தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  "அமரன் படத்தில் சர்ச்சைக் காட்சிகள்.. கொச்சைப்படுத்தும் காட்சிகளை முதலில் நீக்குங்கள்!" கொதித்த வீரர்கள்

"அமரன் படத்தில் சர்ச்சைக் காட்சிகள்.. கொச்சைப்படுத்தும் காட்சிகளை முதலில் நீக்குங்கள்!" கொதித்த வீரர்கள்

Nov 05, 2024, 11:46 AM IST

google News
அமரன் திரைப்படத்தில் சிஆர்பிஎஃப் வீர்ரகளின் தியாகத்தை அவமதிக்கும் வகையில் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என தமிழ்நாடு முன்னாள் சிஆர்பிஎஃப் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அமரன் திரைப்படத்தில் சிஆர்பிஎஃப் வீர்ரகளின் தியாகத்தை அவமதிக்கும் வகையில் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என தமிழ்நாடு முன்னாள் சிஆர்பிஎஃப் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அமரன் திரைப்படத்தில் சிஆர்பிஎஃப் வீர்ரகளின் தியாகத்தை அவமதிக்கும் வகையில் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என தமிழ்நாடு முன்னாள் சிஆர்பிஎஃப் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ராணுவத்தில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் திரைப்படம் தான் அமரன். முகுந்த்தாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் நிலையில், அவரது மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவி நடித்து இருக்கிறார். ராஜ் குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரித்தார்.

வரவேற்பும் எதிர்ப்பும்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது அந்தப் படம் சில எதிர்மறை கருத்துகளை சந்தித்து வருகிறது. முன்னதாக மேஜர் முகுந்த் ஒரு பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற தகவலை ஏன் படத்தில் குறிப்பிடவில்லை என பாஜகவைச் சேர்ந்த நடிகை மதுவந்தி கேள்வி எழுப்பினார்.

மிகவும் இழிவானது

இந்நிலையில், தென்காசி மாவட்டத்தை தலைமை இடமாக கொண்ட தமிழ்நாடு முன்னாள் மத்திய ஆயுதம் ஏந்திய போலீஸ் படை நலன் மற்றும் மறுவாழ்வு சங்கம் அமரன் படத்திற்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ படத்தில் குறிப்பிட்ட ஒரு காட்சிகளை பார்த்து CRPF வீரர்கள் வேதனை, அதிர்ச்சியும், ஆவேசம் ஆகியவற்றால் மூழ்கியுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் அதிகாரியை கொலை செய்ய நடத்தப்படும் தாக்குதல் காட்சிகளில் எவ்வித எதிர்வினையும் வழங்காமல் CRPF வீரர்கள் படுகொலை செய்யப்படுவது மிகவும் இழிவானதாக இருக்கிறது.

மரியாதை சிதைகிறது

CRPF வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் கடும் அளவில் அவமதிப்பதாகவும், அவர்களின் புகழ்மிக்க பணிகளை மரியாதை இன்றி சிதைக்கின்றதாகவும் உணர்த்துகிறது. படைப்பு, சுதந்திரம் என்ற பெயரில் கற்பனை கொண்டு உருவாக்கி எம்மீது இழிவு கூறும் ஒரு காட்சியை உருவாக்கி மண்ணின் மைந்தர்கள், நாங்கள் ரத்தத்தை சிந்தி நாட்டை காக்கும் போது அதை கேலியாக படம் பிடிப்பது நியாயமா?

நம் 44 ஆர்ஆர் வீரர்கள் சண்டையிட்டு வீர மரணம் அடைவதை காட்டி அதே நேரத்தில் CRPF வீரர்கள் எந்த எதிர்ப்புமின்றி கொல்லப்படுவதாக காட்டுவது அவர்கள் தியாகத்தை முற்றிலும் கௌரவிக்காமல் கொச்சைப்படுத்துவது மட்டுமே உணர்த்துகிறது.

சலுகைகள் இன்றிய போராட்டம்

நாட்டின் பல்வேறு மூளைகளில் இருந்து எந்த பாதுகாப்பும், சலுகைகள் இன்றி போராடி உயிர் தியாகம் செய்த எண்ணற்ற CRPF வீரர்களின் தியாகத்தை இந்த ஒரு காட்சி முற்றிலுமாக அழிக்கக் கூடியதாக உள்ளது. இந்த படத்தில் இச்செயலில் பொதுமக்களின் மனதில் CRPF வீரர்களின் மதிப்பை சிதைக்கும் வகையில் உள்ளதால் TN CAPF WARA அமைப்பு தனது கடும் கண்டனத்தை ‘அமரன்’ படக் குழுவிற்கு தெரிவிக்கிறது. எங்கள் வீரர்களின் தியாகம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளனர். இதை அமரன் படக்குழு எவ்வாறு எடுத்துக் கொள்ளும் சிஆர்பிஎஃப் சங்கம் கூறியது போன்று காட்சிகளை நீக்கம் செய்யுமா அல்லது மாற்றி அமைக்குமா அல்லது, அவற்றை கடந்து செல்லுமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி