ல் லோபஸ் பாடகர் மார்க் ஆண்டனியை திருமணம் செய்தார். 2008ம் ஆண்டு அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. தொடர்ந்து ஆல்பங்களில், படங்களிலும் பணிபுரிந்தவர் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற நிகழ்ச்சியில் பாடினார். திருமணம், குழந்தைபேறுக்கு சிறு இடைவெளிவிட்டு மீண்டும் நடிக்க வந்தார். அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஜட்ஜாகவும் இருந்துள்ளார். இதற்கிடையில் தம்பதிகள் விவாகரத்தும் பெற்றனர். தொடர்ந்து ஜெனிஃபர் லோபஸ் தனது துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி