தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Deva : கானா பாடல்களின் காதலர்! தேனிசைத்தென்றல் தேவா பிறந்த தினம்!

HBD Deva : கானா பாடல்களின் காதலர்! தேனிசைத்தென்றல் தேவா பிறந்த தினம்!

Priyadarshini R HT Tamil

Nov 20, 2023, 06:25 AM IST

google News
HBD Deva : கானா பாடல்களின் காதலர்! தேனிசைத்தென்றல் தேவா பிறந்த தினம்!
HBD Deva : கானா பாடல்களின் காதலர்! தேனிசைத்தென்றல் தேவா பிறந்த தினம்!

HBD Deva : கானா பாடல்களின் காதலர்! தேனிசைத்தென்றல் தேவா பிறந்த தினம்!

தேவநேசன் சொக்கலிங்கம், நமக்கெல்லாம் தேனிசையை அள்ளித்தந்த தேவாவின் முழு பெயர். தேனிசை தென்றல் தேவாவின் கானா பாடல்களாலும், இசையாலும் 80 மற்றும் 90களின் தமிழ் சினிமாக்கள் சிறந்து விளங்கியது என்றால் அது மிகையல்ல. தமிழ் சினிமாவில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைத்து பிரபலமானவர் தேனிசைத் தென்றல் தேவா.

அதிகமாக தமிழ் சினிமாவிற்கு இவர் இசையமைத்திருந்தாலும், கன்னடம், மலையாளம், தெலுங்கு என அனைத்து தென்னிந்திய மொழிகளுக்கும் இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட இவர் 36 ஆண்டுகள் சினிமாவிற்கு இசையமைத்துள்ளார். 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

சொக்கலிங்கம் மற்றும் கிருஷ்ணவேணி இவரது பெற்றோர். குழந்தை பருவத்தில் இருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்டவர். சந்திரபோசுடன் இணைந்து பல்வேறு மேடைகளில் இசை கச்சேரிகளை நடத்தியுள்ளார். ஜே.பி. கிருஷ்ணாவிடம் கர்நாடக சங்கீதம் கற்றார். பின்னர் தன்ராஜிடமும் இசையை கற்றார். டிரினிட்டி கல்லூரியில் மேற்கத்திய இசையை கற்றார். இவரது மகன் ஸ்ரீகாந்த் தேவாவும் இசையமைப்பாளர். இவரது உறவினர் ஜெய் சினிமா நடிகர். இவரது சகோதரர்கள் சபேஷ்-முரளியும் இசையமைப்பாளர்கள்.

தூர்தர்ஷன் பொதிகையில் இவர் பணியாற்றிவிட்டு, பின்னர் சினிமாவுக்குள் நுழைந்தார். தேவாவின் சிறப்பே அவரது கானா பாடல்கள்தான். வடசென்னையின் புகழ்பெற்ற கானா பாடல்களை அதிகளவில் தமிழ் சினிமாவில் வைத்து கானா பாடல்களை வெளியுலகம் அறியச்செய்தவர். மேலும், இவர் விஜயின் ஆரம்ப கால படங்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்தவர். விஜய்க்கு மட்டுமின்றி அஜித்தின் ஆரம்ப கால சினிமாக்களுக்கும் இசையமைத்து அவருக்கும் நல்ல பாடல்களை அமைத்து கொடுத்தவர்.

இவர் மனசுக்கேத்த மகராசா, வைகாசி பொறந்தாச்சு, அண்ணாமலை, பாட்ஷா, ஆசை, காதல் கோட்டை, நேருக்கு நேர், நினைத்தேன் வந்தாய், ப்ரியமுடன், வாலி, குஷி ஆகிய படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். இதன் மூலம் அவர்களின் பிரபலத்துக்கு தேவாவும் காரணமாக இருந்துள்ளார்.

தமிழ்க அரசின் கலைமாமணி விருது பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான மாநில அரசின் விருது பெற்றவர். இதுமட்டுமின்றி பல விருதுகளுக்கும் சொந்தக்காரர். பல்வேறு பாடல்களால் நம்முடன் கலந்திருக்கும் தேவாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் அவர் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று வாழ வேண்டும் ஹெச்.டி.தமிழ் வாழ்த்துகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி