Ethirneechal Serial: வீட்டிற்கு வந்த தர்ஷினி.. குணசேகரனின் செயலை கண்டு பிடிப்பாரா ஜனனி!
Mar 15, 2024, 04:30 PM IST
குணசேகரன் தன் மகளை இவ்வளவு கொடுமை செய்து இருக்கும் தாய் ஈஸ்வரி இனிமேல் என் மகளிடம் நெருங்க கூடாது என கட்டளையிடுகிறார்.
Ethirneechal Promo: வீட்டில் நாள் முழுவதும் வேலை பார்க்கும் பெண்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு என்னவென்றால் அது சீரியல் மட்டுமே. அதிலும் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் என்றால் அவ்வளவு இஷ்டம். காலை டிவி ஆன் செய்தால் இரவு வரை சன் தொலைக்காட்சியில் சீரியல் தான் ஓடும்.
அதிலும் பகல் சீரியல்களை விட இரவு சீரியல்களுக்கு தான் மவுசு அதிகம். அப்படி மக்களின் மனதில் இடம் பிடித்த சீரியல் தான், எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை கிடைத்து வந்தது.
இரவு 9 : 00 மணி ஆகிவிட்டால் உடனே வீட்டில் இருக்கும் பெண்கள் கண்டிப்பாக தொலைக்காட்சி முன்பு அமர்ந்துவிடுவார்கள். எதிர்நீச்சல் சீரியல் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.
அதற்கு காரணமே எதிர்நீச்சல் சீரியலில் இடம் பெற்று இருக்கும் குணசேகரன் கதாபாத்திரம் தான். அதில் நடித்த வந்தவர் தான் மறைந்த மாரிமுத்து. அவரது கரடுமுரடான வில்லனிசம், டயலாக் பேசும் குணம் ஏராளமானோரை இந்த சீரியலுக்கு அழைத்து வந்தது.
ஆனால் கடந்த வருடம் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட, சீரியலுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. சீரியல் கதை முழுவதுமாக மாறியது. அவர் பாத்திரத்தை நிரப்ப முடியாமல் போனது சீரியலின் டி. ஆர். பியில் கடும் அடியை சந்தித்து இருக்கிறது.
இதனிடையே கடந்த சில நாட்களாக டி. ஆர். பியில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், குணசேகரனின் மகள் தர்ஷினி கடத்தல் தான். கிட்டதட்ட இரண்டு மாதங்களாக இது தான் சீரியலில் நடக்கிறது.
இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோட்டிற்கான பரபரப்பான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது.
அதில், குணசேகரன் தன் மகளை இவ்வளவு கொடுமை செய்து இருக்கும் தாய் ஈஸ்வரி இனிமேல் என் மகளிடம் நெருங்க கூடாது என கட்டளையிடுகிறார். உடனே கதீர், எங்க அண்ணி பற்றி எங்களுக்கு தெரியும். அவர் இது போன்று செய்து இருக்க மாட்டார். இவர் சொல்வதை போல் எதுவுமே இல்லை என சொல்கிறார். உடனே கடுப்பான குணசேகரன் தன் தம்பியை கோபமாக பார்க்கிறார்.
மறுபக்கம் மருத்துவமனைக்கு சென்று இருக்கும் ஜனனி, கதீரிடம், ஈஸ்வரிக்கு ஜாமீன் கிடைத்து இருப்பது பற்றி சொல்கிறார். உடனே அதிர்ச்சியில் வெளியே வந்து குணசேகரன், என்னது ஜாமீன் கிடைத்துவிட்டதா? என கேட்கிறார். மருத்துவமனையில் இருந்து தர்ஷினி வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
அவரை அனைவரும் ஆசையாக சென்று கட்டிப்பிடித்து பார்க்கிறார்கள். ஜனனி உடனே தர்ஷினியை மருத்துவமனை அழைத்து செல்ல வேண்டும் என சொல்கிறார். ஆனால் இதை எல்லாம் காதில் வாங்காமல் விசாலாட்சி என் பேத்தியை யாரும் தொட கூடாது, வர வேண்டாம் என்றார். அத்துடன் ப்ரோமோ முடிந்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
You Tube: https://www.youtube.com/@httamil
Google News : https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்