OTT vs Theatre: ஐபிஎல் முதல் உலக அழகி போட்டி வரை; கமர்ஷியல் பக்கம் திரும்பும் தியேட்டர்கள்? - பன்னீர்செல்வம் ஐடியா!
Jul 11, 2023, 03:46 PM IST
அதேபோல திரையரங்குகளில் திரைப்படங்களை மட்டுமே காட்சிப்படுத்த வேண்டும் என்ற சட்டத்தை மாற்றி அதில் கொஞ்சம் கமர்சியலை புகுத்த அனுமதி கேட்பதே இதில் எங்களது முக்கியமான கோரிக்கையாக இருக்கிறது.
அவர் பேசும் போது, “ திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டமானது சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் திரையரங்கிற்கு வரும் மக்களின் எண்ணிக்கையானது குறைந்து வருவது குறித்து நாங்கள் விவாதித்தோம். ஓடிடியில் திரைப்படங்கள் 4 வாரத்தில் திரையிடப்படுவதாலும், அதனுடைய பப்ளிசிட்டியை ஒரே நாளில் நடத்துவதாலும் திரையரங்கிற்கு வரும் மக்களின் எண்ணிக்கையானது குறைவதாக சங்க உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தார்கள்.
அதனால் வரும் காலத்தில் ஒரு திரைப்படத்தை எட்டு வாரத்திற்குப் பிறகு ஓடிடிக்கு கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். அதே போல படத்தின் விளம்பரங்களை நான்கு வாரத்திற்கு பிறகு தான் வெளியிட வேண்டும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்கிறோம். இது குறித்து நாங்கள் தயாரிப்பாளர் சங்கத்திடம் கலந்து ஆலோசித்து ஒரு முடிவை எடுப்போம். அதற்கு ஒருவேளை அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கையை நாங்கள் எடுப்போம்.
அதேபோல ஓடிடி படங்களின் விலை அவை திரையரங்கில் வெளியிடப்படுவதை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. ஆகையால் அந்த வசூலில் கிடைக்கக்கூடிய 10 சதவீத ராயல்டி தொகையை திரையரங்க உரிமையாளர்களிடம் அவர்கள் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நாங்கள் எடுத்து வைக்க இருக்கிறோம். மேலும் அரசாங்கத்திடம் நாங்கள் எங்கள் திரையரங்கத்தின் கட்டணத்தை உயர்த்தி கேட்டிருக்கிறோம்.
அதேபோல திரையரங்குகளில் திரைப்படங்களை மட்டுமே காட்சிப்படுத்த வேண்டும் என்ற சட்டத்தை மாற்றி அதில் கொஞ்சம் கமர்சியலை புகுத்த அனுமதி கேட்பதே இதில் எங்களது முக்கியமான கோரிக்கையாக இருக்கிறது. அப்படி அது அமல்படுத்தப்படும் பொழுது திரையரங்குகளை வேறு நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தி நாங்கள் அதில் வருமானம் ஈட்ட முடியும்.
திரைப்படங்களை மட்டுமே வெளியிடுவதால் எங்களுக்கு மிகவும் நஷ்டம் ஏற்படுகிறது. நல்ல படங்கள் வருவது குறைந்துவிட்டது. அதே போல மிகவும் பிரபலமான இயக்குனர்கள் பெரிய நடிகர்களுடன் மட்டுமே சேராமல் சிறிய நடிகர்களுடன் சேர்ந்து அதிகப்படியான படங்களை கொடுத்தால் அந்த படங்கள் வெற்றி பெறும். அப்படி வெற்றி பெறும் பட்சத்தில் நாங்களும் நன்றாக இருப்போம்.
திரையரங்குகளில் கமர்ஷியலை புகுத்த அனுமதி கிடைக்குமாயின் தற்போது ஐபிஎல் மேட்ச் நடைபெறுகிறது என்றால் அதனை நாங்கள் திரையரங்கில் போடுவோம். அதனை பார்ப்பதற்கு நிறைய ரசிகர்கள் வருவார்கள். வேர்ல்ட் கப் தொடர்பான போட்டிகளையும் நாங்கள் ஒளிபரப்பு திட்டமிட்டு இருக்கிறோம். அதே போல உலக அழகி போட்டிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளையும் திரையிடுவோம்” என்று பேசினார்.
டாபிக்ஸ்