Bayilvan Ranganathan: ‘பாலியல் கல்வி கட்டாயம்’ -பயில்வான் ரங்கநாதன் விருப்பம்!
Dec 31, 2022, 06:15 AM IST
Bayilvan Ranganathan Speech: ‘குழந்தைகளுக்கு போனை கொடுங்கள். மற்ற நேரத்தில் போனை கொடுக்காதீங்கள். இது தான் நான் சொல்லும் பாடம்’ -பயில்வான் ரங்கநாதன்!
ராஜேஷ் என்கிற இளம் இயக்குனர் அழைப்பில் திரைப்பட விழா ஒன்றில் பங்கேற்ற பயில்வான் ரங்கநாதன் பேசிய பேச்சு, சமீபத்திய வைரலாகி வருகிறது. எப்படி என்ன பேசினார் பயில்வான்? இதோ அவரது பேச்சு:
‘‘என்னுடைய விமர்சனத்தை பாராட்டிய தொகுப்பாளருக்கு நன்றி. ஏன், என்றால் எனக்கு நிறைய எதிரிகள் இருக்கிறார்கள். நான் சினிமாவில் நடித்ததை விட, யூடியூப்பில் தான் அதிகம் போயிருக்கிறேன். சிலர் கவனிப்பது, அதில் 100ல் 2 சதவீத்தை தான் கவனிக்கிறார்கள்.
இயக்குனர் ராஜேஷ் எனக்கு யாருனே தெரியாது. நான் ஒரு படம் எடுத்திருக்கிறேன், உங்களுக்கு அழைப்பிதழ் அனுப்புகிறேன், நீங்கள் வாருங்கள் என்று என்னை அழைத்தார். வாட்ஸ்ஆப்பில் அழைப்பிதழை அனுப்புங்கள், நான் பேசிவிடுகிறேன் என்றேன்.
‘இல்லை இல்லை நீங்கள் கண்டிப்பா வர வேண்டும்’ என்று அவர் கூறினார். நான் பேச மாட்டேன் என்று கூறினேன். ‘பேசும் நிகழ்ச்சி எதுவும் இல்லை சார்’ என்றார். நேரில் நாங்கள் பார்க்கவே இல்லை.
தொடர்ந்து இரு நாட்களாக நினைவூட்டிக் கொண்டே இருந்தார். இது என்னடா டார்ச்சரா இருக்குது என்று நானும் வந்தேன். என்னுடைய மரியாதை எனக்கு எப்போது தெரிய ஆரம்பித்தது என்றால், கமெண்ட்ஸ் மூலமாக தான் தெரிய ஆரம்பித்தது.
என்னுடைய விமர்சனத்தை எந்த அளவிற்கு நேசிக்கிறார்கள் என்பதற்கு, ராஜேஷ் சாட்சி. அவருக்கு நான் தலை வணங்குகிறேன். அவருக்கு என்னுடைய விமர்சனம் பிடித்திருக்கிறது. மற்றதை பற்றி எனக்கு கவலையில்லை.
இந்த படத்தின் கதாநாயகன், வில்லனாக நடித்தவர். அவரை தேர்வு செய்ததில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த படத்திற்கு அப்படி ஒரு கதாநாயகன் தான் தேவை. சூழ்நிலை தான் ஒரு மனிதனை கெடுக்கிறது. என்னை விட என் பேரன், பேத்திகள் ஐக்யூ அதிகமாக இருக்கிறார்கள்.
இன்னும் சொல்ல வேண்டுமானால், என் ஐந்து வயது பேரன், என்னை விட மொபைல் போனில் உள்ளதை அதிகம் கற்றுக்கொள்கிறான். இப்போது உள்ள குழந்தைகளுக்கு எதுவும் சொல்லித்தர வேண்டியது இல்லை.
இதை விட இன்னும் முன்னோக்கி தான் உலகம் போகும். ஏன் மறைக்கனும்? பாலியல் கல்வி தேவை என்று சொல்கிறார்கள். இல்லை என்று மறுக்க முடியுமா? சுப்ரிம் கோர்ட் தீர்ப்பே வந்துவிட்டது. தேவைப்படும் நேரத்தில் மட்டும் குழந்தைகளுக்கு போனை கொடுங்கள். மற்ற நேரத்தில் போனை கொடுக்காதீங்கள். இது தான் நான் சொல்லும் பாடம்,’’
என்று பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.
டாபிக்ஸ்