தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  James Cameron : அவதார் நாயகன்! ஹாலிவுட்டின் வசூல் மன்னன்! ஜேம்ஸ் கேமரூன் பிறந்த தினம்!

James Cameron : அவதார் நாயகன்! ஹாலிவுட்டின் வசூல் மன்னன்! ஜேம்ஸ் கேமரூன் பிறந்த தினம்!

Priyadarshini R HT Tamil

Aug 16, 2023, 04:45 AM IST

google News
HBD James Cameron : உலகிலேயே அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை இப்படம் பிடித்தது. 2.7 பில்லியன் டாலர் வசூலை கொடுத்தது. சிறந்த இயக்குனருக்கான கோல்டன் குளோப் விருதை பெற்றது. பின்னர் கடந்தாண்டு அவதார் தி வே ஆஃப் வாட்டர் படத்தை இயக்கினார்.
HBD James Cameron : உலகிலேயே அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை இப்படம் பிடித்தது. 2.7 பில்லியன் டாலர் வசூலை கொடுத்தது. சிறந்த இயக்குனருக்கான கோல்டன் குளோப் விருதை பெற்றது. பின்னர் கடந்தாண்டு அவதார் தி வே ஆஃப் வாட்டர் படத்தை இயக்கினார்.

HBD James Cameron : உலகிலேயே அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை இப்படம் பிடித்தது. 2.7 பில்லியன் டாலர் வசூலை கொடுத்தது. சிறந்த இயக்குனருக்கான கோல்டன் குளோப் விருதை பெற்றது. பின்னர் கடந்தாண்டு அவதார் தி வே ஆஃப் வாட்டர் படத்தை இயக்கினார்.

ஜேம்ஸ் கேமரூன், 1954ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி கனடாவில் ஆண்டாரியோவில் உள்ள காபுஸ்காசிங்கில் பிறந்தார். கனடாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர். இவரது படங்கள் தொழில்நுட்பங்களுக்காகவும், பரந்த பார்வைக்காகவும், புதுமையான ஸ்பெஷல் எபெஃக்ட்களுக்காகவும் பாராட்டப்படுகிறார். 1997ம் ஆண்டு இவர் எடுத்த டைட்டானிக் படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் அகாடமி விருதுகள் வென்றார். 2009ம் ஆண்டு அவதார் படத்திற்கும் விருது பெற்றார்.

குழந்தையில் இவர் ஓவியம் கற்றார். பின்னர் அவர் டைட்டானிக்கில் அந்த ஓவியங்களை பயன்படுத்தினார். 1971ம் ஆண்டு இவரது குடும்பத்தினர் கலிஃபோர்னியாவுக்கு குடியேறினர். ஃபுல்லர்டான் கலிஃபோர்னியா மாநில பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படித்த பின்னர், கேமரூன் தொடர் வேலைகளை செய்தார். அதில் டிரக் டிரைவர், மெக்கானிக் ஆகியவையும் அடங்கும். 1977ம் ஆண்டு அவர் பார்த்த ஸ்டார் வார்ஸ் படங்கள் அவரை திரைப்படங்கள் எடுக்கும் ஆர்வத்தை தூண்டியது.

1980ம் ஆண்டு கேமரூன் புரொக்ஷ்ன் டிசைனராக பணியமர்த்தப்பட்டார். தொடர்ந்து வந்த ஆண்டில் பிரான்ஹா 2 – தி ஸ்பானிங் என்ற தனது முதல் திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படம் தோல்வியடைந்ததை அடுத்து, அவர் தனது சொந்த விஷயங்களை எழுதத்துவங்கினார். அது அவருக்கு 1984ம் ஆண்டு டெர்மினேட்டர் படத்தை எடுக்க ஊக்குவித்தது. அந்தப்படம் ஆக்ஷ்ன் திர்ல்லர் ஒரு ரோபோட் மனிதனை தாக்குவதை குறித்த படம். அது அர்னால்ட் ஸ்குவாஷ்னேகரை ஸ்டார் நடிகராகவும், கேமரூனை நல்ல திரைப்பட இயக்குனராகவும் ஆக்கியது.

தொர்ந்து உயர் தொழில்நுட்பம் மற்றும் அதிக பட்ஜெட் படங்களை இயக்கினார். 1986ம் ஆண்டு ஏலியன்ஸ், சிகவுர்னே வீவர் என்ற அறிவியல் திரில்லர் திரைப்படம், 1989ம் ஆண்டு தி அபிஸ் ஆகிய படங்களை இயக்கினார். நீரில் வாழும் ஏலியன்களை கடலில் நீந்தும் டைவர்கள் கண்டுபிடிப்பது போன்ற படம். இரண்டு படங்களுமே ஆஸ்கர் பெஸ்ட் விஷீவல் விருதுகளை வென்றது. கேமரூன் மீண்டும் அர்னால்ட் ஸ்குவாஷ்னேகருடன் சேர்ந்து டெர்மினினேட்டர் 2 எடுத்தார்.

பின்னர் தி ஜட்ஜ்மென்ட் டே (1991) மற்றும் ட்ர லைஸ் (1994), இயக்கினார். இந்தப்படம் ஜெம்மி லீ கர்டிஸ் நடிப்பில் உருவாயிருந்தது. 1992ம் ஆண்டு கேமரூன் சொந்த தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார். லைட்ஸ்ட்ராம் எண்டர்டெயின்மென்ட், அதே ஆண்டு அவர் டிஜிட்டல் நிறுவனத்தையும் துவக்கினார்.

இவரது படங்கள் வசூலில் கலக்கினாலும், பெரும்பாலான ரசிகர்கள் இவரது படம் விஷீவல் எஃபெக்ட்சை தான் அதிகம் நம்பி இருந்தது என்று கூறினர். இவர் எழுதி, இயக்கி, தயாரிப்பில் உதவிய டைட்டானிக் படம் இதுவரை எடுக்கப்பட்ட படங்களிலே அதிகம் விலையுயர்ந்த படமாக இருந்தது. பாக்ஸ் ஆஃபிஸ் ரெக்கார்ட்களையும் உடைத்து, பென் ஹவுர், (1959), அதிகபட்சமாக 11 ஆஸ்கர் விருதுகளையும் வென்று சாதனை படைத்தது. காதல் கதையில் ஸ்பெஷல் எபெஃக்ட்களை நன்றாக சேர்த்து எடுக்கப்பட்ட படம். பணமில்லாம கலைஞர் (லியாணர்டோ டி காப்பிரியோ) மற்றும் விருப்பமின்றி திருமண நிச்சயம் செய்த முதல் கிளாஸ் பயணி (கேட் வின்ஸ்லெட்) இருவருக்கும் இடையிலான காதல் 2.1 பில்லியன் டாலர் வருமானத்தை கொடுத்த அமெரிக்காவிலே உச்சத்தில் நிற்கும் ஒரே படம். உலகத்திலே அதிகம் வசூல் கொடுத்த படம் என்ற பட்டத்தையும் பெற்றது.

டைட்டானிக் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கேமரூன் திரைப்படங்களுக்கு ஒரு இடைவெளிவிட்டார். இவர் (2000-01) டார்க் ஏஞ்சல் என்ற சயின்ஸ் ஃபிக்ஷன் தொலைக்காட்சி தொடரை இயக்கினார். இது ஒரு மரபணு மாற்றப்பட்ட பெண் போராளியை பற்றிய கதை சில ஆவணப்படங்களையும் இயக்கினார். எக்ஸ்பெனிஷன் – பிஸ்மார்க் (2002), இயக்குனர் மற்றும் அவரது குழுவையும், ஆழ்ந்த அட்லாண்டிக் கடலுக்குள் அழைத்துச் சென்றது. போர்க்கப்பல் பிஸ்மார்க்கை அவர்கள் படம் பிடித்தனர். இந்த டாக்குமெண்டரிக்கு அவர் எம்மி விருது வாங்கினார்.

2009ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் அவதார் மூலம் மீண்டும் திரைப்படம் எடுக்க துவங்கினார். இது ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் திரில்லர் படம். இந்தப்படமும் ஸ்பெஷல் எஃபெக்ட்களுக்காக பாராட்டப்பட்டது. உலகிலேயே அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை இப்படம் பிடித்தது. 2.7 பில்லியன் டாலர் வசூலை கொடுத்தது. சிறந்த இயக்குனருக்கான கோல்டன் குளோப் விருதை பெற்றது. பின்னர் கடந்தாண்டு அவதார் தி வே ஆஃப் வாட்டர் படத்தை இயக்கினார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை