தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ethirneechal Serial: கிழிய போகும் குணசேகரனின் முகத்திரை.. ஜீவானந்தத்திடம் கிடைத்த தர்ஷினி!

Ethirneechal Serial: கிழிய போகும் குணசேகரனின் முகத்திரை.. ஜீவானந்தத்திடம் கிடைத்த தர்ஷினி!

Aarthi Balaji HT Tamil

Mar 08, 2024, 02:19 PM IST

google News
எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ காட்சி ஒன்று வெளியா உள்ளது.
எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ காட்சி ஒன்று வெளியா உள்ளது.

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ காட்சி ஒன்று வெளியா உள்ளது.

Ethirneechal Serial Today Promo: வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சீரியல் தான். அதிலும் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் என்றால் அவ்வளவு இஷ்டம். காலை டிவி ஆன் செய்தால் இரவு வரை சன் தொலைக்காட்சியில் சீரியல் தான் ஓடும்.

அதிலும் பகல் சீரியல்களை விட இரவு சீரியல்களுக்கு தான் மவுசு அதிகம். அப்படி மக்களின் மனதில் இடம் பிடித்த சீரியல் தான், எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை கிடைத்து வந்தது. இரவு 9 மணி வந்தால் உடனே பெண்கள் கண்டிப்பாக டிவி முன்பு அமர்ந்து இந்த சீரியல் பார்க்க அமர்ந்துவிடுகிறார்கள்.

அதற்கு காரணம், அந்த சீரியலில் இடம் பெற்ற குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து. ஆம், அவரது கரடுமுரடான வில்லனிசம் ஏராளமானோரை இந்த சீரியலுக்கு அழைத்து வந்தது.

ஆனால் கடந்த வருடம் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட, சீரியலுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. சீரியல் கதை முழுவதுமாக மாறியது. அவர் பாத்திரத்தை நிரப்ப முடியாமல் போனது சீரியலின் டிஆர்பியில் கடும் அடியை சந்தித்து இருக்கிறது.

இதனிடையே தற்போது எதிர்நீச்சல் சீரியலில், அந்த வீட்டு பெண் தர்ஷினியை யாரோ கடத்தி சென்றுவிட்டார்கள். அது தான் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் தற்போது எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ காட்சி ஒன்று வெளியா உள்ளது.

அதில் தர்ஷினியை காரில் அழைத்து வரும் ஜீவானந்தம், செக்போஸ்டில் வைத்து போலீஸ் இருப்பதை பார்க்கிறார். அவர்கள் உன்னை அம்மாவிடம் சேர்த்துருவாங்க என சொல்லி கிளம்ப பார்க்கிறார். அப்போது அவரை தப்பிக்க விட்ட போலீஸ் போன் செய்து அந்த பொண்ணு உன்னிடம் இருக்குற வரை தான் நீங்க பாதுகாப்பாக இருக்க முடியும் என சொல்கிறார்.

மற்றொரு பக்கம் போலீசிடம் குணசேகரன், எனக்கு என்ன துரோகம் செய்து இருந்தாலும் இவர்களும் என் குடும்பத்தை சேர்ந்தவங்க தான் என சொல்லி ஜனனியை விடுதலை செய்ய சொல்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி