தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Vishal: ‘லட்சம் வாங்கினது தணிக்கைக்குழு ஆட்கள் அல்ல; விஷால விசாரிக்கணும்’ - முன்னாள் உறுப்பினர் பகீர்!

Actor Vishal: ‘லட்சம் வாங்கினது தணிக்கைக்குழு ஆட்கள் அல்ல; விஷால விசாரிக்கணும்’ - முன்னாள் உறுப்பினர் பகீர்!

Sep 29, 2023, 04:07 PM IST

google News
லட்சம் வாங்கியவர்கள் தணிக்கைக்குழுவில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அல்ல. ஆகையால் பணம் கொடுக்கப்பட்ட தரப்பிடமும் விசாரணை நடத்த வேண்டும்
லட்சம் வாங்கியவர்கள் தணிக்கைக்குழுவில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அல்ல. ஆகையால் பணம் கொடுக்கப்பட்ட தரப்பிடமும் விசாரணை நடத்த வேண்டும்

லட்சம் வாங்கியவர்கள் தணிக்கைக்குழுவில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அல்ல. ஆகையால் பணம் கொடுக்கப்பட்ட தரப்பிடமும் விசாரணை நடத்த வேண்டும்

நடிகர்கள் விஷால், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரது நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸான திரைப்படம், மார்க் ஆண்டனி.

மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்தப்படத்தைஹிந்தியில் வெளியிட அங்குள்ள தணிக்கை குழுவுக்கு 6.5 லட்சம் ரூபாயை இரண்டு தவணைகளாக லஞ்சமாக கொடுத்ததாக விஷால் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

மேலும் இந்த லஞ்சப்புகார் தொடர்பாக, மகாராஷ்டிர முதலமைச்சர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இதற்கு பதில் கொடுத்த மத்திய தகவல் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகம், “ விஷாக்கு நடந்தது மிகவும் துருதிஷ்டவசமானது. ஊழலை இந்த அரசு பொறுத்துக்கொள்ளாது. இதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்தான விசாரணையை மேற்கொள்ள, மூத்த அதிகாரி மும்பைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்” என்று குறிப்பிட்டு இருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து, மத்திய தகவல் ஒளிப்பரப்புத்துறையின் முன்னாள் உறுப்பினரான இருந்த அசோக் பண்டிட், “ வெள்ளித்திரையில் லஞ்சம் வாங்குவதை காட்சிப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் அது முடியாத காரியம்.. இதை ஜீரணிக்கவே முடியவில்லை. குறிப்பாக அரசு அலுவலகங்களில் இது நடந்து இருப்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. லட்சம் வாங்கியவர்கள் தணிக்கைக்குழுவில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அல்ல. ஆகையால் பணம் கொடுக்கப்பட்ட தரப்பிடமும் விசாரணை நடத்த வேண்டும். சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்” என்று பேசியிருக்கிறார். 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை